Tuesday 17 May 2016

ஸலாம்-பகுதி - 4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 4⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரிலே கணவன் & மனைவியிடையே ஸலாம் கூறுவதை பற்றி பார்ப்போம்👍



👨‍👨‍👦‍👦கணவன்
மனைவிக்குள்
ஸலாம் கூறிக்கொள்வது✔

🌴நம்மில்
பலர் நண்பர்களிடத்தில்
ஸலாம் கூறிக்கொள்வார்கள்.

🌴ஆனால்
தன்னுடைய வீட்டார்களை அல்லதுஉறவினர்களை சந்திக்கும் போது சலாம்கூறமாட்டார்கள்.

🌴 புதிதாக
 சலாம்கூறுவதற்கு கூச்சமும் உறவும்அவர்களுக்கு தடையாக அமைந்துவிடுகின்றது.

🌴 கணவன்மனைவியாக இருந்தாலும் தந்தைமகனாக இருந்தாலும் சலாம் கூறுவதற்கு தயங்கக்கூடாது.

🌴சிந்திக்க வேண்டாமா⁉

🌴பேசக்கூடாத பேச்சுக்களை பேசுவதற்கு வெட்கப்படாத நாம் நமது நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையைகடைபிடிக்க
வெட்கப்படுவது ஏன்⁉

⁉நமது நபி (ஸல்) அவர்களின் மனைவிஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரைவிட அதிக வயது குறைந்தவர்கள்.

🌴ஆனாலும்
 நபி (ஸல்) அவர்கள்
ஆயிஷா (ரலி)
அவர்களிடம் வரும்போது சலாம்கூறி நுழையும்
பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

 📓அல்லாஹ்வின்
தூதர் (ஸல்)அவர்கள் என்னிடம் வந்து சலாம்
கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்?என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் :
ஆயிஷா (ரலி)நூல் : புகாரி (2661)

 
📓நபி (ஸல்) அவர்கள்
புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச்சென்று
விட்டாலே
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்றுகூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம்வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும்அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும்உண்டாகட்டும்.) தங்களின் (புதிய)துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்?பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்குசுபிட்சம் வழங்கட்டும்) என்று(மணவாழ்த்துச்) சொன்னார்கள். பிறகுநபி (ஸல்) அவர்கள் தங்களின்துணைவியர் அனைவரின்இல்லங்களையும் தேடிச் சென்றுஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னதுபோன்றே (முகமன்) சொல்ல அவர்களும்ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னதுபோன்று (பிரதிமுகமனும்மணவாழ்த்தும்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (4793)

⁉அன்பு சொந்தங்களே⁉

⁉மார்க்கம் கற்றுதந்த விசயத்தை நாம் செயல்படுத்த தயங்குவது ஏன்⁉

⁉நமது மார்க்கம் எதையும் நமக்கு வீணாக கற்றுதரவில்லை⁉

⁉நீங்கள் இன்ஷா அல்லாஹ் தாங்கள் மனைவியிடம் ஸலாம் கூறி பேசும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்

⁉இன்ஷா அல்லாஹ் குடும்பத்தில் பல குழப்பங்கள் குறையும்👍


    💥  தொட.....ரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 15 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment