Tuesday 21 June 2016

நஃபிலான நோன்பிற்கு எப்பொழுது நிய்யத் செய்ய வேண்டும்..🌷🌷

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🌷🌷நஃபிலான நோன்பிற்கு எப்பொழுது நிய்யத் செய்ய வேண்டும்..🌷🌷

2124» وحدثنا أبو كامل فضيل بن حسين حدثنا عبد الواحد بن زياد حدثنا طلحة بن يحيى بن عبيد الله حدثتني عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين- رضي الله عنها- قالت قال لي رسول الله صلى الله عليه وسلم ذات يوم: ((يا عائشة هل عندكم شيء)). قالت فقلت يا رسول الله ما عندنا شيء. قال: ((فإني صائم)). قالت فخرج رسول الله صلى الله عليه وسلم فأهديت لنا هدية- أو جاءنا زور- قالت- فلما رجع رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أهديت لنا هدية- أو جاءنا زور- وقد خبأت لك شيئا. قال: ((ما هو)). قلت حيس. قال: ((هاتيه)). فجئت به فأكل ثم قال: ((قد كنت أصبحت صائما)). قال طلحة فحدثت مجاهدا بهذا الحديث فقال ذاك بمنزلة الرجل يخرج الصدقة من ماله فإن شاء أمضاها وإن شاء أمسكها.

📓 مسلم :2124

🌷 2124. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் (வந்து), ”ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ”அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை” என்றேன். உடனே ”அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னர் ”எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது” (அல்லது ”எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்”). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது, நான் ”அல்லாஹ்வின் தூதரே! ”நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது” (அல்லது ”நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்”). (அந்த அன்பளிப்பிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்துவைத்துள்ளேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ”என்ன அது?” என்று கேட்டார்கள். நான் ”(பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்) ”ஹைஸ்” எனும் பலகாரம்” என்று சொன்னேன். ”அதைக் கொண்டு வா” என்று அவர்கள் சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு ”நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், (எடுத்து வைத்த) அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்” என்று கூறினார்கள்.


📓 நூல்:ஸஹீஹ் முஸ்லிம்:2124

2090 حدثنا قتيبة بن سعيد حدثنا حاتم- يعني ابن إسماعيل- عن يزيد بن أبي عبيد عن سلمة بن الأكوع رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم رجلا من أسلم يوم عاشوراء فأمره أن يؤذن في الناس: ((من كان لم يصم فليصم ومن كان أكل فليتم صيامه إلى الليل)).
: مسلم:2090

2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று ”அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ”(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்” என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்..

📓 நூல்:முஸ்லிம்:2090

ஆக மேற்கூறிய ஹதீஸ்களின் மூலம் நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம் ...

          நஃபிலான நோன்புகளுக்கு நிய்யத் என்பது இரவிலேயே (தஃயீன்)செய்யப்பட வேண்டும் என்பது கிடையாது ...

மேலுல்ள ஹதீஸில்
சாப்பிட்டுவிட்டவர் தொடரட்டும் என்று வருகிறதே அப்படியும் நபிஃலான நோன்பை காலை உணவு சாப்பிட்டுவிட்டு வைக்கலாமா??

       🌷ஹதீஸின் விளக்கம🌷

2090 حدثنا قتيبة بن سعيد حدثنا حاتم- يعني ابن إسماعيل- عن يزيد بن أبي عبيد عن سلمة بن الأكوع رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم رجلا من أسلم يوم عاشوراء فأمره أن يؤذن في الناس: ((من كان لم يصم فليصم ومن كان أكل فليتم صيامه إلى الليل)).
: مسلم:2090

🌷2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று ”அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ”(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்” என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்..

📓 நூல்:முஸ்லிம்:2090

இந்த ஹதீஸ் நபி(ஸல்)அவர்கள் மதினாவிற்கு வந்து யூதர்கள் ஆஷூராவில் நோன்பு நோற்கிறார்கள் என்பதை காரணத்தோடு அறிந்து நபியவர்களின் புறத்திலிருந்து அன்று மட்டும் மக்களுக்கு ஏவிய ஒரு விஷயமாகும்...எனவே இன்றைக்கு ஒருவர் காலையில் காலை உணவை உண்டுவிட்டு மாலையில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம் என்பது கூடாது...🌺🌺🌺🌺

நபி(ஸல்)அவர்கள் யூதர்களிடம் விசாரித்தது...

2004. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ”இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

🌷அந்த ஹதீஸிற்கு இதுவே கூடுதலான  விளக்கமாகும்👇🌷

    «2725» وحدثني أبو بكر بن نافع العبدي حدثنا بشر بن المفضل بن لاحق حدثنا خالد بن ذكوان عن الربيع بنت معوذ بن عفراء قالت أرسل رسول الله صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار التي حول المدينة: ((من كان أصبح صائما فليتم صومه ومن كان أصبح مفطرا فليتم بقية يومه)). فكنا بعد ذلك نصومه ونصوم صبياننا الصغار منهم إن شاء الله ونذهب إلى المسجد فنجعل لهم اللعبة من العهن فإذا بكى أحدهم على الطعام أعطيناها إياه عند الإفطار.

2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி ”(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்” என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

இந்த ஹதீஸ் தெளிவாக அறிவிக்கிறது...
        நபி(ஸல்)அவர்கள் இந்த ஆஷுராவுடைய நோன்பை  முதல் முதலாக அறிவிப்பு செய்த பிறகுதான் ...


 வருடா வருடம்  நாங்கள் நோன்பு நோற்றோம் என்று ஸஹாபாக்கள் கூறியது,...

           

     நபி(ஸல்)அவர்கள்  இந்த ஆஷுராவின் கட்டளையை இப்பொழுதுதான் செய்தார்கள் என்று தெளிவாக அறிவிக்கிறது...🌸🌸



 🌴வல்லாஹு அஃலம்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய


​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment