Friday 6 May 2016

பெருமை கொள்ளாதே

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


💤பெருமை கொள்ளாதே💤



🌴பெருமை என்றால் என்ன?

💫என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்?

💫பெருமையின் விளைவுகள் என்ன?

👆🏽என்பது பற்றி எல்லாம் தெளிவான கண்ணோட்டம் நம்மிடத்தில் இல்லை எனவே பெருமை பற்றி மார்க்கத்தில் சில விசயங்களை பார்ப்போம்.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

📓ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான்.

பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (அல்குர்ஆன்: 2:34)


👆🏽இதே கருத்தில குர்ஆனில் இன்னும் பல வசனங்கள் உள்ளன.

📓அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் 💤பெருமை💤தான் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

🌴பெருமை என்ற சொல் இறைவனுக்கு சொந்தமானவை நம்மை படைத்த இறைவன் இதை பல இடங்களில் கூறி உள்ளான்.

💤அவற்றில் சில👇🏼

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼


📓போர்த்திக்கொண்டு இருப்பவரே! எழுந்து (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! உமது ரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக. (அல்குர்ஆன் : 74:1,2,3)

📓வானங்களிலும், பூமியிலும் உள்ள பெருமைகள் (அனைத்தும் அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியது. அவன்தான் (யாவற்றையும்) மிகைத்தவன் நுண்ணறிவு மிக்கவன். (அல்குர்ஆன் : 45:37, 59:23)

📓கண்ணியம் எனது கீழாடையாகும். பெருமை எனது மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றோடு ஒருவன் என்னிடம் தர்க்கம் செய்தால் (போட்டியிட்டால்) அவனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் என்று அல்லாஹ் எச்சரிப்பதாக, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதார நூல்: முஸ்லிம் 2620)

👆🏽இன்னும் இது போன்று பல வசனங்களும் ஹதீஸ்களிலும் உள்ளது

🌴இவை அனைத்தையும் நாம் கூர்ந்து கவனித்தால் பெருமைக்கு சொந்தக்காரன் ஒரே இறைவன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளளாம்.

❌ஆனால் இன்று
செல்வந்தர்களாக இருப்பவர்கள் தனக்குக் கீழே இருப்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும்
ஏளனமாக பேசுவதும்.

❌ஆடைகள் விஷயத்தில் கரண்டைக் காலுக்கும் கீழே  ஆடை அணிவதும்.


❌இது போலவே கல்வி கற்றுள்ளோம் என்று எண்ணுபவர், படிப்பறிவு இல்லாதவரை இழிவாக எண்ணுவதும்

❌பதவி பொறுப்புக்களைக் கொண்டு பெருமை அடிப்பதும்

❌ தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களை இழிவாக எண்ணுவது அதிகமாகவே உள்ளது.

👆🏽இவை எல்லாம் பெருமையின் அடையாளமே⁉

🌴அன்பு சொந்தங்களே பெருமை என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்

✅நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்👇🏼


📓மறுமையில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்கவும் மாட்டான். கருணைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டான். அவர்கள் யாரெனில்

1. முதுமையில் விபச்சாரம் செய்தவர்.
2. பொய்யுரைக்கும் அரசன், 3.பெருமை அடிக்கும் ஏழை ஆகியவர்கள் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதார நூல்: முஸ்லிம், நஸாயீ


☝🏻மேலும் அல்லாஹ் கூறுகிறான்👇🏼


📓அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்ப்பட்டால் “”சாந்தி உண்டாகட்டும்” என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன் : 25:63)

🌴ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு பெருமை இல்லா வாழ்க்கையை வாழ வல்ல ரஹ்மான் நமக்கு துனை புரிவானாக!!!!


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment