Tuesday 21 June 2016

நோன்பு வைக்க முடியாதவர்கள் பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


🌴 *முற்றிலும் நோன்பு வைக்கமுடியாதவர் என்ன செய்ய வேண்டும்?​​*🌴  

                 💥பகுதி-3

☘ இவ்வாறு நோன்பை பிடிக்க முடியாத ஒருவருக்கு...

🌴முடியாது என்று சொன்னதற்கு பிறகும் ஃபித்யாவை கொடுக்க வேண்டும் என்று கூறுவது கடினமான சட்டம் என்று அவர்கள் கூறினால் ...

☝🏻அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா பல்வேறு விஷயங்களை ஒருவருக்கு செய்ய முடியாதபோது அதற்காக பரிகாரம் செய்ய சொல்கிறானே,. அவற்றையெல்லாம்  மறுத்துவிடுவார்களா???

             ☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

       💥196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது" மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். ''

திருக்குர்ஆன்  2:196.

👆🏽இந்த ஆயத்தில் தலையில் காயம் போன்ற தொல்லை தரும் எதாவது இருந்தால் அப்பொழுது(எல்லையை அடைவதற்கு  முன்பே தலையை மழித்துக் கொண்டு)அதற்காக மூன்று நோன்போ அல்லது தர்மமோ அல்லது பலியிடலோ பகரமாக செய்ய வேண்டும். என்று அல்லாஹ் கூறுகிறான்... .

👆🏽 இந்த ஆயத்தை அமல்படுத்தும் வண்ணமாக நபி(ஸல்) அவர்களும் ஒரு ஸஹாபிக்கு ஏவியிருப்பதாக ஹதீஸில் பதிவு செய்யப் பட்டுள்ளது...

💥 1814. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
”உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ”ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ”உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக!அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!” என்றார்கள்.
நூல்:புஹாரி:1814...  
 
👆🏽இந்த ஹதீஸில் கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்)அவர்கள் தலையில் பேண்கள் தொல்லைதருகிறது என்பதால் வெறுமனே தலையை மழித்துக் கொண்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் போதும்...

💥 *அதுதான் அல்லாஹ்விற்கு உனக்கு முடியவில்லை என்று தெரியுமல்லவா...!!?!!* *எனவே அல்லாஹ் சக்திக்கு ஏற்பதான் சோதிப்பான்.,.அதற்கு மேல் உள்ளவற்றிற்கு மன்னிப்பு வழங்கிவிடுவான்,. என்று  ஒருபோதும் கூறவில்லை...*

💥மாறாக இப்பொழுது முடியை மழித்துவிட்டு  பிறகு மூன்று நோன்பு நோற்க வேண்டும்..என்றும் அல்லது தர்மம் செய்ய வேண்டும் என்றும் அல்லது ஒரு ஆட்டை பழி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்,...

💥அன்பு சகோதரர்களே!!!!

🌴நமது மார்க்கம் நமக்கு தெளிவாக அனைத்தையும் கற்றுத்தந்து உள்ளது பிறகு ஏன் குழம்ப வேண்டும்.

🌴 *வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக!!!!!*


〽〽〽〽〽〽〽〽〽〽

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 19 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment