Monday 23 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 11

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 1⃣1⃣

🔸சில அறிவிப்புகளில் வந்துள்ளது

💥நபி (ஸல்) அவர்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும் போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக்கொண்டு இதற்க்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்துவிட்டனர் என்று கூறுவார்கள்.

🔸சில அறிவிப்புகளில் வந்துள்ளதாவது ;

💥நபி (ஸல்) அவர்கள் தங்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும் போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக்கொண்டு இதற்க்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்து விட்டனர் என்று கூறுவார்கள்.

👆🏽இவ்விடத்தில் மற்றொரு கருத்தும் குறிப்பிடத்தக்கது அதாவது.

💥சிலர் மேற்கூறப்பட்ட நபிமொழி பலவீனமானது என்பதால் அத்னானுக்கு மேலும் தலைமுறை பெயர்களை கூறலாம் என்கின்றனர்.

💥எனினும் அத்னானுக்கு மேல் இவ்வறிஞர்கள் கூறும் தலைமுறையில் மாறுபட்ட பெயர்களை கூறுகின்றனர் அக்கருத்துக்களை ஒருங்கிணைக்க முடியாத அளவு அதில் வேறுபாடுகள் உள்ளன.

🌴"அத்னான் மற்றும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கிடையில் நாற்பது தலைமுறைகள் உள்ளன" என்று பிரபலமான வரலாற்று அறாஞர் "இப்னு ஸஅது"(ரஹ்) கூறுகிறார்கள்.

💥இக்கால அறிஞர்களில் பெரும் ஆய்வாளராக விளங்கும் முஹம்மது சுலைமான் என்பரும் இக்கருத்தையே சரி காண்கிறார்.
மேலும் இமாம் தபரி மற்றும் மமஸ்வூதி தங்களின் பல கருத்துக்களில் இதனையும் ஒன்றாக கூறியுளார்கள்.

💥மஅதின் மகன் நஜார் என்பவர் மூலம் பல குடும்பங்கள் தோன்றின (மஅத்துக்கு "நஜார்"என்ற ஒரு மகன் மட்டும் தான் இருந்தார் என்றும் சிலர் கூறியுள்ளார்கள்).

💥நஜாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர் அவர்கள் மூலம் பெரிய வமிசங்கள் தோன்றின
1.இயாத்
2.அன்மார்
3.ரபீஆ
4.முழர்


✳நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

🌴நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத் தேர்வு செய்தான். இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் ‘கினானா’ குடும்பத்தைத் தேர்வு செய்தான். கினானா குடும்பத்தில் குறைஷியர்களைத் தேர்வு செய்தான். குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தைத் தேர்வு செய்தான். (ஸஹீஹ் முஸ்லிம்.


✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment