Sunday, 12 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி- 30*🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋 *பகுதி - 30*🔰

🌴இந்தப் பகுதிகளுக்கு அருகில் வாழ்ந்த மக்களும் தடுமாற்றத்தில் இருந்தனர்

அவர்கள் சில சமயம் இராக் வாசிகளுடனும், சில சமயம் ஷாம் வாசிகளுடனும் சேர்ந்து கொள்வார்கள்.

🌴அரபிய தீபகற்பத்தின் உட்பகுதியில் வசித்துக் கொண்டிருந்த கோத்திரத்தாரும் ஒற்றுமையின்றி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

🌴அவர்களிடையே சமய மற்றும் இன ரீதியான மோதல்களும், சச்சரவுகளும் மிகைத்திருந்தன.

🔸அதைப் பற்றி அவர்களில் ஒரு கவிஞர் கூறுகிறார்:

🌴”நான் கூட கஜிய்யா குலத்தவனே! கஜிய்யா வழிகெட்டால்…

🌴நானும் வழிகெடுவேன். அவர்கள் நேர்வழி நடப்பின் நானும் நேர்வழி நடப்பேன்.”

🌴அவர்களை வழி நடத்துவதற்கோ, சிரமமான காலங்களில் ஆலோசனை கூறி உதவி செய்வதற்கோ அவர்களுக்கென ஆட்சியாளர் யாரும் இருக்கவில்லை.

🌴அதே நேரத்தில் ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளர்களை மக்கள் மிகுந்த கண்ணியத்துடன் நோக்கினர்.

🌴அவர்களையே தங்களது சமய மற்றும் சமூக வழிகாட்டிகளாகக் கருதினர் உண்மையில் ஹிஜாஸ் பகுதி அரசாங்கம் அக்காலத்தில் சமய மற்றும் சமூக வழிகாட்டியாக இருந்தது.

👆🏽அந்த ஆட்சியாளர்கள் ஏனைய அரபியர்களை சமயத்தின் பெயரால் ஆண்டு வந்தனர் இறையில்லம் கஅபாவையும், அங்கு வருபவர்களின் தேவைகளையும் அவர்களே நிர்வகித்து வந்ததால் அப்பகுதி அனைத்திலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்.

🌴நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை அமல்படுத்தி வந்தனர்.

🌴இன்றைய காலத்தைப் போன்று தங்களது ஆட்சியாளர்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வழமையை அவர்கள் கொண்டிருந்தனர்.

🌴எனினும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத அளவு பலவீனமானதாகவே அவர்களது ஆட்சி இருந்தது.

🌴ஹபஷிகள் தொடுத்த போரில் இவர்கள் பலவீனமானதிலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment