Wednesday, 15 June 2016

ஃபர்லான நோன்பிற்கு நிய்யத் செய்ய வேண்டுமா

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

📢ஃபர்லான நோன்பிற்கு நிய்யத் செய்ய வேண்டுமா?📢

🌴அல்ஹம்து லில்லாஹ்🌴

💛அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!

🕋நம்முடைய இந்த சத்திய இஸ்லாமிய தீனில் எல்லா காரியத்திற்கும் நிய்யத் என்பது அவசியம் என்று இஸ்லாம் மிகவும்
வலியுறுத்துகிறது...
             
 எனவேதான்    

நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறினார்கள்...

🌷🌷🌷«1» حدثنا الحميدي عبد الله بن الزبير قال: حدثنا سفيان قال: حدثنا يحيى بن سعيد الأنصاري قال: أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه)).
[أطرافه 54، 2529، 3898، 5070، 6689، 6953، تحفة 10612- 2/ 1].

🌷🌷🌷 1. ”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.


📓நூல் :புஹாரி:01

இந்த ஹதீஸில் ஒருவர் உலக எண்ணத்தில் தனக்கு நல்ல மனைவி வேண்டுமென்று தீனில் மிகப் பெறும் நன்மையான காரியமான ஹிஜ்ரத்தை செய்தால் அவருக்கு அந்த ஹிஜ்ரத் செய்த எந்த ஒரு நன்மையும் கிடைக்காது...
                மாறாக அவர் எதை நிய்யத் செய்து சென்றாறோ அதுவாக பார்க்கப்படும்...

   இதேபோன்றுதான் ஒரு தொழுகையை ஏதோ குணிந்து நிமிரும் யோகாசனம் என்று நிய்யத் செய்து தொழுவாரேயானால் அவருடைய தொழுகையும் அவ்வாறே பார்க்கப்படும்.. அல்லாஹ்விடம் நன்மையை பெற்றுத்தராது...

    💛ஆக அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!
இதேபோன்றுதான் நோன்பு வைப்பதற்கும் நிய்யத் அவசியமாகும்.

யார் நிய்யத்தை தவர விடுவார்களோ அவர்களின் செயல்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் போய்விடும்..

     .எனவே இங்கு நிய்யத் என்பது எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்...

💛உள்ளத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு இடமும் நம்முடைய நிய்யத்தை வெளிப்படுத்த தேவையில்லை...


🕋ஹஜ்.,இன்னும் உம்ரா செய்யும் போது தவிர..🌸🌸

ஆக உள்ளத்தால் உறுதி கொள்வதற்கே நிய்யத் என்று சொல்லப்படும்...

☠இது அல்லாமல் இன்றைக்கு ஒரு சிலர் சஹருக்கு எழுந்தாலே போதும் என்றும் அல்லது சஹர் சாப்பிட்டுவிட்டாலே போதும் நிய்யத் எல்லாம் செய்ய தேவையில்லை என்று எண்ணிவருகின்றனர்..
இது முற்றிலும் தவறாகும்...நிய்யத் என்பது கட்டாயமாகும்....

📖📖அடுத்தபடியாக நிய்யத் எப்பொழுது செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்...📖📖

  🌷      «2344» أخبرنا عبد الملك بن شعيب بن الليث بن سعد قال: حدثني أبي عن جدي قال: حدثني يحيى بن أيوب عن عبد الله بن أبي بكر عن ابن شهاب عن سالم عن عبد الله عن حفصة عن النبي صلى الله عليه وسلم قال: ((من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له)).

🌷  ஹப்ஸா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்...
"யார் இரவிலேயே (கடமையான) நோன்புகளை நிய்யத் செய்யாமல் விட்டுவிடுவாரோ அவருக்கு நோன்பே கிடையாது என்று ரசூலுல்லாஹி (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள்...

📓நூல்:நஸாயி:2314

🌸இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரால் ஸஹீஹானது என்று அல்பானி(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்...🌸🌸

🌸இன்னும் இது அல்லாமல் இந்த ஹதீஸ் திர்மிதி இன்னும் இது போன்ற பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது... சிலவை அவற்றில் மௌகூபாஃகவும், சிலவை மர்வூஃவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    💛அன்பான சகோதரர்களே!!!
இந்த ஹதீஸின் முக்கியமான ஒரு ஏவுதலை இன்றைக்கு நாம் வேடிக்கையாகவும், கேலி கிண்டலுக்கும் ஆலாக்கியிருக்கிறோம்....

ஆம் அன்பான சகோதரர்களே!!!

🌷நமெக்கெள்ளாம் இரவில் தராவீஹ் தொழுகை முடித்த பிறகு ஆலிம்கள் ஒரு நிய்யத்தை சொல்லித் தருகிறார்கள் அல்லவா...அது இந்த ஹதீஸின் அடிப்படையிலே ஆகும்...🌷

அந்த நிய்யத்தில்

  ""நவைத்து ஸௌம கதின்""

  என்ற வாசகம் இடம் பெற்று இருக்கும்.,.இதை வரம்பு மீறிய கூட்டமான அன்னன் மத்ஹபுவாதிகள் விமர்சித்து விமர்சித்தே முஃமின்களின் உள்ளங்களிலும் நோயை உண்டாக்கிவிட்டார்கள்....

☠☠அந்த விமர்சனம்☠☠

நோன்பு வைக்கும் சமயம் இன்று பிடிக்க என்று சொல்ல வேண்டுமா??அல்லது
இந்த முட்டாப்பய ஆலிம்சாக்க சொல்ற மாதிரி நாளை பிடிக்க என்ற நிய்யத் செய்ய வேண்டுமா??என்று ஒரு கேள்வியை எழுப்பி இவர்களே அதற்கு விளக்கமாக இப்படியெல்லாம் நிய்யத் செய்ய தேவையில்லை என்று மனஇச்சைக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து முடிக்கிறார்கள்....

💛அன்பான என் இஸ்லாமிய சகோதரர்களே!!
 
☘முதலில் நாம் ஒரு அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும்...☘

கடமையான நோன்புகளுக்கு இரவிலேயே நிய்யத் வைத்துவிடுவது கட்டாயம் என்று மேலே நபியவர்களின் சொல் தெளிவாக விளக்குகிறது....

     எனவே ஒருவர் தான் தூங்குவதற்கு முன் நாளைய நோன்பை பிடிக்க என்று நிய்யத் செய்வது கட்டாயமாகும்...
ஏனென்றால் நோன்பு என்பது பகலை கவணித்து செய்யப்படும் கடமையாகும்... எனவே விடிந்த பிறகு நோற்பதற்குள்ள நோன்பை நாளை பிடிக்க என்று சொல்வதுதான் சரியானதாகும்...

எனவே நாம் நம்முடைய தூக்கத்திற்கு முன்பே  நபி(ஸல்)அவர்களின் பொன்மொழியின் அடிப்படையில் நிய்யத் செய்துவிட வேண்டும்...அப்படியே ஒரு வேளை சஹருக்கு எழாமல் போனாலும் நோன்பை தொடரலாம்...

🌺வல்லாஹு அஃலம்🌺

அடுத்த பதிவில் ஃநபிலான நோன்புகளை சூரியன் உச்சியை அடையும் வரை நிய்யத் செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டும் நபிவழியை விவரிக்கிறேன் ...

🍂இன் ஷா அல்லாஹ்🍂

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:15: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment