Thursday, 26 May 2016

🏤புதுமனை புகுவிழா-பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


            ✳பகுதி-3⃣

🏤புதுமனை புகுவிழா❌

✳இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்த ஆசைப்பட்டால் விருந்து  கொடுங்கள் அதற்க்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதே‼

       ❌ஆனால்❌

🚫கடன் இல்லாமல் மேலதிகமாக வசதி வாய்ப்புகள் இருந்தால் சொந்த வீட்டு மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக் கொள்வதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.

🌴நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறது' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்' என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை' என்று கூறினர்.

பின்னர் அவர்கள் 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்று சொல்ல மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 7281

❌ஆனால் பலர் கடன் வாங்கி

❌மார்கத்தில் ஹராமான வட்டி வாங்கி இது போன்ற விழாக்களை ஆடம்பரமாக செய்கிறார் இது போன்று செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயலாகும்.

✔வட்டி பற்றி நாம் அனைவரும் அறிந்ததே அது எந்த அளவிற்க்கு கொடிய பாவம் என்று அது சம்மந்தமாக நாம் நமது மக்கள் மீடியாவில் பதிவுகள் போட்டுள்ளோம்.

✳தேவைபடுவோர் நமது Facebook idயில் சென்று பார்த்துக் கொள்ளளாம்.


🚫அதே போல் கடன் சம்மந்தமாக இன்ஷா அல்லாஹ் மக்கள் மீடியாவில்  சில பதிவுகள் போடுகிறோம்👍

🚫இந்த பதிவின் நோக்கம் புதுமனை புகுவிழா என்ற பெயரில் மார்க்கத்தில் கூறாத விசயத்தை மார்க்கம் என்ற பெயரில் நமது இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் செய்கின்றனர் அத்தகைய செயலை அவர்கள் விட்டு விட்டு மார்க்கம் எதை நமக்கு கற்றுத்தந்துள்ளதோ
👍எதை செய்தால் நாம் வெற்றி அடைவோமோ‼
👍எதை செய்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்வானோ‼
👍எதை செய்தால் அல்லாஹ்வின் தூதர் மகிழ்ச்சி அடைவார்களோ‼

🌴அதை ஆராய்ந்து மார்க்க அரிஞர்களிடம் கேட்டு தெளிவு பெற்று செய்தால் நமது ஈருல வாழ்க்கையும் வெற்றி அடையும்👍

💐💐💐💐💐💐💐💐💐💐💐
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 26 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment