Monday 6 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-25🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 25🔰

🚫அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த குறைஷி கோத்திரத்தாரை மக்காவுக்கு வரவழைத்து ஒவ்வொரு குறைஷி குடும்பத்துக்கும் இடங்களைப் பிரித்துக் கொடுத்து அவர்களது வாழ்க்கை வசதிகளைக் குஸய் மேம்படுத்திக் கொடுத்தார்.

🚫அவ்வாறே ஆலு ஸஃப்வான், பனூ அத்வான், முர்ரா இப்னு அவ்ஃப் போன்றோருக்கு அவர்களிடம் இருந்த பொறுப்பை அவர்களுக்கே வழங்கினார்.

🚫புனித மாதங்களை தங்களது வசதிக்கேற்ப முன்பின்னாக மாற்றியமைத்துக் கொள்ளும் வழக்கத்தை அவரும் பின்பற்றினார்.

🚫ஏனெனில், இவ்வாறான சடங்குகள் அனைத்தும் மாற்றத்தகாத மார்க்க சடங்குகள் என அவர் நம்பியிருந்தார். (இப்னு ஹிஷாம்)

🚫குறைஷியர்களுக்காக கஅபாவின் வடக்குப் பகுதியில் ‘தாருந் நத்வா’ எனும் ஒரு சங்கத்தை நிறுவியது குஸய் செய்த நற்செயல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.

🚫அது குறைஷியர்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு காணுமிடமாகவும், அவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மன்றமாகவும் விளங்கியதால், அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

🚫அதனுடைய வாசல் கஅபாவை நோக்கி அமைந்திருந்தது (இப்னு ஹிஷாம், இக்பாருல் கிராம் பி அக்பால் மஸ்ஜிதில் ஹராம்)

🏮 *குஸய்யின் சாதனைகள்*🏮

1⃣ *தாருந் நத்வாவின் தலைமை*

🔸குறைஷியர்கள் தங்களுக்கு நிகழும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்கு தான் ஆலோசனை நடத்துவார்கள்.

🔸மேலும், தங்களின் பெண் பிள்ளைகளுக்கு இதனைத் திருமண மண்டபமாக பயன்படுத்தினார்கள். இந்த தாருந் நத்வாவின் தலைவராக குஸய் விளங்கினார்.

2⃣ *கொடி*

🔸பிற சமுதாயத்துடன் போர் செய்வதாக இருந்தால் அதற்கான சிறிய அல்லது பெரியகொடி, குஸய் அல்லது அவரது பிள்ளைகளின் கரத்தில் கொடுக்கப்பட்டு தாருந் நத்வாவில் நடப்படும்.

3⃣ *வழிநடத்துதல்*

🔸மக்காவிலிருந்து வியாபாரம் அல்லது வேறு நோக்கங்களுக்காக வெளியில் செல்லும் பயணக் கூட்டங்களுக்கு குஸய் அல்லது அவரது பிள்ளைகளில் ஒருவர் தலைமை வகிப்பார்.

4⃣ *கஅபாவை நிர்வகித்தல்*

🔸கஅபாவின் வாயிலைத் திறப்பது, மூடுவது, பராமரிப்பது, வழிபாடுகள் நடத்துவது அனைத்தையும் குஸய் மேற்கொள்வார்.

5⃣ *ஹாஜிகளின் தாகம் தீர்த்தல்*

🔸தொட்டிகளில் நீரை நிரப்பி அதில் உலர்ந்த திராட்சை மற்றும் பேரீத்தம் பழங்களைப் போட்டு சுவையூட்டி அந்த மதுரமான நீரை மக்கா வருபவர்களுக்கு குஸய் குடிக்க வழங்குவார்.

6⃣...........


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 07 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment