Friday 3 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 21🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*

         🕋பகுதி - 21🔰

💥 *ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்*💥

💥ஜுர்ஹும் கோத்திரத்தினரின் நிலைமை மக்காவில் மிக மோசமடைந்து, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாயினர். கஅபாவை தரிசிக்க வந்தவர்களை இம்சித்து கஅபாவின் செல்வங்களையும் சூறையாடினர்.
 (தபரி)

🌴இச்செயல் அத்னானியர்களுக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. குஜாஆ கோத்திரத்தினர் மக்காவுக்கு அருகிலுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்தில் குடியேறியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மீது அத்னானியர்கள் கொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக் கொண்டனர்.

🌴அத்னானியர்களின் ஒரு பிரிவினரான ‘பனூ பக்ரு இப்னு அப்து மனாஃப்’ குடும்பத்தாரின் உதவியுடன் குஜாஆவினர் ஜுர்ஹும் கோத்திரத்தார் மீது போர் தொடுத்து, அவர்களை மக்காவிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

🌴 கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பாதிவரை அவர்களது ஆட்சியே மக்காவில் நீடித்தது.

🚫ஜுர்ஹும் கூட்டத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஜம்ஜம் கிணற்றை அடையாளம் தெரியாத வகையில் பல பொருள்களைப் போட்டு நிரப்பி மறைத்து விட்டனர்.

🚫வரலாற்றாசிரியரான இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்👇🏼

💥 *அம்ர் இப்னு ஹாஸ் இப்னு முழாழ் ஜுர்ஹுமீ’ என்பவர் கஅபாவிலிருந்த இரண்டு தங்க மான் சிலைகளையும், அஸ்வத் கல்லையும் ஜம்ஜம் கிணற்றினுள் போட்டு மூடிவிட்டார்*

💥 அவரும் அவரைச் சேர்ந்த ஜுர்ஹும் கோத்திரத்தாரும் யமன் நாட்டுக்குச் சென்று குடியேறினர்  மக்காவை விட்டுப் பிரிந்ததையும் அதன் அதிகாரம் கை நழுவிப் போனதையும் எண்ணி அவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

👆🏽இது குறித்து அம்ர் இக்கவிதையை பாடினார்👇🏼

🔸ஹஜூன், ஸஃபா இடையே நேசருமில்லை

🔸மக்காவில் இராக்கதை பேசுபவரும் இல்லை

🔸மாறாக, நாங்களே அங்கு வசித்து வந்தோம்;

🔸ஆனால் எங்களை காலங்களின் மாற்றங்களும்

🔸ஆபத்து நிறைந்த விதிகளும் அழித்துவிட்டன.
(இப்னு ஹிஷாம், தபரி)

🌴நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலம் நபி ஈஸா (அலை) அவர்களது பிறப்புக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாகும்.

🌴ஜுர்ஹும் கோத்திரத்தினர் ஏறக்குறைய இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் மக்காவில் வசித்து அதனை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.

🌴குஜாஆவினர் மக்காவைக் கைப்பற்றிய பிறகு பக்ர் கோத்திரத்தாரை இணைத்துக் கொள்ளாமல் தனியாகவே தங்களது ஆட்சியை நிறுவிக் கொண்டனர். எனினும், பக்ர் கோத்திரத்தை சேர்ந்த முழர் குடும்பத்தாருக்கு மட்டும் மூன்று பொறுப்புகள் கிட்டின.

✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment