Thursday 5 May 2016

☝🏻படைத்தவன் ஒருவனே!!☝🏻

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☝🏻படைத்தவன் ஒருவனே!!☝🏻

🌴என் அருமை சகோதர சகோதரிகளே!!!

☝🏻படைத்தவனை வணங்க வேண்டிய நாம் ஏன் படைப்புகளை ஏன் வணங்குகிறோம்⁉

⁉சிந்திக்க வேண்டாமா⁉

🌴அன்பார்ந்தவர்களே இந்த பதிவை படித்தவுடன் சற்று சிந்தித்துப் பாருங்கள் நாம் யாரை எதை இறைவனாக எடுத்து கொண்டோம் அதற்கு அந்த தகுதிகள் இருக்கிறதா என்று??

💫மனிதன் இயற்கையிலேயே நன்மை தீமையை, உண்மை பொய்யை பிரித்தறியும் பகுத்தறிவு உடையவன்.

💫இந்த பண்புகளை வைத்து மனிதன் அனைத்தையும் பிரித்து அறிய முடியும்.

💫இந்த பண்பு வணக்கத்திற்குரியவன் ஓரே இறைவன்  என்பதை அறியவும் உதவுகிறது.

💫மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் அனைவரும் இந்த இயற்கைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்டவர்களாக ஒரே இறைவனுக்கு கீழ்படிபவராகவே பிறக்கின்றனர்.

💫ஆனால் அவர்களின் பெற்றோரே அவர்களை தங்களின் கலாச்சாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் வளர்த்து விடுகின்றனர்.

☝🏻இறைவன் அவனது தன்மையை நமக்கு தெளிவாக கூறுகிறான்👇🏼

☝🏻அல்லாஹ் ஒருவனே!!!

☝🏻அவன் எந்த தேவையுமற்றவன்!!!

☝🏻அவன் யாரையும் பெறவுமில்லை!!!

☝🏻அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமில்லை!!!

☝🏻அவனுக்கு நிகராக எவருமில்லை !!!

என்று நபியே! நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1-4)

☝🏻ஒரே இறைவன் தன்னை பற்றி தெளிவாக அழகாக கூறி இருக்கும் பொழுது நாம் ஏன் அவனுக்கு மாறு செய்கிறோம் சிந்திக்க வேண்டாமா⁉⁉

💫இஸ்லாத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மனிதன் தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கி அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்.

💫இறைத்தூதர்கள்
இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள்.

💫அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள்.

💫இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள்.

👆🏽இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.

☝🏻இறைவன் ஒருவனே!!

☝🏻அவன் மட்டுமே படைக்கும் வல்லமை கொண்டவன்.

☝🏻அவனே நம்மையும் நாம் வாழும் பூமியையும்

☝🏻நாம் காணும் கடல், மலை, விண், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் படைத்தான்.

☝🏻வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே.

☝🏻அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல.

☝🏻எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்!!!

☝🏻அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன.

☝🏻அதனை நாம் அனைரும்
அந்த ஒரே இறைவனை  பின்பற்ற வேண்டும் எனபதே இந்த பதிவின் நோக்கமாகும்.

 
☝🏻நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
(அல்குர்ஆன் : 7:194)

☝🏻எல்லாம் வல்ல ஏக இறைவன் அவனுக்கு மட்டும் தலை வணங்கும் பாக்கியத்தை நமக்கு வழங்குவானாக!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment