Thursday 5 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

பகுதி - 4⃣

♻நாடு துறந்த கஹ்லான் வம்சத்தினர் நான்கு வகைப்படுவர்.!!!

💠1. அஜிது கிளையினர்.

💠2.லக்ம் மற்றும் ஜுதாம்

💠3.பனூ தைய்

💠4. கின்தா

🔸🔹🔸🔹🔸

♻1. அஜ்து கிளையினர்

🔆இவர்கள் தங்களின் தலைவர் இம்ரான் இப்னு அம்ர் முஜைக்கியாஃ என்பவன் ஆலோசனைகிணங்க நாடு துறந்தனர்.!!!

🔆இவர்கள் யமன் நாட்டின் பல இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்து , தங்களுக்கு விருப்பமான பகுதிகளில் தங்கினர்.

🔆இவ்வம்சத்தில் யார் எங்கு தங்கினர் என்ற விபரம் வருமாறு.!!

🔆இம்ரான் இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் உமான் (ஒமன்) நாட்டில் சென்று தாங்கினார்.!!

🔆இவர்களை உமான் நாட்டின் அஜ்து வம்சத்தினர் என்று சொல்லபடுகின்றது.!!

🔆நஸ்ர் இப்னு அஜ்து குடும்பத்தினர் துஹாமா என்ற இடத்திற்கு சென்று தாங்கினர்.!!

🔆இவர்களை ஷனூஆ அஜ்து வம்சத்தினர் என கூறப்படும்.!!

🔆ஸஃலபா இப்னு அம்ர் முஜைகியா என்பவர் ஹி ஜாஸ் பகுதிக்கு சென்று ஸஃலபா மற்றும் தூ கார் என்ற இடங்களுக்கிடையில் தனது குடும்பத்துடன் தாங்கினார்.!

🔆அவரது பிள்ளைகள் , பேரன்கள் பெரியவர்களாகி  நன்கு வலிமை பெற்றவுடன் அங்கு இருந்து புறப்பட்டு மதினா நகர் வந்து தாங்கினார்கள்.!!

🔆இந்த ஸஃலபாயுடைய மகன் ஹஸாவின் பிள்ளைகள் தான் அவ்ஸ் , கஸ்ரஜ் என்ற இருவரும்.

🔆இவ்விருவரில் இருந்தே அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வம்சங்கள் தோன்றின.!!

🔆அஜ்து வம்சத்தை சேர்ந்த ஹாஸா இப்னு அம்ர் குடும்பத்தினர் ஹி ஜாஸ் பகுதியில் மர்ளுல் ளஹ்ரான் என்ற இடத்தில் தங்கினர்.

🔆சிறிது காலத்திற்கு பின் மக்கா மீது படையெடுத்து அங்கு வசித்த ஜுர்ஹும் வம்சத்தவர்களை வெளியேற்றி விட்டு மக்காவை தங்கள் ஊராக ஆக்கி கொண்டனர்.!!

🔆இந்த ஹாஸாவின் வம்சத்திற்கு "குஜா ஆ" என்ற பெயரும் உண்டு.!!

🔆ஜஃப்னா இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் சிரியா சென்று தாங்கினார்.!!

🔆இவர் சந்ததியினர் தான் வருங்காலத்தில் சிரியாவை ஆட்சி செய்த கஸ்ஸானிய மன்னர்கள் ஆவர்.!!

🔆சிரியா வருவதற்கு முன் ஜஃப்னா இப்னு அம்ர் ஹி ஜாஸ் பகுதியில் உள்ள கஸ்ஸான் என்ற கிணற்றுக்கு அருகில் குடியேறி சில காலங்கள் தங்கியிருந்தனர்.!!

🔆இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்களுக்கு ஹஸ்ஸானியர்கள் என்று பெயர் வந்தது.!!

🔆கஅப் இப்னு அம்ர் , ஹாஸ் இப்னு அம்ர் , அவ்ஃப் இப்னு அம்ர் போன்ற சிறிய சிறிய குடும்பத்தவர்களும் மேற் கூறப்பட்ட பெரிய கோத்திரங்களுடன் இணைந்து ஹி ஜாஸ் மற்றும் சிரியாவில் குடிபெயர்ந்தனர்!!

🔰தொடரும்.....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment