Tuesday, 21 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-35*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி-35*🔰


🚫இந்த எண்ணம் நாளடைவில் உறுதியான நம்பிக்கையாக வலுப்பெற்றது  அவர்களைத் தங்களது பாதுகாவலர்களாகக் கருதி அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையே நடுவர்களாக்கிக் கொண்டனர்.

🚫அவர்களது நேசத்தைப் பெற்றுத் தரும் வழிமுறைகளென தாங்கள் கருதிய அனைத்தையும் கொண்டு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தனர்.

🚫 அச்சான்றோர்களுக்காக அவர்களின் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கினர் அவற்றுள் சில உண்மையாய் உருவப்படங்களாக இருந்தன.

🌴சில உருவப் படங்களை தங்களது கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்தனர் இந்த உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் அரபி மொழியில் ‘அஸ்னாம்’ என்று கூறப்படும்.

 🚫சிலர் சான்றோர்களுக்கென உருவப் படங்கள், சித்திரங்கள் எதையும் வரையாமல் அவர்களது அடக்கத்தலங்களையும் அவர்கள் வசித்த, ஓய்வெடுத்த, தங்கிய இடங்களையும் புனித ஸ்தலங்களாக ஏற்படுத்திக் கொண்டனர். அந்த ஸ்தலங்களுக்குக் காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் சமர்ப்பித்தனர். மேலும், அவ்விடங்களில் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து பல கிரியைகளைச் செய்தனர். இவ்வாறான இடங்களுக்கும் சமாதிகளுக்கும் அரபியில் ‘அவ்ஸான்’ என்று கூறப்படும்.

🚫அவர்கள் அஸ்னாம் மற்றும் அவ்ஸான்களுக்குச் செய்து வந்த சடங்குகளில் பெரும்பாலானவற்றை அம்ரு இப்னு லுஹய்ம் தான் உருவாக்கித் தந்தான்.

🚫அவன் உருவாக்கித் தந்த அனைத்தும் ”அழகிய அனுஷ்டானங்கள் (பித்அத் ஹஸனா)” எனவும், அவை இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்திற்கு எவ்வகையிலும் முரணானதல்ல எனவும் அம்மக்கள் நம்பினர்.

🚫அவர்கள் அவ்ஸான் மற்றும் அஸ்னாம் ஆகியவற்றை வணங்கிய முறைகளாவது:

1⃣அச்சிலைகளை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடினர் தங்களது நெருக்கடியான காலக்கட்டத்தில் பாதுகாவலுக்காக அதனைப் பெயர் கூறி அழைத்தனர் அவை அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வேண்டி வந்தனர்.

2⃣ அவற்றை நாடி பயணித்தனர் வலம் சுற்றி வந்தனர்  பணிவை காட்டி அவற்றின் முன் சிரம் பணிந்தனர்.


3⃣ அவற்றுக்கு தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றினர் அச்சிலைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பலி பீடங்களில் தங்களது பிராணிகளை அறுத்து பலி கொடுத்தனர் எங்கு பிராணிகளை அறுத்தாலும் அச்சிலைகளின் பெயர் கூறியே அறுத்தனர்.

🌴அவர்களின் இந்த இருவகை உயிர்ப்பலிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

💥… (பூஜை செய்வதற்காக) நியமிக்கப்பட்டவைகளில் அறுக்கப்பட்டவைகளும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5 : 3)

💥நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 6 : 121)


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment