Sunday 12 June 2016

*கடன்* 🏮 🚫 *பகுதி*-7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 💠


        🏮 *கடன்* 🏮

         🚫 *பகுதி*-7⃣

🚫கடன் வாங்குபர் கவனமாக இருக்க வேண்டும் சென்ற தொடரிலே அனுமதித்த தேவைக்கு வாங்குபவர்களுக்கே இவ்வளவு கூறி இருக்கும் போது.

💥அனுமதிக்கப்படாத காரியங்களுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் கடன் வாங்கினால் எவ்வளவு பெரிய தவறாகும் என்பதைப் புரிந்துக்கொள்ளளாம்.

🚫கடன் வாங்கி அதை வாங்கிய விதத்தில் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை ஏற்ப்பட்டால் எதையாவது விற்றாவது அந்தக் கடனை அடைக்கிற நிலையில் இருக்க வேண்டும்.

🚫 *அவ்வாறு இல்லாவிட்டால் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்*.



🚫நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

💥 “எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருளை) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2387.

🚫தவணைக் குறிப்பிட்டு கடன் பெற்றிருந்தாலும் குறிப்பிடாமல் பெற்றிருந்தாலும் இயன்ற அளவு விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் *நிர்பந்தமின்றி இழுத்தடிப்பது குற்றமாகும்*.

🚫நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

💥 “செல்வந்தன் (வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 2287, 2288.


💥வசதியுள்ளவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப் படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🔸நூல்கள்: நாஸஈ 4690, அபூதாவூத் 3630.

🚫கடன் பெறும்போது தவணையை ஏற்றுக்கொள்வது ஒரு வாக்குறுதியாகும், வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுவது ஒரு கடமை, அதை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தாலும் அதுவும் மறுமையில் விசாரிக்கப்படும்.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்

💥“வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (அல்குர்ஆன் 17:34)

       💥 *தொடரும்*

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 JUNE  2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment