Friday 13 May 2016

ஸலாம்-பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
     💥பகுதி-2⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரிலே ஸலாம் கூறுவதினால் உள்ள நன்மைகளையும் சிறப்புகளையும் பார்ப்போம்.

🌴இஸ்லாமிய மார்க்கம் நமக்கு தெளிவாக அழகாக கற்றுத்தந்த முகமன் இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமனை கூறுவதினால் பல நன்மைகளும் சிறப்புகளும் உள்ளன.

💥அல்லாஹ்வின் தூதர் நமது நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்👇🏼


📓ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும்
👍ஸலாம் சொல்வதுமாகும்👍 என்று பதிலளித்தார்கள்.

📖அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236


📓இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"

📖அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

(நூல்: புகாரி, முஸ்லிம்)


💥இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.

💥ஒரு முஸலீ்­ம் மற்றொரு முஸ்­லீமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஸலாம் கூறுதலும் ஒன்றாகும்.


👆🏽இன்னும் இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

💥இருவர் சந்திக்கும் போது முத­லில் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்கு உரியவராவார்.


💥மேலும் ஸலாம்
🔸சிறியவர் பெரியவருக்கும்.
🔸 நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும்.
🔸 சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும்.

💥பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறுவது சிறந்தது ஆகும்.

💥 ஒவ்வொரு சந்திப்பிற்க்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.

👍இன்னும் ஸலாம் கூறுவதற்க்கு பல ஒழுக்கங்கள் உள்ளன

👍அதை அடுத்த தொடரிலே இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்

    💥  தொட.....ரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment