Monday, 6 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி-23🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 23🔰

🚫 *குஸய்யின் சுருக்கமான வரலாறு*🚫

🚫குஸய்யின்’ சிறு வயதிலேயே அவரது தந்தை மரணமாகிவிட்டார் அவரது தாயை உத்ரா குடும்பத்தைச் சேர்ந்த ‘ரபீஆ இப்னு ஹராம்’ என்பவர் மணமுடித்தார்.

🚫அவர் தனது மனைவியையும் குஸய்யையும் ஷாம் நாட்டிலுள்ள தனது ஊருக்கு அழைத்து வந்தார் குஸய் வாலிபராகி மக்கா திரும்பினார்.

🚫அந்நேரத்தில் மக்காவின் நிர்வாகியாக குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹுலைல் இப்னு ஹப்ஷிய்யா’ என்பவர் இருந்தார். ஹுலைலின் மகள் ‘ஹுப்பா’ என்பவரை குஸய் மணமுடித்தார். (இப்னு ஹிஷாம்)

🚫சில நாட்களுக்குப் பிறகு ஹுலைல் காலமானார் அப்போது குஜாஆ மற்றும் குறைஷியருக்கிடையில் சண்டை மூண்டது இதில் குஸய்யும் அவரைச் சேர்ந்தவர்களும் மக்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

👆🏽இச்சண்டை மூண்டதற்குரிய காரணங்களைப் பற்றி மூன்று கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1⃣குஸய் மக்காவில் நன்கு புகழ்பெற்றார் அவரது செல்வங்களும் குடும்பங்களும் பெருகின தனது மாமனார் ஹுலைல் மரணமான பிறகு குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை விட தானே கஅபாவையும் மக்காவையும் நிர்வகிப்பதற்குத் தகுதியானவர்

🚫அதுமட்டுமின்றி, குறைஷியர்தான் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் தலைமைத்துவம் மிக்கவர்கள் என எண்ணினார்.

🚫ஆகவே, குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கு கினானா மற்றும் குறைஷி கோத்திரத்தாரிடம் குஸய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

🚫அவர்களும் அதை ஒப்புக்கொள்ளவே இவர்கள் அவர்கள் மீது போர் தொடுத்தனர்.

2⃣கஅபா மற்றும் மக்காவை நிர்வகிக்க வேண்டும் என குஸய்ம்க்கு ஹுலைல் தனது மரண நேரத்தில் கட்டளையிட்டார். ஆனால் அதற்கு குஜாஆவினர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு தரப்பினடையே போர் மூண்டது.

3⃣ஹுலைல் தனது மகள் ஹுப்பாவிற்கு கஅபாவை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்கினார் அவள் சார்பாக அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த ‘அபூ குபுஷான்’ என்பவரை குஸய் நியமித்தார்.

🌴அவர் ஹுப்பாவுக்கு பதிலாக கஅபாவை நிர்வகித்து வந்தார் அவர் சற்று புத்தி சுவாதீனமற்றவராக இருந்தார் ஹுலைல் மரணமடைந்த பிறகு குஸய் அபூ குபுஷானுக்கு சில ஒட்டகங்கள் அல்லது சில மதுப் பீப்பாய்கள் கொடுத்து கஅபாவின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

👆🏽இதை குஜாஆவினர் ஒப்புக் கொள்ளவில்லை குஸய் கஅபாவை நிர்வகிக்கக்கூடாது என தடுத்தனர்.

🚫இதனால் குஸய் மக்காவிலிருந்து குஜாஆவினரை வெளியேற்றுவதற்காக குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரின் உதவியை நாடினார்.

🚫அவர்களும் அதற்கிணங்கியதால் இரு தரப்பினருக்கிடையே போர் மூண்டது.(ஃபத்ஹுல் பாரி, மஸ்வூதி)

🏮காரணங்கள் எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்தன👇🏼


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment