Thursday 30 March 2017

சகுனம் ஓர் இணைவைப்பு பகுதி-1



📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🕋 _பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்_🕋

😰இன்று இஸ்லாமியர்களிடம் நுழைத்துள்ள சில பாவமான முட்டாள்தனமான அனாச்சாரங்களுள் ஒன்று சகுனம் பார்ப்பது.

✅இந்த சகுனத்தை பொருத்தவரை மார்க்கத்தின் நிலைபாடு மூடநம்பிக்கை மற்றும் இணைவைப்பு என்னும் பாவமாகும்.

🤑நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.

❓எப்படியெல்லாம் சகுனம் பார்க்கிறார்கள்❓

❄பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன், குருடு போன்றோர் குறுக்கிட்டால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.

❄இரவு நேரங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி  ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள்.

❄சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விஷயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள்.

❄சிலரது வீட்டில் பகல் நேரங்களில் தொடராக காகம் கத்தினால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல்.

❄வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால் பரக்கத்தும் சேரந்து பறந்து போய்விடும் என்று நினைத்தல்!

❄சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பரகத் கொட்டும் என எண்ணுதல்!

❄வீட்டில் குளவி கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்று நம்புதல்! அந்த குளவியின் கூடு நீளமாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் வட்டமாக இருந்தால் பெண் குழந்தை என்றும் நம்புதல்!

❄வீட்டிலோ தொழில் நிறுவனங்களிலோ அசோக மரம் நட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல்.

❄சிலர் சில இலக்கங்களை(13,786) ராசியான இலக்கங்களாகக் கருதுதல்.


⚠குறிப்பு :
786க்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை

❌இப்படி நாட்டிற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுன முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம் சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.

📒❌பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல்.

🤔உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து செய்த திருமணங்கள் எவ்வளளோ தோல்வியில் முடித்துள்ளதை சிந்திக்க வேண்டாமா❓

 🤔தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்த திருமணங்கள் மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள்❓

☄இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுனம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிப்பட்ட சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.

🤔இது இப்படியிருக்க சடங்கு சம்பிரதாயம் சகுனம் பார்க்காமல் திருமணம் செய்து தம்பதியினராக நன்றாக வாழ்பவர்களுக்கு இந்த சடங்கு சமபிரதாயங்கள் பதில் கூறுமா❓

*சகுனம் பற்றிய சட்டம்:*

📘 *சகுனத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.‘சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும்’ என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள்.*
*(நூல்: திர்மிதி)*

❄❄ *தொடரும்* ❄❄

*http://makkalmedia1.blogspot.in*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Unit of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment