Wednesday 1 June 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு 🕋பகுதி - 17

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 1⃣7⃣🔰

           💥ஹீரா நாடு

✳இராக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘கூரூஷுல் கபீர்’ என்பவன் தலைமையின் கீழ் கி.மு. 557லிருந்து கி.மு. 529 வரை பாரசீகர்கள் ஆட்சி செய்தனர்.

✳அவர்களை எவராலும் வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, பாரசீகர்களின் அரசரான ‘தாரா’ என்பவரை ‘இஸ்கந்தருல் மக்தூனி’ என்பவர் கி.மு. 326ல் தோற்கடித்தார்.

✳மேலும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் வலிமையையும் முறியடித்து அவர்களது நகரங்களை சின்னா பின்னமாக்கினார்.

✳பிறகு தவாயிஃப் என்ற பெயருடைய அரசர்கள் அந்நாட்டை பல பகுதிகளாகக் பிரித்து கி.பி. 230 வரை ஆட்சி செய்தனர்.

👆🏽இவர்களது ஆட்சி காலத்தில் கஹ்தான் கோத்திரத்தினர் இராக்கின் சில கிராம பகுதிகளைக் கைப்பற்றினர்.

✳அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் போட்டியாக அத்னான் கோத்திரத்தார்களும் ஃபுராத் நதிக்கரையின் சில பகுதிகளில் குடியேறினர்.

       💥இவ்வாறு குடிபெயர்ந்தவர்களில் முதலாவது அரசராக இருந்தவர் கஹ்தான் வமிசத்தை சேர்ந்த ‘மாலிக் இப்னு ஃபஹ்ம் அத்தனூகி’ என்பவராவார். ‘அன்பார்’ அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதி அவரது ஆட்சியின் தலைமையகமாகத் திகழ்ந்தது.

👆🏽அவருக்குப் பிறகு அவரது சகோதரர் அம்ரு இப்னு ஃபஹ்ம் ஆட்சி செய்தார் சிலர் ‘அப்ரஷ், வழ்ழாஹ்’ என்று அழைக்கப்பட்ட ‘ஜுதைமா இப்னு ஃபஹ்ம்’ என்ற அவரது சகோதரர் ஆட்சி செய்தார் எனக் கூறுகின்றனர்.

✳கி.பி. 226-ஆம் ஆண்டு ஸாஸானியா அரசை உருவாக்கிய ‘அர்துஷீர் இப்னு பாபக்’ என்ற மன்னன் காலத்தில் இரண்டாவது முறையாக பாரசீகர்கள் இராக் நாட்டை கைப்பற்றினர் அம்மன்னர் பாரசீகர்களை ஒன்றிணைத்து நாட்டின் எல்லைப் புறங்களில் வாழ்ந்து வந்த அரபியர்களை அடக்கி அவர்கள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

✳ஹீரா நாட்டவர்களும் அன்பார் நகரத்தை சேர்ந்தவர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

✳ஆனால், குழாஆ கோத்திரத்தினர் தங்களது ஊர்களைத் துறந்து ஷாம் நாட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

✳அர்தஷீருடைய காலத்தில் ஹீரா மற்றும் இராக்கில் வாழ்ந்த கிராமத்தவர்கள் மற்றும் அரபிய தீபகற்பத்தில் வாழ்ந்த ரபீஆ, முழர் ஆகியோர் மீது ‘ஜுதைமத்துல் வழ்ழாஹ்’ என்பவர் ஆதிக்கம் செலுத்தினார்.

✳அதாவது அரபியர்கள் மீது நேரடியாக ஆட்சி செய்வதும் அவர்களின் தாக்குதல்களிலிருந்து தனது நாட்டைக் காப்பதும் அர்தஷீருக்கு மிகுந்த சிரமமாகத் தோன்றியது. ஆகவே, அரபியர்களிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அரசராக்கினால் அவர் தனக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் அமைவார் என எண்ணினார்.

✳மேலும், தன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ரோமர்களை எதிர்கொள்ள அந்த அரபிகளின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமெனவும் திட்டமிட்டார்.

✳அதுமட்டுமின்றி ரோமர்களுக்கு உதவி செய்துவரும் ஷாம் நாட்டு அரபியர்களை இராக்கின் அரபியர்களை கொண்டு தடுக்க நாடினார் ஆகவேதான் அரபியராகிய ஜுதைமாவை மேற்கூறிய பகுதிகளுக்கு அர்தஷீர் அரசராக்கினார்.

✳ தனது ஆட்சியை எதிர்க்கும் அரபிய பழங்குடி மக்களை அடக்கி வைக்க ஜுதைமாவுக்கு பாரசீக ராணுவப்படை ஒன்றையும் அவர் வழங்கினார். ஜுதைமா கி.பி. 268-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

✳ஜுதைமா மரணமான பின்பு, அதாவது மன்னர் ‘கிஸ்ரா ஸாபூர் இப்னு அர்தஷீருடைய’ ஆட்சிக் காலத்தில் அம்ரு இப்னு அதீ இப்னு நஸ்ர் அல்லக்மி கி.பி. 268 முதல் 288 வரை ஹீராவையும் அன்பாரையும் ஆட்சி செய்தார்.

✳லக்ம் கோத்திர அரசர்களிலும் ஹீராவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்களிலும் இவரே முதன்மையானவர்.

✳இவரையடுத்து லக்ம் கோத்திர அரசர்கள் பலர் தொடர்ந்து ஹீராவை ஆண்டு வந்தனர். இறுதியாக (கி.பி. 448 முதல் 531 வரை) ‘குபாத் இப்னு ஃபைரோஜ்’ பாரசீக மன்னரானார். இவரது ஆட்சியின்போது ‘மஜ்தக்’ என்பவன் தோன்றி முறையற்ற பாலியல் உறவின் பக்கம் மக்களை அழைத்தான்.

✳ மன்னர் குபாத் மற்றும் அவனது குடிமக்களில் அதிகமானவர்கள் அவனை பின்பற்றினர். பிறகு குபாத், ஹீராவின் மன்னரான முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவை (கி.பி. 512-554) இழிவான இவ்வழிமுறையை ஏற்குமாறு அழைத்தான். அவர் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டார் அதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மஜ்தக்கின் வழியை பின்பற்றிய ‘ஹாஸ் இப்னு அம்ர் இப்னு ஹஜர் அல் கின்தீ’ என்பவனை அரசனாக்கினான்.

✳குபாதுக்குப் பிறகு ‘அனூஷேர்வான்’ (கி.பி. 531-578) என்பவர் மன்னரானார் இவர் இந்த தவறான வழியை முற்றிலும் வெறுத்தார். மஜ்தக் மற்றும் அவனது வழியை பின்பற்றியவர்களைக் கொலை செய்தார். ஹாஸ் இப்னு அம்ரை நீக்கிவிட்டு மீண்டும் முன்திரை ஹீராவின் அரசராக்கினார்.

✳ஹாஸ் இப்னு அம்ரை கைது செய்ய முயன்றபோது அவன் ‘கல்பு’ கோத்திரத்தாரிடம் சென்று அடைக்கலமாகி மரணம் வரை அங்கேயே தங்கிவிட்டான்  முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தாரிடமே ஆட்சி இருந்தது.

✳அவரது மகன் நுஃமான் இப்னு முன்திர் கி.பி. 583 லிருந்து 605 வரை ஆட்சி செய்தார். அப்போது ‘ஜைது இப்னு அதீ’ என்பவன் கூறிய தவறான தகவலால் நுஃமான் மீது கோபமடைந்து அவரைத் தேடிவர கிஸ்ரா வீரர்களை அனுப்பி வைத்தார். நுஃமான் ரகசியமாக வெளியேறி ஷைபான் கோத்திரத்தின் தலைவரான ஹானி இப்னு மஸ்வூதிடம் அடைக்கலம் பெற்று அவரிடம் தனது குடும்பத்தினரையும் செல்வங்களையும் ஒப்படைத்துவிட்டு கிஸ்ராவிடம் திரும்பினார்.

✳கிஸ்ரா அவரை மரணமடையும் வரை சிறையில் அடைத்தார்.


✳💥தொட.....ரும்....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 30 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment