Saturday 14 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 7⃣

🍃இப்ராஹிம் (அலை) தமது மனைவியையும் பிள்ளையையும் மக்காவில் தங்க வைப்பதர்க்கு முன்பே மக்கா வழியாக இரண்டாவது ஜுர்ஹூம் கோத்திரத்தார் போக வர இருந்தார்கள்.

✴அன்னை ஹாஜர் மக்காவில் வந்து தங்கி தண்ணீர் வசதியும் ஏற்ப்பட்டப்பின் அதாவது இஸ்மாயில் (அலை) வாலிபமடைவதற்க்கு முன்பு இவர்கள் குடியேறியுள்ளார்கள்.

✳இவ்வாறே ஸஹீஹூல் புகாரியில் வந்துள்ளது
இதிலிருந்து இவர்கள் மக்காவின் எப்பகுதியிலும் இதற்க்கு முன் குடியிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.

✳அதே நேரம் தான் விட்டு வந்த மனைவி மற்றும் மகனை சந்திக்க நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் சென்று வந்தார்கள். மொத்தம் எத்தனை  முறை சந்திக்கச் சென்றார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.

🚫எனினும் நான்கு முறை சென்றதற்க்கான உறுதிமிக்கச் சான்றுகள் உள்ளன.

🏮அந்த நான்கு முறைகள் வருமாறு

1⃣.இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கிறான் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள்  தனது மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து அல்லாஹ்விர்க்கு தியாகம் செய்வது போல் கனவு ஒன்று கண்டார்கள் அக்கனவை அல்லாஹ்வின் கட்டளை என்று உணர்ந்து அதை நிறைவேற்ற மக்கா வந்தார்கள் இது குறித்து பின் வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்👇🏻

📓ஆகவே அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்க்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்து பலியிட) முகங்குப்புறத் கிடத்தியபோது நாம் "இப்ராஹுமே" என நாம் அழைத்து உண்மையாகவே நீங்கள்  உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்துவிட்டீர்கள் என்றும் நன்மை செய்பருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம் என்றும் கூறி நிச்சயமாக இது  மகத்தானதொரு பெரும் சொதனையாகும் (என்றும் கூறினோம்) ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

(அல்குர்ஆன் 37 : 103-107)

📄இஸ்ஹாக்கைவிட இஸ்மாயில் (அலை) பதிமூன்று ஆண்டுகள் மூத்தவர் "தவ்ராத்"வேதத்தில் "தக்வீன்" என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

💥மேலும் இச்சம்பவத்தை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனங்களிலுருந்து இந்நிகழ்ச்சி இஸ்ஹாக் (அலை) பிறப்பதர்க்கு முன் நடந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது ஏனெனில் மேன்மை மிகு குர்ஆனில் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட முயன்ற நிகழ்ச்சி முழுவதும் கூறப்பட்ட பிறகு
அதை அடுத்தே இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறப்பார் என்ற நற்செய்தி கூறப்பட்டது.

💥ஆக இதிலிருந்து இஸ்மாயில் (அலை) அவர்களை அறுப்பதற்க்காக நபி இப்ராஹிம் (அலை)  அவர்கள் ஒரு முறை மக்கா சென்றுள்ளார்கள் என்பதும்

🔸அப்போது இஸ்மாயில் (அலை) அவர்கள் வாலிபமடையவில்லை என்பதும் தெரிய வருகிறது.

💥மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமானது!!!!!

✴அடுத்த தொடரிலே பார்ப்போம்.

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment