Sunday 12 June 2016

*கடன்*🏮 🚫 *பகுதி*- 6⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠

          🏮 *கடன்*🏮

         🚫 *பகுதி*- 6⃣

💥 *கடன் வாங்குபவர் கவனிக்க வேண்டியவை*💥

🌴கடன் வாங்குவது நிர்பந்தம் கருதி அனுமதிக்கப்பட்டது ஆகவே இயன்றவரை கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

🌴ஏனென்றால் வாங்கியக் கடனைத் திருப்பி கொடுப்பதற்குத் தாமதமானாலும் அல்லது கொடுக்க இயலாமல் போனாலும் இம்மையிலும் மறுமையிலும் மனிதன் பாதிப்புக்குள்ளாக வேண்டியது ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

🌴 *நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று தொழுகையில் துஆ செய்துகொண்டிருந்தார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதிகமாக கடனிலிருந்து பாதுகாவல் தேடுகிறீர்களே! என்றார். அதற்க்கு நபியவர்கள் ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பொய் பேசவும், வாக்குறுதிக்கு மாறு செய்யவும் ஆரம்பித்துவிடுகிறான் என்று பதிலளித்தார்கள்*.

🔸அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 2397

🌴கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க தாமதமானாலோ அல்லது கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானாலோ மனிதன் பொய் பேசியும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்தும் தீமையை சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறான்.

🚫கடன் வாங்குவதால் பல தீமைகளை செய்யவேண்டிய நிலை மனிதனுக்கு ஏற்ப்படுவதால் *தன்னால் இயன்றவரை மனிதன் கடன் வாங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டும்* என்பதை மேலே கூறிய  ஹதீஸ் நமக்கு  உணர்த்துகிறது.

🌴வாங்கியக் கடனை திருப்பிக் கொடுக்காமல் மரணித்துவிட்டால் பிற மனிதனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்காத குற்றம் வந்து சேரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

🌴 *கடன் வாங்கி அதை அடைக்காமல் இறந்து போகிறவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள்*.

🌴இந்நிலையில் ஒரு மய்யித் கொண்டுவரப்பட்டது.

🌴அவர்மீது கடன் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறதா? என்று நபியவர்கள் கேட்டார்கள்.

🌴அதற்க்கு, ஆம் இரண்டு தினார்கள் என்று மக்கள் பதிலளித்தனர், அப்படியானால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🌴அப்போது அபூகதாதா(ரலி) அல்லாஹ்வின் தூதரே அதை அடைப்பது என் பொறுப்பு என்றார்.

🌴 *அதன் பின் நபி(ஸல்) அந்த மய்யித்திற்காக தொழுகை நடத்தினார்கள்*.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: அஹ்மத் 14192, அபூதாவூத் 3345


🌴இது மட்டுமின்றி அல்லாஹ்வின் வழியில் போர் செய்து உயிர் தியாகம் செய்தவருக்கு தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டாலும் கடன் மட்டும் மன்னிக்கப்படாது.


🌴நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் பொறுமையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (எதிரிகளை) முன்னோகியவாறும் புறமுதுகு காட்டாமலும் அல்லாஹ்வின் வழியில் போரிட்டுக் கொல்லப்பட்டால் என் தவறுகளெல்லாம் மன்னிக்கப்படுமல்லவா? என்று கேட்டார். அதற்க்கு ஆம் என்று பதிலளித்தார்கள். நபியவர்கள் அம்மனிதர் திரும்பிச் செல்கையில் அவரை அழைத்து மீண்டும் அவரது கேள்வியைக் கேட்கும்படி கூறினார்கள். முன்பு கேட்டதையே அவர் மீண்டும் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆம் கடனைத் தவிர! இவ்வாறு ஜிப்ரீல் எனிடம் இப்போது கூறினார்கள் என்றார்கள்.

நூல்கள்: நஸஈ 3156, (இதன் கருத்து முஸ்லிம், திர்மிதியிலும் உள்ளது)
     
       💥 *தொடரும்*


 ⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 08 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment