Thursday, 30 March 2017

:*ஏமாறாதே!!!! ஏமாற்றாதே!!!!*📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🕋 _பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்_🕋


🛡உலகில் மனிதன் மனிதனிடம் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை தான்.

🛡 *நம்பகத் தன்மையின் மூலமே பிறரை நாம் நண்பராக, நெருக்கமுள்ளவராக ஆக்கிக் கொள்ள முடியும்.*

🛡 *ஆனால் இன்நன்னடத்தை இக்கழி காலத்தில் எடுபட்டுப் போனது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும்.*

🛡நாளை  ஏப்ரல் மாதம் 1ம் தேதி உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும் செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள்.

🛡பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

💈 *ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி பிறரை ஏமாற்றினால் நாளை மறுமையில் சுவனம் செல்வது கூட கேள்விக்குறியாக மாறிவிடும்.*

💈🔹 ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது  மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது (உடல்நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். *அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி) அவர்கள், ”முன்பு நான் உம்மிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கிறேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்”* என்றார்கள். அப்போது உபைதுல்லாஹ், ”இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?” என்று கேட்டார். மஅகில் (ரலி) அவர்கள், ”நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

🛡 *இவ்வுலகில் அனைத்திலும் மோசடி, ஏமாற்று, பித்தலாட்டம் என பல்கிப் பெருகி இருக்கிறது. கல்வியில், காதல் எனும் கலவியில், குடும்பத்தில், சொத்து சுகங்களில், நட்பில், அரசியலில், ஆன்மீகத்தில், மருத்துவத்தில், உணவகத்தில், வணிகத்தில் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.*

🛡இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

☝🏻 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✔ பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

👆 *இன்னும் இது போல் பல ஹதீஸ்&வசனங்களை நம்மால் காண முடியும்*

☝🏻 *அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✔  பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான்.

(நூல்: புகாரி 10, 6484)

✔✔✔ *வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸிற்குக் கட்டுப்பட்டு உண்மை விசுவாசிகளாக அவனுக்கு பிடித்தமானவர்களா வாழ அருள் புரிவானாக!!!!!*

🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡

*http://makkalmedia1.blogspot.in*


*பேஸ்புக்கில் எம்மை தொடர*​ 👇

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Unit of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment