Wednesday 11 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி -5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 5⃣

🔱லக்ம் மற்றும் ஜுதாம் ⚜

🗺இவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு நாடுகளில் குடிபெயர்ந்தனர்.!!

🔱லக்ம் வம்சத்தில் வந்த நஸ்ர் இப்னு ரபீஆ என்பவன் சந்ததியினர் தான் ஹுரா நாட்டை ஆண்ட அரசர்கள்.!!

🔱அந்த அரசர்களை "முனாதிரா" என்று அழைக்கப்பட்டது.!!.

⭕பனூ தைய்

⚜அஜ்த் வம்சத்தினர் யமனிலிருந்து குடிபெயர்ந்தவுடன்  இந்த கோத்திரத்தினரும் அரபிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிக்கு சென்று அஜஃ , சல்மா என்ற இரு மலைகளுக்கிடையில் குடியேறினர் .!!


⚜பிற்காலத்தில் அந்த மலைக்கு "தைய்" மலைகள் என்று பெயர் வந்தது.!!

⭕கின்தா

🗺இந்த கோத்திரத்தினர் பஹ்ரைனில் குடியேறினர்.!!

🔅அங்கு அவர்களுக்கு பல சிரமங்கள் எற்படவே மீண்டும் எமன் நாட்டில் ஹழ்ர மவுத் என்ற நகரில் குடியேறினர்.!!

🔅அங்கும் அவர்களுக்கு சிரமம் ஏற்படவே அரபிய தீபகற்பத்தின் நஜ்து பகுதியில் குடியேறி ஒரு பெரும் அரசாங்கதை நிறுவினர்.!!

🔅சில காலங்குள்ளாகவே அவர்கள் அரசாங்கம் அழிந்து சுவடுகள் தெரியாமல் போயிற்று.

💠ஹிம்யர் வம்சத்தைச் சேர்ந்த 'குழாஆ' என்ற கோத்திரத்தார் யமனிலிருந்து வெளியேறி 'மஷாபுல் இராக்' என்ற பகுதியில் ''பாதியத்துஸ் ஸமாவா'' என்னும் ஊரில் குடியேறினர்.!!

💠குழாஆ வம்சத்தை சேர்ந்த சில பிரிவினர் "மஷாஃபுஷ் ஷாம்" என்ற பகுதியிலும் ஹிஜாஸ் மாநிலத்தின் வடக்கு பகுதியிலும் குடியேறினர்.!!

⭕இதற்கு முன் கூறப்பட்ட அல் அரபுல் முஸ்தஃபாவின் முதன் முதலான பாட்டானார் நபி இப்ராஹிம்(அலை) ஆவார்.!!


🔆நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் ஈராக் நாட்டில் ஃபுராத் நதியின் மேற்கு கரையில் கூஃபாவிற்கு அருகாமையில் உள்ள உர் என்ற ஊரை  சேர்ந்தவர்கள் .!!

🕵நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பம் உர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களின் சமுக சமய பண்பாடுகள் குறித்து பல விரிவான தகவல்கள் அகழ்வாராச்சிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி முலம் கிடைத்து உள்ளன.!!


🔆இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் ஊரில் இருந்து வெளியேறி ஹாரான் மற்றும் ஹர்ரான் எனும் ஊரில் குடியேறினர்.!!

🔅சில காலத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு ஃபாலஸ்தினம் நாட்டில் குடியேறினர்கள்.!! பாலஸ்தீனை தனது அழைப்பு பணிக்கு மையமாக ஆக்கி கொண்டு அங்கும் அதன் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை ஒரே இறைவன் பக்கம் அழைத்தார்.!!

🔅ஒரு முறை மனைவி சாராவுடன் அருகில் உள்ள ஊருக்கு சென்றார்கள் , அன்னை சாரா மிக அழகிய தோற்றமுடையவராக இருந்ததை அறிந்த  அவ்வூரின் அநியாயகார அரசன் அவர்களை அழைத்து வர செய்து அவர்களிடம் தவறான முறையில் நடக்க முயன்றான்.!! அன்னை சாரா அவனிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்.!!
அவர் சாராவை நெருங்க முடியாத படி அல்லாஹ் அவனை ஆக்கிவிட்டான்.!!

🔅அல்லாஹ்விடம் சாரா மிகவும் மதிப்புற்குரியவர் மேலும் நல்லொழுக்க சீலர் என்பதை இதன் மூலம் அறிந்த அந்த அந்நியாயக்காரன் சாராவின் சிறப்பை மெச்சி அல்லது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ள சாராவுக்கு பணி செய்ய ஒரு அழகிய அடிமை பெண்னை வழங்கினான்.!

🔅 சாரா அவர்கள் அப்பெண்னை தன் கணவர் இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கிவிட்டார்.!! அந்த பெண்தான் அன்னை ஹாஜிர் ஆவார்.! (ஸஹீஹ் புகாரி)

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment