Friday 20 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு -பகுதி - 9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 9⃣

💥4.நாண்காம் முறை நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் வந்தபோது தனது மகனை சந்தித்தார்கள். இஸ்மாயில் (அலை) அவர்கள் "ஜம் ஜம்" கினற்றருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது அம்பைக் கூர்மைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

🔆தந்தையைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்து தங்களது அன்பை பரிமாரிக்கொண்டார்கள்
இப்பயனத்தில் தான் இருவரும் இனைந்து கஃபதுல்லாஹ்வை கட்டி அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க மக்களை ஹஜ்ஜிக்கு அழைத்தார்கள்.
(ஸஹிஹூல் புகாரி)


💥இரண்டாவது மனைவியின் மூலம் நபி இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை அல்லாஹ் வழங்கினான் அவர்களின் பெயர்கள் கீழ் உள்ளது👇🏼

1.நாபித் (நபாயூத்)
2.கைதார்
3.அத்பாஈல்
4.மிபுஷாம்
5.மிஷ்மாஃ
6.தூமா
7.மீஷா
8.ஹூதத்
9.தீமா
10.யதூர்
11.நஃபீஸ்
12.கைதுமான்

👆🏽பிற்காலத்தில் இந்த பன்னிரண்டு பிள்ளைகள் வழியாகத்தான் பன்னிரண்டு கோத்திரங்கள் உருவாகின.

💥இவர்கள் அனைவரும் பல காலங்கள் மக்காவில் வசித்தனர்
யமன்,சிரியா,மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தினர்

💥சில காலங்கள் கழித்து இவர்களில் பலர் அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலும் அதன் வெளியிலும் குடியேறினர் நாளடைவில் நாபித்&கைதார் குடும்பங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் போய் விட்டது😌

💥ஜாஸின் வடக்குப் பகுதியில் நாபித் என்பவன் பிள்ளைகள் நன்கு வளர்ச்சி பெற்று முன்னேறி  "பத்ரா"என்ற ஊரை தலைநகராகக் கொண்டு வலுமிக்க ஓர் அரசாங்கத்தை நிறுவினர். இந்நகரம் (உர்தூன்) ஜோர்டானின் தெற்கே வரலாற்றுப் புகழ் வாழ்ந்த பழங்கால நகரமாகும்.


👆🏽இவகளின் அரசாட்சிக்கு பனிந்தே அங்குள்ளோர் வாழ்ந்தனர்.

💥இவர்களை அப்போது வாழ்ந்த எவராலும் இவர்களை எதிர்க்கவோ, புறக்கனிக்கவோ முடியவில்லை.
இறுதியாக ரோமர்கள் இவர்களின் அரசாங்கத்தை அழித்தனர்.

👆🏽இந்த நாபித்தின் வம்சத்திற்க்கு "நிபித்தி வம்சம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு.

👍மற்றொரு பெயரை அடுத்த தொடரிரின் தொடர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் கானலாம்👍

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment