Tuesday, 17 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 8⃣


💥மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமானது!!!!!

2.இஸ்மாயில் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியை கற்றார்கள் அவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பன்புகளை ஜுர்ஹூம் கோத்திரத்திரத்தார் பெரிதும் விரும்பி தங்கள் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயில் (அலை)அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள்.

😌இத்திருமணத்திற்க்கு பிறகே அன்னை ஹாஜர் அவர்கள் இறந்தார்கள்.

💥இப்ராஹிம் (அலை) அவர்கள் மீண்டும் மனைவியையும் மகனையும் சந்திப்பதற்க்கு மக்கா வந்த போது மனைவி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டார்கள்.

💥இஸ்மாயில் (அலை) அவர்கள் அப்போது மக்காவில் இல்லை இஸ்மாயில் (அலை) அவர்களின் மனைவியிடம் தனது மகனைப் பற்றியும் அவ்விருவரின் வாழ்க்கை, சுகநலங்கள் பற்றியும் விசாரித்தார்கள்.

💥அப்பெண்ணோ தங்களது இல்லற நெருக்கடியையும் வறுமையையும் பற்றி முறையிட்டார்
அதைக் கேட்ட இப்ராஹிம் (அலை) அவர்கள் இஸ்மாயில் வந்தால் தனது வீட்டு வாசல் நிலையை மாற்ற வேண்டும் என்று நான் கூறியதாக அவரிடம் நீ சொல் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

💥இஸ்மாயில் (அலை) அவர்கள் வீடு திரும்பியவுடன் அப்பெண் நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். தனது தந்தை கூறிய கருத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பெண்ணை இஸ்மாயில் (அலை) அவர்கள் மணவிலக்கு செய்து விட்டார்கள்.

💥அதற்க்கு பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தாரின் "முழாத் இப்னு அம்ர்" என்பவன் மகளைத் திருமணம் செய்தார்.

3.இஸ்மாயில் (அலை) அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டபின் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்கா வந்தார்கள் அப்போதும் இஸ்மாயில் (அலை) அவர்கள் வீட்டில் இல்லை

💥நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மருமகளிடம் மகனைப் பற்றியும் குடும்ப நிலையை பற்றியும் விசாரித்தார்கள் அதற்க்கு "அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்" என்று அவர் பதிலளித்தார்.

💥அதைக்கேட்ட நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்கள் வந்தால் தனது வீட்டு வாசலின் நிலையை தக்கவைத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறியதாக, இஸ்மாயிலிடம் சொல்! என்று சொல்லிவிட்டு ஃபாலஸ்தீனம் சென்றார்கள்.

👍நான்காம் சந்திப்பு தொடர்ச்சியை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரிலே காண்போம்👍


✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment