Wednesday, 1 June 2016

கடன்=பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

           🏮கடன்🏮
           
          🚫பகுதி-1⃣

🏮 ஒரு மனிதன் பட்டினி கிடக்கிறான் என்றால் அது அவனது உடலை பாதிக்கும்

🏮அவனது வலிமையை குறைக்கும்.

🏮 ஆனால் அவன் உள்ளத்தால் எத்தகைய பாதிப்பையும்  அடையமாட்டான்.

🏮ஒரு வேளை இல்லையென்றால் அடுத்த வேளை அவனுக்கு உணவு கிடைத்து விடும்.

🏮அவன் ஆரோக்ய நிலையைப் பெற்று விடுவான்.

🏮ஆனால் கடன்⁉

🏮அது தனிமனிதனோடு முடியும் பிரச்சனையல்ல.

🏮அவன் பாதிக்கப்படுவான்

🏮அந்த பாதிப்பு அவனது உடல் மனம் என்று இரண்டையும் பாதிக்கும்.

🏮அவனை சார்ந்தோரும் பாதிக்கப்படுவார்கள்.

🏮அவனுக்கு குடும்பம் இருந்தால்.....

🏮மனைவி & குழந்தைகள் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் அந்த கடன் பாதிக்கும்.

🏮கடனை அடைக்க முடியாத சூழ்நிலை வரும் போது கண்டபடியான பேச்சுக்கும் கேட்க வேண்டிய நிலை முதலில் உருவாகி

🏮பின்னர் அது மானத்தையும் இறுதியில் உயிரையும் கூட வாங்கும் நிலை உருவாகும்.

✳சிலர் அவசியமான தேவை

🔸உணவு
🔹 உடை
🔸இருப்பிடம்
🔹 வைத்தியம்
🔸கல்வி
🔹வியாபாரம்

👆🏽இது போன்ற தேவைகளுக்காக வாங்குவார்கள்.

✳ஆனால் சிலர் கடன் வாங்குவதையே தொழிலாக வைத்திருப்பார்கள்.

🏮ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

📖அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) ஆதாரம் புஹாரீ 6436

🏮சிலர் கடன் வாங்குவதை பெருமையாகவும் நினைப்பார்கள்.

🏮எது எப்படியோ கடன் கடன்தான்.

🏮ஆனால் பலர் கடனை வாங்கும் போது தேன் வடியும் வார்த்தைகளை கூறி வாங்குகிறார்கள்.

🏮அதை கொடுத்தவர் கேட்கும் போது அளக்கடிக்கிறார்கள்.

☝🏻அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

     
      🏮தொட....ரும்..

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 01 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment