Monday 6 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி - 22🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 22🔰

🚫 *பக்ர் கோத்திரத்தை சேர்ந்த முழர் குடும்பத்தாருக்கு மட்டும் மூன்று பொறுப்புகள் கிட்டின அவை*👇🏼

1⃣ஹஜ்ஜுக்கு வருபவர்களை அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கு அழைத்து வருவது மற்றும் ஹஜ்ஜின் கடைசி தினமான 13வது நாளன்று மினாவிலிருந்து பயணமாவதற்கு அனுமதியளித்தல்.

👆🏽இப்பொறுப்புகள் இல்யாஸ் இப்னு முழர் வமிசத்தில் அல் கவ்ஸ் இப்னு முர்ரா குடும்பத்தாருக்குக் கிட்டின.

👆🏽இவர்கள் ‘ஸூஃபா’ என அழைக்கப்பட்டனர். இவர்களது சிறப்பு என்னவெனில், ஸூஃபாவைச் சேர்ந்த ஒருவர் அகபாவில் கல் எறியாதவரை வேறு யாரும் எறியமாட்டார்கள்.

🌴மக்கள் கல்லெறிந்து முடித்து மினாவிலிருந்து வெளியேறுவதாயிருந்தால் கணவாயின் இருபுறங்களையும் ஸூஃபாவினர் மூடிவிடுவார்கள். அவர்கள் முதலில் வெளியேறிச் சென்ற பிறகே மற்றவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

🌴ஸூஃபாவினர் இறந்துவிட்ட பிறகு தமீம் கிளையைச் சேர்ந்த ஸஅது இப்னு ஜைது மனாத் குடும்பத்தினருக்கு இப்பொறுப்பு கிடைத்தது.

2⃣ *துல்ஹஜ் பிறையின் 10ஆம் நாள் முஜ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு அத்வான் குடும்பத்தார்களிடம் இருந்தது*.


3⃣ *(போர் புரிய தடை செய்யப்பட்ட) புனித மாதங்களை சூழ்நிலைக்கேற்ப முன் பின்னாக மாற்றிக் கொள்ளும் அதிகாரம், ‘ஃபுகைம் இப்னு அதீ’ என்ற கினானா குடும்பத்தாரிடம் இருந்தது*.

(இப்னு ஹிஷாம்)

🌴குஜாஆவினரின் ஆதிக்கம் மக்காவில் முன்னூறு ஆண்டுகள் இருந்தது.
(யாகூத், ஃபத்ஹுல் பாரி)

👆🏽இவர்களின் காலத்தில் அத்னான் வமிசத்தைச் சேர்ந்தவர்கள் நஜ்த், இராக், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர். மக்காவில் குறைஷியைச் சேர்ந்த சில குடும்பத்தார்கள் மட்டும் ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்தனர்.

🌴அவர்களுக்கு மக்கா மற்றும் புனித கஅபாவின் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை இந்நிலையில் ‘குஸய் இப்னு கிலாப்’ என்பவர் குறைஷியர்களில் தோன்றினார்.
 (இப்னு ஹிஷாம்)

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 04 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment