Thursday 19 May 2016

ஸலாம்-பகுதி - 5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 5

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரில்  ஸலாம் கூறும் முறைகள் சில வற்றைப் பார்ப்போம் 👍

🌴ஸலாத்தை நாம் அனைவருக்கும் கூற வேண்டும் பெரியவர் சிறியவர் என அனைவருக்கும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் கூறவேண்டும் இதை தான் நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது.

🌴நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முத­ல்) ஸலாம் சொல்லட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)

நூல் : புகாரி (6231)

💥அனஸ் (ரலி­) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )

💥யாராவது தூரத்தில் இருந்தால் அவர்களுக்கு நாம் ஸலாம் கூற விரும்பினால் இஷாரா மூலம் ஸலாம் கூறலாம்.

🌴பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாச­ல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.

🔳அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி­)

🔘நூல் : திர்மிதி (2621)

🌴நாம் நமது சகோதரரை எத்தனை முறை சந்தித்தாலும் ஸலாம் கூறலாம்.

🌴நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)

🔘நூல் : அபூ தாவூத் (4523)

💥தொட.....ரும்....


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 19 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment