Sunday, 29 May 2016

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு -பகுதி-16

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ *முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு -பகுதி-16

✳மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன் நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.

💥 கி.பி. 300லிருந்து இஸ்லாம் நுழையும்வரை

🌴இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘இரண்டாம் ஹிம்யரிய்யா அரசு’ என அழைக்கப்பட்டது. அப்போது ஆட்சி செய்தவர்கள் ஸபஃ, தூரைதான், ஹழர மவ்த், யம்னுத் அரசர்கள் என அழைக்கப்பட்டனர்.

🌴இக்காலத்தில் உள்நாட்டு குழப்பங்கள், குடும்பச் சண்டைகள், புரட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன.

🌴அதன் காரணமாக அவர்களது அரசாட்சி முடிவுக்கு வந்தது இக்காலத்தில் ரோமர்கள் ‘அத்ன்’ நகரைக் கைப்பற்றினர் ஹம்தான் மற்றும் ஹிம்யர் குலத்தவடையே இருந்த போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு ரோமர்களின் உதவியுடன் ஹபஷியர்கள் முதன் முதலாக கி.பி. 340ல் யமன் நாட்டை கைப்பற்றினர்.


👆🏽இவர்களின் ஆட்சி கி.பி. 378 வரை நீடித்தது.

💥அதற்குப்பின் அந்நாடு ஹபஷியர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்தது. கி.பி. 450 அல்லது 451ல் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு அவர்களது நகரங்கள் பெருத்த சேதம் அடைந்ததால், நகரங்களைத் துறந்து பல இடங்களுக்குச் சென்று குடியேறினர்.

💥இவ்வெள்ளப் பிரளயத்தை ‘சைலுல் அரிம்’ என மேன்மைமிகு குர்ஆன் கூறுகிறது.

💥கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த ‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் நஜ்ரான் வாழ் கிருஸ்துவர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான்.

💥 அவர்களை பலவந்தமாக கிருஸ்துவ மதத்திலிருந்து மாற்றிட முனைந்தான் அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும் அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி எறிந்தான்.

👆🏽இது குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்👇🏼

✳விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ் தோண்டியவர்கள் அழிக்கப் பட்டார்கள்….(அல்குர்ஆன் 85 : 4-7)

👆🏽இச்சம்பவத்தால் கிறிஸ்துவர்கள் மிகவும் கொதிப்படைந்து பழிவாங்கத் துடித்தனர் எனவே, ரோமானிய அரசர்களின் தலைமைக்கு கீழ் ஒன்றிணைந்து யமன் நாட்டின் மீது போர் புரிய ஆயத்தமாயினர்.

✳ரோம் மன்னர்கள் ஹபஷியர்களைத் தூண்டிவிட்டு அவர்களுக்கென கப்பல் மற்றும் படகுகளைத் தயார்செய்து கொடுத்தார்கள்.

✳அதன் காரணமாக ‘அர்யாத்’ என்பவன் தலைமையில் ஹபஷாவிலிருந்து 70,000 வீரர்கள் யமன் வந்திறங்கி கி.பி 525ம் ஆண்டு அதனை இரண்டாவது முறையாக கைப்பற்றினர்.

✳அர்யாத் கி.பி 549 வரை ஹபஷா மன்னன் கவர்னராக இருந்தான் அர்யாத்தின் தளபதிகளில் ஒருவனான ‘அப்ரஹா இப்னு ஸப்பாஹ் அல் அஷ்ரம்’ என்பவன் அர்யாதை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு ஹபஷா மன்னன் ஒப்புதலுடன் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான்.

👆🏽இந்த அப்ரஹாதான் இறையில்லமான கஅபாவை இடிக்க படையைத் திரட்டியவன் அவனும் அவனது யானைப் படையினரும் ‘அஸ்ஹாபுல் ஃபீல்’ என அறியப்படுகின்றனர். அந்நிகழ்ச்சிக்குப்பின் ஸன்ஆ திரும்பிய அவனை அல்லாஹ் அழித்தொழித்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ‘யக்ஸூம்’ என்பவனும் அதற்குப் பிறகு இரண்டாவது மகன் ‘மஸ்ரூக்’ என்பவனும் யமனை ஆட்சி செய்தனர்.

👆🏽இந்த இருவரும் தங்களது தந்தையைவிட குடிமக்களைக் கொடுமை செய்யும் மிகக் கொடிய கொடுங்கோலர்களாக இருந்தனர்.

🐘யானை சம்பவத்திற்குப்பின் கி.பி. 575ல் யமனியர், மஅதீ கப ஸைஃப் இப்னு தூ யஜின் அல்ஹிம்யரின் தலைமையின் கீழ் பாரசீகர்களின் உதவியுடன் யமனை ஆக்கிரமித்திருந்த ஹபஷியர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை யமனிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

💥அவரைத் தங்களது அரசராகவும் ஏற்றுக் கொண்டனர். ‘மஅதீ கப’ தனக்கு ஊழியம் செய்யவும் பயணங்களில் துணையாக இருப்பதற்காகவும் ஒரு ஹபஷிப் படையைத் தன்னுடன் வைத்திருந்தார்.

✳ அவரை அவர்கள் திடீரெனத் தாக்கி வஞ்சகமாகக் கொன்று விட்டனர் அவரது மரணத்துடன் ‘தூ யஜின்’ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.


✳ *தொட.....ரும்*....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 29 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

HAIR STYLE *பகுதி* - 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

     🎩HAIR STYLE💂🏼


         ⚔ *பகுதி* - 1⃣


🌴அஸ்ஸலாமு அலைக்கும்🌴

✳அன்பார்ந்த என் அருமை இஸ்லாமிய சகோதரர்களே‼

✳இன்று எம் இஸ்லாமிய இளைஞர்களிடம் ஒரு நோய் இருக்கிறது அந்த நோய் தொற்று நோய் போல அது ஒரு இளைஞனிடம் வந்தால் அதன் தாக்கத்தால் மற்ற இளைஞனுக்கும் தொற்று விடுகிறது அது என்னவென்றால் 👇🏼👇🏼

⚔ ஹேர் ஸ்டைல் ⚔

⚔இன்று ஹேர் ஸ்டைல் என்று சொல்லிக் கொண்டு தலையின் ஒரு பாகத்தை வழித்து விட்டு அல்லது ஒட்ட வெட்டி விட்டு மற்றொரு பாகத்தில் முடி வைப்பதும், ஸ்டைல் என்று சொல்லிக் கொண்டு பின்னால் முடியை தொங்க விடுவது என்று செய்து கொண்டு இருக்கிறார்கள்.

😌அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.

✳🔰இவர்கள் செய்வதை பார்த்தால் ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இவர்களின் அறியாமையை நினைக்கும் அந்த வருத்தம் கோபத்தை மிகைத்து விடுகிறது

🚫இந்த இளைஞர்கள் எதை பார்த்து கற்று கொண்டார்கள் என்றால்⁉

❌ஃபுட்பால் (football ) பிளேயர்ஸ்

❌ கிரிக்கெட் (Cricket ) பிளேயர்ஸ்

❌ஹீரோக்கள் (Actors) (கூத்தாடிகள்)

👆🏽இவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தன்னையும் அவர்களை போன்று குறிப்பாக ஹேர் ஸ்டைல் அவர்களை போன்று வைக்கின்றனர்.

⚔சரி இது நல்லா இல்லை என்றாலும் பரவாயில்லை விட்டு விடலாம்

❌ஆனால் *மார்க்கத்திற்கு எதிரானது* மார்க்கம்தடுத்தது என்பதற்காக தான் இந்த பதிவு❕

✳தொட.....ரும்‼

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

🔮 இஸ்லாமிய *மார்க்க செய்திகளை அழகிய* முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 28 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி 15

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 15


🚫கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை

✳யமன் நாட்டு அரசாட்சி இக்காலக்கட்டத்தில் ‘ஸபா’ என அழைக்கப்பட்டது. இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் ‘மக்ப்’ என்ற தங்களது புனைப் பெயரைத் தவிர்த்து விட்டார்கள்.

✳அதன் ஆட்சியாளர்களை ஸபா மன்னர்கள் என அழைக்கப்பட்டது. ‘ஸிர்வா’ என்ற நகருக்கு பதிலாக ‘மஃரப்’ என்ற நகரை தங்களது தலைநகராக்கிக் கொண்டனர். மஃரப் நகரத்தின் சிதைந்த கட்டடங்கள் ‘ஸன்ஆ’ நகரின் கிழக்கே 192 கிலோ மீட்டர் தொலைவில் இன்றும் காணப்படுகின்றன.

 🚫கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை

🏮இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘முதலாம் ஹிம்யரிய்யா அரசு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஏனெனில், ஹிம்யர் குலத்தவர் ஸபாவை வெற்றி கொண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

🏮முன்பு அந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ‘ஸபா’ அரசர்கள் மற்றும் ‘தூரைதான்’ அரசர்களென அழைக்கப்பட்டனர்.

✳இம்மன்னர்கள் ‘மஃரப்’க்கு பதிலாக ரைதான் என்பதை தங்களது தலைநகராக அமைத்துக் கொண்டனர் ரைதான் நகருக்கு ‘ளிஃபார்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

🏮அந்நகரின் சிதைவுகள் ‘யர்யம்’க்கு சமீபமாக மதூர் எனும் மலையின் அருகாமையில் காணப்படுகின்றன இக்காலத்தில்தான் ஸபா அரசுக்கு அழிவும் வீழ்ச்சியும் ஆரம்பமாயின. அவர்களின் வணிகங்களும் நசிந்தன.

‼அதற்குரிய காரணங்களாவன:

1) ‘நிப்த்’ இனத்தவர் ஹிஜாஸின் வடபகுதியில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர்.

2) ரோமர்கள் மிஸ்ர் (எகிப்து), ஷாம் (சிரியா) மற்றும் ஹிஜாஸின் வடபகுதியை ஒட்டியுள்ள நகரங்களில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி யமன் நாட்டு அரசர்களின் வியாபாரத்திற்கான கடல்மார்க்கத்தையும் அடைத்து விட்டனர்.

3) அவர்களது கோத்திரங்களுக்குள் சண்டை சச்சரவுகள் தோன்றின.

🏮ஆக, இம்மூன்று காரணங்களால் அவர்களது ஆட்சி வீழ்ச்சி கண்டது மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன் நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.


 ✳💥தொட.....ரும்....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 27 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday, 26 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 14🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 14🔰

🌴முடியரசர்களின் விபரம் 👇🏼

🚫யமன் நாட்டு அரசர்கள், ஷாம் நாட்டு அரசர்கள், (இவர்களை கஸ்ஸானின் குடும்பத்தவர்கள் என வரலாற்றில் கூறப்படுகிறது)

🚫ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர வேறு சில அரசர்களும் இருந்தனர். அவர்களுக்கு முறையாக முடிசூட்டப்படவில்லை. இந்த அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

🌴 யமன் நாடு (ஏமன்)

🚫அல் அரபுல் ஆபா’ எனும் அரபியர்கள் ‘ஸபா கூட்டத்தினர்’ என யமனில் புகழ் பெற்றிருந்த மிகப்பழமையானவர்கள். அவர்கள் கி.மு. 25 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்ததாக ‘அவ்ர்’ எனும் நகரில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 11 ஆம் நூற்றாண்டில் அவர்களது ஆட்சியும் ஆதிக்கமும் செழிப்படைய ஆரம்பித்தது.

👆🏽அவர்களது காலத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்

1) கி.மு. 1300 லிருந்து கி.மு. 620 வரை

🚫இக்காலகட்டத்தில் அவர்களது நாடு ‘மயீனிய்யா’ என அழைக்கப்பட்டது. நஜ்ரானுக்கும் ஹழர மவ்த்துக்குமிடையே உள்ள ‘ஜவ்ஃப்’ எனும் பகுதியில் அவர்களது ஆட்சி தோன்றி வளர்ச்சி பெற்று ஹிஜாஸின் வட பகுதியான ‘மஆன்’ மற்றும் ‘உலா’ வரை பரவியிருந்தது.

✳மயீனியா அரசாங்கத்தின் ஆதிக்கம் அரபிய நாடுகளின் எல்லைகளுக்கு வெளியேயும் விரிவடைந்திருந்ததாக கூறப்படுகிறது. வணிகமே அவர்களது முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. அவர்கள்தான் மஃரப் நகரில் யமனுடைய வரலாற்றில் புகழ்பெற்ற மிகப்பெரும் அணைக்கட்டைக் கட்டினார்கள்.

✳அதனால் அவர்களது நிலங்கள் செழிப்படைந்தன ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர் இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்👇🏼


☝🏻அவர்கள் (அல்லாஹ்வை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 25 : 18)

🚫இக்காலக்கட்டத்தில் அவர்களது அரசர்கள் ‘மக்பு ஸபஃ’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்பட்டனர் அவர்களது தலைநகரம் ஸிர்வாஹ் ஆகும்.

🚫மஃப் எனும் நகலிருந்து வட மேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் ஸன்ஆவுக்குக் கிழக்கே 142 கிலோ மீட்டர் தொலைவிலும் அந்நகரத்தின் சிதிலங்கள் காணக்கிடைக்கின்றன.

🚫அந்நகரம் இன்று ‘குரைபா’ எனும் பெயரில் அறியப்படுகிறது. இவ்வரசர்களின் எண்ணிக்கை 22 லிருந்து 26 வரை இருந்தது.

✳💥தொட.....ரும்....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 26 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

🏤புதுமனை புகுவிழா-பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


            ✳பகுதி-3⃣

🏤புதுமனை புகுவிழா❌

✳இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்த ஆசைப்பட்டால் விருந்து  கொடுங்கள் அதற்க்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதே‼

       ❌ஆனால்❌

🚫கடன் இல்லாமல் மேலதிகமாக வசதி வாய்ப்புகள் இருந்தால் சொந்த வீட்டு மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக் கொள்வதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.

🌴நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறது' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்' என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை' என்று கூறினர்.

பின்னர் அவர்கள் 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்று சொல்ல மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 7281

❌ஆனால் பலர் கடன் வாங்கி

❌மார்கத்தில் ஹராமான வட்டி வாங்கி இது போன்ற விழாக்களை ஆடம்பரமாக செய்கிறார் இது போன்று செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயலாகும்.

✔வட்டி பற்றி நாம் அனைவரும் அறிந்ததே அது எந்த அளவிற்க்கு கொடிய பாவம் என்று அது சம்மந்தமாக நாம் நமது மக்கள் மீடியாவில் பதிவுகள் போட்டுள்ளோம்.

✳தேவைபடுவோர் நமது Facebook idயில் சென்று பார்த்துக் கொள்ளளாம்.


🚫அதே போல் கடன் சம்மந்தமாக இன்ஷா அல்லாஹ் மக்கள் மீடியாவில்  சில பதிவுகள் போடுகிறோம்👍

🚫இந்த பதிவின் நோக்கம் புதுமனை புகுவிழா என்ற பெயரில் மார்க்கத்தில் கூறாத விசயத்தை மார்க்கம் என்ற பெயரில் நமது இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் செய்கின்றனர் அத்தகைய செயலை அவர்கள் விட்டு விட்டு மார்க்கம் எதை நமக்கு கற்றுத்தந்துள்ளதோ
👍எதை செய்தால் நாம் வெற்றி அடைவோமோ‼
👍எதை செய்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்வானோ‼
👍எதை செய்தால் அல்லாஹ்வின் தூதர் மகிழ்ச்சி அடைவார்களோ‼

🌴அதை ஆராய்ந்து மார்க்க அரிஞர்களிடம் கேட்டு தெளிவு பெற்று செய்தால் நமது ஈருல வாழ்க்கையும் வெற்றி அடையும்👍

💐💐💐💐💐💐💐💐💐💐💐
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 26 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday, 25 May 2016

புது மனை புகுவிழா-பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


            ✳பகுதி-2⃣

🏤புது மனை புகுவிழா🏤


✳புதுமனை புகுவிழா என்ற பெயரில் பல அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன அவற்றில் சிலவற்றை இங்கே தொகுக்கிறோம்👇🏼

🌴புதுமனை புகுவிழா என்ற பெயரில் முட்டாள்தனமான அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன.

🌴புதிய வீடு குடி சென்றால் முதலில் பால் காச்ச வேண்டுமாம் அதற்க்கும் ஓர் காரணம் சொல்வார்கள் அதாவது
  பால் காய்ச்சி குடி புகுந்தால் பால் பொங்குவது போன்று செல்வம் பொங்குமாம்

🌴வேடிக்கையான விசயம் இதுபோல் மார்க்கம் கூறாத பல அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.

🌴நாம் சிந்திக்க வேண்டும் எத்தனையோ மக்கள் வீடில்லாமல் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை ஓட்டும் போது, சொந்த வீட்டுக் கான ஏக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை கட்டிடங்களில் குடி இருக்கும்  போது சொந்தமாக வீடு கட்டி குடி போகுபவர்கள் இறைவனுக்கு நிறைய நன்றிச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

🌴ஆனால் இன்று நடப்பதோ வேதனை தரக்கூடிய விசயமாக உள்ளது.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்.


✳இறைவன் உங்களுக்கு உங்கள் வீடுகளில் மன அமைதியையும் ஓய்வையும் ஏற்படுத்தியுள்ளான்' (அல் குர்ஆன் 16:80)

✳இது போல் நிம்மதி&அமைதி சொந்த வீடுகட்டி குடிபோகும் போது தான் கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே‼

✳அப்படிப்பட்ட இல்லத்தில் நாம் நுழையும் போது அந்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துவதை விட சிறந்தது வேறு என்ன இருக்கப்போகிறது.

✳அந்த நன்றி என்பது பால் காய்ச்சுவதிலும் இன்னும் இஸ்லாம் கூறாத விசயத்திலுமா இருக்கப்போகிறது.

⁉சிந்திக்க வேண்டாமா⁉

🚫இன்ஷா அல்லாஹ்
             🚫தொட....ரும்.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 25 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 13

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 13


🌴சுலைம் குடும்பத்தினர் மதீனாவுக்கு அருகாமையில் வசித்தனர்.

🌴 அவர்கள் வாதில் குராவிலிருந்து கைபர்வரை, மதீனாவின் கிழக்குப் பகுதி, அதன் இரு மலைப்பகுதிகள் மற்றும் ஹர்ரா வரை வசித்தனர்.

🌴அஸத் குடும்பத்தினர் ‘தீமாஃ’ நகரத்தின் கிழக்குப் பகுதிலும் ‘கூஃபா’ நகரத்தின் மேற்குப் பகுதியிலும் வசித்தனர்.

🌴அவர்களுக்கும் தீமாஃவுக்குமிடையே ‘தய்ம்’ கோத்திரத்தைச் சேர்ந்த புஹ்த்துர் குடும்பத்தவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

🌴அவ்வூருக்கும் கூஃபாவுக்கு மிடையில் ஐந்து நாட்களுக்கு உரிய நடைதூரம் இருந்தது.

🌴திப்யான் குடும்பத்தவர்கள் தீமா முதல் ஹவ்ரான் நகரம் வரையிலும் கினானாவின் சந்ததியினர் ‘திஹாமா’ பகுதியிலும் வசித்தனர்.

🌴மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குறைஷி குடும்பத்தவர்கள் வசித்தனர்.

🌴அவர்கள் ஒற்றுமை இன்றி பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர் குஸய்ம் இப்னு கிலாப் அவர்களை ஒருங்கிணைத்து குறைஷியருக்கென தனிப்பெரும் சிறப்புகளையும் உயர்வுகளையும் பெற்றுத் தந்தார்.

👍அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்👍


🚫நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

1⃣முடிசூட்டப்பட்டவர்கள்

🔸ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை.

🔸மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர்.

2⃣குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்

🔸முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன.

👆🏽இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர்.

🌴முடியரசர்களின் விபரம் பின்வருமாறு

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 25 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 24 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு 🕋பகுதி - 12

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 12

✳நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

🌴படைப்பினங்களில் (மனிதன், ஜின் என்ற இரு பிரிவில்) மிகச் சிறந்த பிரிவில் என்னைப் படைத்து அதில் (முஸ்லிம், காஃபிர்களென்று) இரு பிரிவுகளில் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான்.

🌴பிறகு கோத்திரங்களைத் தேர்வுசெய்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னைப் படைத்தான்.

🌴பிறகு குடும்பங்களைத் தேர்வுசெய்து, அதில் மிகச் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் அவர்களில் ஆன்மாவாலும் மிகச் சிறந்தவன். குடும்பத்தாலும் மிகச் சிறந்தவன்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

✳மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது

🌴அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து அவற்றில் மிகச் சிறந்த பிரிவினரில் என்னை ஆக்கி வைத்தான்.

🌴பிறகு அப்பிரிவை இரண்டாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான்.

🌴 பிறகு அவர்களை கோத்திரங்களாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த கோத்திரத்தில் என்னை ஆக்கினான்.

🌴பிறகு அவர்களைப் பல குடும்பங்களாக ஆக்கி அவற்றில் குடும்பத்தாலும் ஆன்மாவாலும் சிறந்தவர்களில் என்னை ஆக்கினான்.
(ஜாமிவுத் திர்மிதி)

✳அத்னான் சந்ததியினருடைய எண்ணிக்கை பல்கிப் பெருகியபோது அவர்கள் மழை வளம், பசுமை, செழிப்புமிக்க இடங்களைத்தேடி அரபு நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர்.

✳ அப்து கைஸ், பக்ரு இப்னு வாயில் மற்றும் தமீம் ஆகிய சந்ததியினர் பஹ்ரைனிலும், ஹனீஃபா இப்னு அலீ இப்னு பக்ர் குடும்பத்தினர் ‘யமாமா’ சென்று அங்குள்ள ‘ஹுஜ்ர்’ பகுதியிலும் குடியேறினர்.
(ஹுஜ்ர் என்பது யமாமாவின் ஒரு நகரமாகும்.)

✳பக்ர் இப்னு வாயிலின் ஏனைய குடும்பங்கள் யமாமா, பஹ்ரைன், ஸைஃப் காளிமா, அதன் அருகாமையிலுள்ள கடற்பகுதி, இராக்கின் கிராமப்புறங்கள் ஆகிய இடங்களில் குடியேறினர்.

✳தங்லிப் குடும்பத்தவர்கள் ‘ஃபுராத்’ நதிக்கரையில் குடியேறினர். அவர்களில் ஒரு பிரிவினர் பக்ர் குடும்பத்தாருக்கு அருகில் வசித்தனர்.

✳ பனூ தமீம் குடும்பத்தவர்கள் பஸராவிலும் அதன் கிராமப் பகுதிகளிலும் வசித்தனர்.

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

புது மனை புகுவிழா-பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


            ✳பகுதி-1

🏤புது மனை புகுவிழா🏤

✳அன்பு சொந்தங்களே‼

✳இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடையின் வெளிப்பாடே இந்த புதுவீடு.

✳இறைவன் கொடுத்த அருட்கொடையில் நீ செல்லும் போது

✳இறைவன் கூறாத பல அணாச்சாரம் ஏன்❓⁉

✳மனிதா நீ சிந்திக்க வேண்டாமா?

✳அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிதராத பல அணாச்சாரங்களை செய்கிறாயே⁉

✳உனக்கு எப்படி அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்⁉

🤔நீ சிந்திக்க வேண்டாமா⁉

✳இறைவன் கொடுத்த மிகப்பெரிய பாக்கியம் நாம் முஸ்லீமாக பிறந்தது அதற்க்காகவே நாம் காலத்திர்க்கும் நன்றி செலுத்த வேண்டும்.

✳ஆனால் நீ அந்த பாக்கியத்தை மதிக்காமல் இஸ்லாம் கூறும் பல அணாச்சாரங்களை செய்வது ஏன்⁉

🤔நீ சிந்திக்க மாட்டாயா⁉

✳ஓ மனிதா

✳உனது பார்வையில்

🔸மது

🔸மாதூ

🔸சூது

🔸திருட்டு

👆🏽இன்னும் இது போன்று
இதை மட்டும் தான் நீ பாவம் என நினைத்துக் கொண்டாயா⁉

🔸இல்லை 🔸இல்லை 🔸இல்லை


✳அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நீ எதை செய்தாலும் பாவம்தான் என்பதை‼

🤔சிந்திக்க மாட்டாயா⁉

✳நீ கொண்டாடும் இந்த விழாவை மார்க்கம் உனக்கு கற்று தந்தது என நினைத்துக் கொண்டாயா⁉

✳அடுத்த தொடரிலே புது மனை புகுவிழா அணாச்சாரங்கள்

             💥தொட....ரும்...

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday, 23 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 11

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 1⃣1⃣

🔸சில அறிவிப்புகளில் வந்துள்ளது

💥நபி (ஸல்) அவர்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும் போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக்கொண்டு இதற்க்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்துவிட்டனர் என்று கூறுவார்கள்.

🔸சில அறிவிப்புகளில் வந்துள்ளதாவது ;

💥நபி (ஸல்) அவர்கள் தங்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும் போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக்கொண்டு இதற்க்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்து விட்டனர் என்று கூறுவார்கள்.

👆🏽இவ்விடத்தில் மற்றொரு கருத்தும் குறிப்பிடத்தக்கது அதாவது.

💥சிலர் மேற்கூறப்பட்ட நபிமொழி பலவீனமானது என்பதால் அத்னானுக்கு மேலும் தலைமுறை பெயர்களை கூறலாம் என்கின்றனர்.

💥எனினும் அத்னானுக்கு மேல் இவ்வறிஞர்கள் கூறும் தலைமுறையில் மாறுபட்ட பெயர்களை கூறுகின்றனர் அக்கருத்துக்களை ஒருங்கிணைக்க முடியாத அளவு அதில் வேறுபாடுகள் உள்ளன.

🌴"அத்னான் மற்றும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கிடையில் நாற்பது தலைமுறைகள் உள்ளன" என்று பிரபலமான வரலாற்று அறாஞர் "இப்னு ஸஅது"(ரஹ்) கூறுகிறார்கள்.

💥இக்கால அறிஞர்களில் பெரும் ஆய்வாளராக விளங்கும் முஹம்மது சுலைமான் என்பரும் இக்கருத்தையே சரி காண்கிறார்.
மேலும் இமாம் தபரி மற்றும் மமஸ்வூதி தங்களின் பல கருத்துக்களில் இதனையும் ஒன்றாக கூறியுளார்கள்.

💥மஅதின் மகன் நஜார் என்பவர் மூலம் பல குடும்பங்கள் தோன்றின (மஅத்துக்கு "நஜார்"என்ற ஒரு மகன் மட்டும் தான் இருந்தார் என்றும் சிலர் கூறியுள்ளார்கள்).

💥நஜாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர் அவர்கள் மூலம் பெரிய வமிசங்கள் தோன்றின
1.இயாத்
2.அன்மார்
3.ரபீஆ
4.முழர்


✳நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

🌴நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத் தேர்வு செய்தான். இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் ‘கினானா’ குடும்பத்தைத் தேர்வு செய்தான். கினானா குடும்பத்தில் குறைஷியர்களைத் தேர்வு செய்தான். குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தைத் தேர்வு செய்தான். (ஸஹீஹ் முஸ்லிம்.


✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஸலாம்-பகுதி - 7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

            💥ஸலாம்💥
              💥பகுதி - 7⃣

🌴அஸ்ஸலாமு
                 அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி
            வபரகாதுஹூ🌴

🌴அன்பு சகோதரர்களே! !
நாம் ஸலாம் சம்மந்தமாக பல தொடர்களை பார்த்தோம் அல்ஹம்துலில்லாஹ் இந்த தொடரிலே ஸலாத்தை நாம் எவ்வாறு கூறுவது சிறந்தது என்று பார்த்து இந்த தொடரை முடித்துக்கொள்ளளாம்.

🌴ஸலாம் சொல்வதில் சிறப்பான முறை.

🌴ஸலாம் சொல்லும் போது “கும்” என்னும் பன்மைச் சொல்கொண்டு  இவ்வாறு சொல்வதும்,

✔அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு✔

👍(உங்கள் மீது சாந்தியும்,அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் உண்டாகுக என்றும்.

✔அதேபோல்  கூறப்பட்ட  ஸலாத்திற்கு பதில் சொல்லும் போது

✔‘கும்” என்ற பன்மைச் சொல்கொண்டு  பதில் சொல்வதுடன் அதன் ஆரம்பத்தில் “வ” என்னும் பதஹு சொய்யப்பட்ட  அரபு எழுத்தான “வாவு” கொண்டும் ஆரம்பித்து

🔸இவ்வாறு👇🏼

✔வஅலைக்கும் முஸ்ஸலாமு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு✔

✔என்று பதில் சொல்வதும் ஸலாம் சொல்வதில் மிகச்சிறப்பான முறையாகும்.

✳இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.,

✳நபி நாயகமிடத்தில் ஒரு  மனிதர் வந்தார் வந்தவர்  அஸ்ஸலாமு  அலைக்கும் என்றார்  அதற்கு  அண்ணலார் பதில் சொல்லிவிட்டு பத்து 10 என்றார்கள்.

✳அதன் பின்னர் மற்றொருவர் வந்தார் அவர் “அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி” என்று சொன்னார் அதற்கு நபிகளார் பதில் சொல்லிவிட்டு 20 இருபது என்றார்கள்.

✳அதன்பின்னர் வேறொரு நபித்தோலர் வந்து “அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு” என்றார் அதைக்கேட்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முப்பது 30 என்றார்கள்.

📓முஸ்னத் தாறமி, சுனன் அபூ தாவூத்,திர்மிதீ

✳சகோதரர்களே!!!

✔ஸலாம் சொல்லும் முறைகளில் ஆக சிறந்தது ஸலாத்தை முழுமையாக சொல்வதே👍👍

❌அலைக்கஸ் ஸலாம் என்று கூறுவது கூடாது❌

✔ நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அலைக்கஸ் ஸலாம் யாரசூலல்லாஹ்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ” அலைக்கஸ் ஸலாம் ” என்று கூறாதே. ஏனென்றால் ” அலைக்கஸ் ஸலாம் ” என்பது இறந்தவர்களின் ஸலாம் ஆகும் ” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸ‎ýலைம் (ரலி­) நூல் : திர்மதி (2646)

👍இனி வரக்கூடிய காலங்களில் ஸலாத்தை முழுமையாகவும்,அனைவருக்கும் கூறக்கூடிய நன்மக்களாக வல்ல ரஹ்மான் நமக்கு துனை புரிவானாக!!!!!!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday, 22 May 2016

ஸலாம்*பகுதி - 6

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 6⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரில்  ஸலாம் கூறும் முறைகள் சில வற்றைப் பார்ப்போம் 👍

💥நாம் ஸலாத்தை முஸ்லீம்களுக்கு மட்டும் தான் கூற வேண்டும் என்று நமக்கு மார்க்கம் கற்றுதரவில்லை அனைவருக்கும் கூறலாம்.

💥அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.


💥இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையை முஸ்லிமில்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி உண்டாகட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு.


💥முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தி அடையட்டும் என்ற பொருளும் இதற்க்குள் உண்டு.

💥இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்குக் கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் மார்க்கத்தில்  தடை ஏதும் இல்லை எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.


💥உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க புகாரி 12, 28, 6236)

👆🏽இதில் முஸ்லீம்களுக்கும் மட்டும் ஸலாம் கூறவேண்டும் என்று நமது நபி நமக்கு கற்று தரவில்லை மாறாக

"தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு''
என்று தான் கூறி உள்ளார்கள்.

💥மேலும் நமது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


✳"யூதர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று (லா என்ற எழுத்தை விட்டுவிட்டு) கூறுகின்றனர். (உம் மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927

✳யூதர்கள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக ஸலாம் கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத்தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

✳ஆக நமக்கு ஒருவர் ஸலாம் கூறினால் நாம் அதைவிட சிறந்ததை கூறவேண்டும் என்றுதான் நமது மார்க்கம் நமக்கு கற்று தருகிறது.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 22 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday, 21 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு*பகுதி - 10

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 🔟

☮இந்த நாபித்தின் வம்சத்திற்க்கு "நிபித்தி வம்சம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு.

💥சிரியாவில் ஆட்சி செய்த கஸ்ஸான் வம்சத்து அரசர்களும் மதினாவில் வசித்த அவ்ஸ்,கஸ்ரஜ் வம்சத்தினரும் இந்த நாபித் இப்னு இஸ்மாயிலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என வம்ச ஆய்வாளர்களின் ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர்.

👆🏽இந்த வம்சத்தை சேர்ந்த பலர் அந்த ஊர்களில் இன்றும் வசிக்கின்றர்.

💥இமாம் புகாரி (ரஹ்) தங்கங்களது நூலில் நபி இஸ்மாயில் (அலை) அவர்களுடன் யமன் நாட்டு தொடர்பு (உறவு ) என்று ஒருபாடத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.

💥அப்பாடத்தில் தலைப்புக்கு பொருத்தமான சில நபி மொழிகளை எழுதி தனது கருத்துக்கு வலிமை சேர்துள்ளார்.

💥ஹதிஸ் கலை (நபிமொழி) வல்லுனர் இப்னு ஹஜரும் தனது விரிவுரையில் கஹ்தான் வம்சத்தினர் நாபித் இப்னு இஸௌமாயீலின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்தயே ஏற்றமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

🔲நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் மகன் கைதான் குடும்பத்தினர் பல காலங்கள் மக்காவில் வாழ்ந்தனர் அவரது சந்ததியில் அத்னானும் அவரது மகன் மஅத்தும் பேரும் புகழும் பெற்றவர்கள்.

👆🏽இவர்களிலிருந்து அத்தானிய அரபிகள் தோன்றினர் இவர்களை அடுத்து பிற்காலத்தில் இவர்களது சந்ததியில் தோன்றியவர்கள் அத்னான் தங்களின் மூதாதையர்களின் பெயர்களை சரியாக மனனமிட்டு பாதுகாத்து கொண்டனர் நபி (ஸல்)அவர்களின் வம்ச தலைமுறையில் இந்த அத்னான் என்பர் 21வது பாட்டனார் ஆவார்.

🔸சில அறிவிப்புகளில் வந்துள்ளது


👍அடுத்த தொடரின் தொடர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் கானலாம்👍

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday, 20 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு -பகுதி - 9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 9⃣

💥4.நாண்காம் முறை நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் வந்தபோது தனது மகனை சந்தித்தார்கள். இஸ்மாயில் (அலை) அவர்கள் "ஜம் ஜம்" கினற்றருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது அம்பைக் கூர்மைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

🔆தந்தையைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்து தங்களது அன்பை பரிமாரிக்கொண்டார்கள்
இப்பயனத்தில் தான் இருவரும் இனைந்து கஃபதுல்லாஹ்வை கட்டி அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க மக்களை ஹஜ்ஜிக்கு அழைத்தார்கள்.
(ஸஹிஹூல் புகாரி)


💥இரண்டாவது மனைவியின் மூலம் நபி இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை அல்லாஹ் வழங்கினான் அவர்களின் பெயர்கள் கீழ் உள்ளது👇🏼

1.நாபித் (நபாயூத்)
2.கைதார்
3.அத்பாஈல்
4.மிபுஷாம்
5.மிஷ்மாஃ
6.தூமா
7.மீஷா
8.ஹூதத்
9.தீமா
10.யதூர்
11.நஃபீஸ்
12.கைதுமான்

👆🏽பிற்காலத்தில் இந்த பன்னிரண்டு பிள்ளைகள் வழியாகத்தான் பன்னிரண்டு கோத்திரங்கள் உருவாகின.

💥இவர்கள் அனைவரும் பல காலங்கள் மக்காவில் வசித்தனர்
யமன்,சிரியா,மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தினர்

💥சில காலங்கள் கழித்து இவர்களில் பலர் அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலும் அதன் வெளியிலும் குடியேறினர் நாளடைவில் நாபித்&கைதார் குடும்பங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் போய் விட்டது😌

💥ஜாஸின் வடக்குப் பகுதியில் நாபித் என்பவன் பிள்ளைகள் நன்கு வளர்ச்சி பெற்று முன்னேறி  "பத்ரா"என்ற ஊரை தலைநகராகக் கொண்டு வலுமிக்க ஓர் அரசாங்கத்தை நிறுவினர். இந்நகரம் (உர்தூன்) ஜோர்டானின் தெற்கே வரலாற்றுப் புகழ் வாழ்ந்த பழங்கால நகரமாகும்.


👆🏽இவகளின் அரசாட்சிக்கு பனிந்தே அங்குள்ளோர் வாழ்ந்தனர்.

💥இவர்களை அப்போது வாழ்ந்த எவராலும் இவர்களை எதிர்க்கவோ, புறக்கனிக்கவோ முடியவில்லை.
இறுதியாக ரோமர்கள் இவர்களின் அரசாங்கத்தை அழித்தனர்.

👆🏽இந்த நாபித்தின் வம்சத்திற்க்கு "நிபித்தி வம்சம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு.

👍மற்றொரு பெயரை அடுத்த தொடரிரின் தொடர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் கானலாம்👍

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday, 19 May 2016

ஸலாம்-பகுதி - 5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 5

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரில்  ஸலாம் கூறும் முறைகள் சில வற்றைப் பார்ப்போம் 👍

🌴ஸலாத்தை நாம் அனைவருக்கும் கூற வேண்டும் பெரியவர் சிறியவர் என அனைவருக்கும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் கூறவேண்டும் இதை தான் நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது.

🌴நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முத­ல்) ஸலாம் சொல்லட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)

நூல் : புகாரி (6231)

💥அனஸ் (ரலி­) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )

💥யாராவது தூரத்தில் இருந்தால் அவர்களுக்கு நாம் ஸலாம் கூற விரும்பினால் இஷாரா மூலம் ஸலாம் கூறலாம்.

🌴பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாச­ல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.

🔳அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி­)

🔘நூல் : திர்மிதி (2621)

🌴நாம் நமது சகோதரரை எத்தனை முறை சந்தித்தாலும் ஸலாம் கூறலாம்.

🌴நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)

🔘நூல் : அபூ தாவூத் (4523)

💥தொட.....ரும்....


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲 +919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 19 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 17 May 2016

ஸலாம்-பகுதி - 4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 4⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரிலே கணவன் & மனைவியிடையே ஸலாம் கூறுவதை பற்றி பார்ப்போம்👍



👨‍👨‍👦‍👦கணவன்
மனைவிக்குள்
ஸலாம் கூறிக்கொள்வது✔

🌴நம்மில்
பலர் நண்பர்களிடத்தில்
ஸலாம் கூறிக்கொள்வார்கள்.

🌴ஆனால்
தன்னுடைய வீட்டார்களை அல்லதுஉறவினர்களை சந்திக்கும் போது சலாம்கூறமாட்டார்கள்.

🌴 புதிதாக
 சலாம்கூறுவதற்கு கூச்சமும் உறவும்அவர்களுக்கு தடையாக அமைந்துவிடுகின்றது.

🌴 கணவன்மனைவியாக இருந்தாலும் தந்தைமகனாக இருந்தாலும் சலாம் கூறுவதற்கு தயங்கக்கூடாது.

🌴சிந்திக்க வேண்டாமா⁉

🌴பேசக்கூடாத பேச்சுக்களை பேசுவதற்கு வெட்கப்படாத நாம் நமது நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையைகடைபிடிக்க
வெட்கப்படுவது ஏன்⁉

⁉நமது நபி (ஸல்) அவர்களின் மனைவிஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரைவிட அதிக வயது குறைந்தவர்கள்.

🌴ஆனாலும்
 நபி (ஸல்) அவர்கள்
ஆயிஷா (ரலி)
அவர்களிடம் வரும்போது சலாம்கூறி நுழையும்
பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

 📓அல்லாஹ்வின்
தூதர் (ஸல்)அவர்கள் என்னிடம் வந்து சலாம்
கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்?என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் :
ஆயிஷா (ரலி)நூல் : புகாரி (2661)

 
📓நபி (ஸல்) அவர்கள்
புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச்சென்று
விட்டாலே
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்றுகூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம்வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும்அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும்உண்டாகட்டும்.) தங்களின் (புதிய)துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்?பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்குசுபிட்சம் வழங்கட்டும்) என்று(மணவாழ்த்துச்) சொன்னார்கள். பிறகுநபி (ஸல்) அவர்கள் தங்களின்துணைவியர் அனைவரின்இல்லங்களையும் தேடிச் சென்றுஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னதுபோன்றே (முகமன்) சொல்ல அவர்களும்ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னதுபோன்று (பிரதிமுகமனும்மணவாழ்த்தும்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (4793)

⁉அன்பு சொந்தங்களே⁉

⁉மார்க்கம் கற்றுதந்த விசயத்தை நாம் செயல்படுத்த தயங்குவது ஏன்⁉

⁉நமது மார்க்கம் எதையும் நமக்கு வீணாக கற்றுதரவில்லை⁉

⁉நீங்கள் இன்ஷா அல்லாஹ் தாங்கள் மனைவியிடம் ஸலாம் கூறி பேசும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்

⁉இன்ஷா அல்லாஹ் குடும்பத்தில் பல குழப்பங்கள் குறையும்👍


    💥  தொட.....ரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 15 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 8⃣


💥மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமானது!!!!!

2.இஸ்மாயில் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியை கற்றார்கள் அவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பன்புகளை ஜுர்ஹூம் கோத்திரத்திரத்தார் பெரிதும் விரும்பி தங்கள் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயில் (அலை)அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள்.

😌இத்திருமணத்திற்க்கு பிறகே அன்னை ஹாஜர் அவர்கள் இறந்தார்கள்.

💥இப்ராஹிம் (அலை) அவர்கள் மீண்டும் மனைவியையும் மகனையும் சந்திப்பதற்க்கு மக்கா வந்த போது மனைவி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டார்கள்.

💥இஸ்மாயில் (அலை) அவர்கள் அப்போது மக்காவில் இல்லை இஸ்மாயில் (அலை) அவர்களின் மனைவியிடம் தனது மகனைப் பற்றியும் அவ்விருவரின் வாழ்க்கை, சுகநலங்கள் பற்றியும் விசாரித்தார்கள்.

💥அப்பெண்ணோ தங்களது இல்லற நெருக்கடியையும் வறுமையையும் பற்றி முறையிட்டார்
அதைக் கேட்ட இப்ராஹிம் (அலை) அவர்கள் இஸ்மாயில் வந்தால் தனது வீட்டு வாசல் நிலையை மாற்ற வேண்டும் என்று நான் கூறியதாக அவரிடம் நீ சொல் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

💥இஸ்மாயில் (அலை) அவர்கள் வீடு திரும்பியவுடன் அப்பெண் நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். தனது தந்தை கூறிய கருத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பெண்ணை இஸ்மாயில் (அலை) அவர்கள் மணவிலக்கு செய்து விட்டார்கள்.

💥அதற்க்கு பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தாரின் "முழாத் இப்னு அம்ர்" என்பவன் மகளைத் திருமணம் செய்தார்.

3.இஸ்மாயில் (அலை) அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டபின் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்கா வந்தார்கள் அப்போதும் இஸ்மாயில் (அலை) அவர்கள் வீட்டில் இல்லை

💥நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மருமகளிடம் மகனைப் பற்றியும் குடும்ப நிலையை பற்றியும் விசாரித்தார்கள் அதற்க்கு "அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்" என்று அவர் பதிலளித்தார்.

💥அதைக்கேட்ட நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்கள் வந்தால் தனது வீட்டு வாசலின் நிலையை தக்கவைத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறியதாக, இஸ்மாயிலிடம் சொல்! என்று சொல்லிவிட்டு ஃபாலஸ்தீனம் சென்றார்கள்.

👍நான்காம் சந்திப்பு தொடர்ச்சியை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரிலே காண்போம்👍


✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday, 14 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி - 7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 7⃣

🍃இப்ராஹிம் (அலை) தமது மனைவியையும் பிள்ளையையும் மக்காவில் தங்க வைப்பதர்க்கு முன்பே மக்கா வழியாக இரண்டாவது ஜுர்ஹூம் கோத்திரத்தார் போக வர இருந்தார்கள்.

✴அன்னை ஹாஜர் மக்காவில் வந்து தங்கி தண்ணீர் வசதியும் ஏற்ப்பட்டப்பின் அதாவது இஸ்மாயில் (அலை) வாலிபமடைவதற்க்கு முன்பு இவர்கள் குடியேறியுள்ளார்கள்.

✳இவ்வாறே ஸஹீஹூல் புகாரியில் வந்துள்ளது
இதிலிருந்து இவர்கள் மக்காவின் எப்பகுதியிலும் இதற்க்கு முன் குடியிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.

✳அதே நேரம் தான் விட்டு வந்த மனைவி மற்றும் மகனை சந்திக்க நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் சென்று வந்தார்கள். மொத்தம் எத்தனை  முறை சந்திக்கச் சென்றார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.

🚫எனினும் நான்கு முறை சென்றதற்க்கான உறுதிமிக்கச் சான்றுகள் உள்ளன.

🏮அந்த நான்கு முறைகள் வருமாறு

1⃣.இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கிறான் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள்  தனது மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து அல்லாஹ்விர்க்கு தியாகம் செய்வது போல் கனவு ஒன்று கண்டார்கள் அக்கனவை அல்லாஹ்வின் கட்டளை என்று உணர்ந்து அதை நிறைவேற்ற மக்கா வந்தார்கள் இது குறித்து பின் வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்👇🏻

📓ஆகவே அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்க்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்து பலியிட) முகங்குப்புறத் கிடத்தியபோது நாம் "இப்ராஹுமே" என நாம் அழைத்து உண்மையாகவே நீங்கள்  உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்துவிட்டீர்கள் என்றும் நன்மை செய்பருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம் என்றும் கூறி நிச்சயமாக இது  மகத்தானதொரு பெரும் சொதனையாகும் (என்றும் கூறினோம்) ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

(அல்குர்ஆன் 37 : 103-107)

📄இஸ்ஹாக்கைவிட இஸ்மாயில் (அலை) பதிமூன்று ஆண்டுகள் மூத்தவர் "தவ்ராத்"வேதத்தில் "தக்வீன்" என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

💥மேலும் இச்சம்பவத்தை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனங்களிலுருந்து இந்நிகழ்ச்சி இஸ்ஹாக் (அலை) பிறப்பதர்க்கு முன் நடந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது ஏனெனில் மேன்மை மிகு குர்ஆனில் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட முயன்ற நிகழ்ச்சி முழுவதும் கூறப்பட்ட பிறகு
அதை அடுத்தே இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறப்பார் என்ற நற்செய்தி கூறப்பட்டது.

💥ஆக இதிலிருந்து இஸ்மாயில் (அலை) அவர்களை அறுப்பதற்க்காக நபி இப்ராஹிம் (அலை)  அவர்கள் ஒரு முறை மக்கா சென்றுள்ளார்கள் என்பதும்

🔸அப்போது இஸ்மாயில் (அலை) அவர்கள் வாலிபமடையவில்லை என்பதும் தெரிய வருகிறது.

💥மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமானது!!!!!

✴அடுத்த தொடரிலே பார்ப்போம்.

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday, 13 May 2016

ஸலாம்-பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
     💥பகுதி-2⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரிலே ஸலாம் கூறுவதினால் உள்ள நன்மைகளையும் சிறப்புகளையும் பார்ப்போம்.

🌴இஸ்லாமிய மார்க்கம் நமக்கு தெளிவாக அழகாக கற்றுத்தந்த முகமன் இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமனை கூறுவதினால் பல நன்மைகளும் சிறப்புகளும் உள்ளன.

💥அல்லாஹ்வின் தூதர் நமது நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்👇🏼


📓ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும்
👍ஸலாம் சொல்வதுமாகும்👍 என்று பதிலளித்தார்கள்.

📖அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236


📓இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"

📖அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

(நூல்: புகாரி, முஸ்லிம்)


💥இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.

💥ஒரு முஸலீ்­ம் மற்றொரு முஸ்­லீமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஸலாம் கூறுதலும் ஒன்றாகும்.


👆🏽இன்னும் இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

💥இருவர் சந்திக்கும் போது முத­லில் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்கு உரியவராவார்.


💥மேலும் ஸலாம்
🔸சிறியவர் பெரியவருக்கும்.
🔸 நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும்.
🔸 சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும்.

💥பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறுவது சிறந்தது ஆகும்.

💥 ஒவ்வொரு சந்திப்பிற்க்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.

👍இன்னும் ஸலாம் கூறுவதற்க்கு பல ஒழுக்கங்கள் உள்ளன

👍அதை அடுத்த தொடரிலே இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்

    💥  தொட.....ரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஸலாம்-பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 3⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரிலே வீட்டில் ஸலாம் கூறுவதை பற்றி பார்ப்போம்👍


🏤வீட்டில் நுழையும் போது சலாம்
கூறுங்கள்✔

🏤வீட்டிற்குள்
நுழையும் போது சலாம் சொல்லி நுழையும் பழக்கம் நம்மில்அதிகமானோரிடத்தில் இல்லை.

🏤நாகரீகத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலக்கட்டத்தில் கூட அதிகமானோர் இந்த விசயத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

🏤தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் சலாம் சொல்லியே வீட்டிற்க்குள் நுழையவேண்டும் என நம் மார்க்கம் நமக்கு கற்றுதருகிறது.

⁉ஏன் மார்க்கம் இவ்வாறு கட்டளை இடுகிறது⁉

🏤ஒருவருடைய
 வீட்டிற்கு நாம்செல்லும் போது அவர் எந்த
நிலையில் இருப்பார் என்பது நமக்கு தெரியாது.

🏤 பெண்கள்
பெரும்பாலும் வெளியே
 தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள்.

🏤தன்னுடைய
வீடுஎன்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக
இருப்பார்கள் வருபவர் சலாம் கூறி அனுமதி பெற்றுநுழைந்தால்
யாரோ ஒருவர் வருகிறார்
என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.

   🏤பிறரது
வீட்டில் அனுமதியின்றி
நுழைவது ஒழுக்கக்
கேடானசெயலாகவும் உள்ளது.

⁉மனிதனுக்கு
ஒழுக்க மாண்புகளை
கற்றுத்தருகின்ற இஸ்லாம் இந்த ஒழுங்குமுறையைமிகவும் வலியுறுத்திச் சொல்கிறது.

🏤சலாம் கூறாமலும் அனுமதி பெறாமலும்வீட்டிற்குள்
நுழைவதை இஸ்லாம் தடை செய்கிறது.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

   📓நம்பிக்கை
கொண்டோரே!
உங்கள்வீடுகள் அல்லாத வேறு வீடுகளில்அவர்களின் அனுமதி பெறாமலும்
அவ்வீட்டாருக்கு ஸலாம்
கூறாமலும்நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச்சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

📓அங்கே
எவரையும் நீங்கள்காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை
அங்கே
நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!''
என்று
உங்களுக்குக் கூறப்பட்டால்திரும்பி விடுங்கள்! அதுவேஉங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள்செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் (24 : 28)


☝🏻அல்லாஹ்வின் தூதர்
நபி (ஸல்) அவர்கள்
ஒருவருடைய இல்லத்திற்குச் செல்லும் போது மூன்றுமுறை சலாம் கூறி அனுமதி
கோருவார்கள் பதில் வந்தால் வீட்டின்
உள்ளே செல்வார்கள் இல்லெயென்றால்திரும்பச் சென்றுவிடுவார்கள்.

📓நபி (ஸல்) அவர்கள்
சஃத் பின்உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளேவர) அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறிஅனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்)அவர்களுக்குக் கேட்காதவாறு(வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம்வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை சலாம்சொல்ல சஃதும் மூன்று முறைபெமானாருக்குக் கேட்காதவாறுபதில்சலாம் கூறினார்கள். நபி (ஸல்)அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத்அவர்களை பின்தொடர்ந்து சென்றுஅல்லாஹ்வின் தூதரே என்தாயும்தந்தையும் தங்களுக்குஅற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம்அனைத்தும் என்காதில் விழாமல்இருக்கவில்லை. உங்களுக்குக்கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில்கூறினேன். உங்களது சலாத்தையும்பரகத்தையும் நான் அதிகம் பெறவிரும்பினேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அஹ்மத் (11957,14928)


🌴ஆகவே நமது வீடாக இருந்தாலும் சரி மற்றவர்கள் வீடாக இருந்தாலும் சரி ஸலாம் கூறி அனுமதி பெற்று நுழைவோம்👍


    💥  தொட.....ரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 6

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 6

இந்நிகழ்ச்சிக்கு பின் இப்ராஹிம் (அலை)தங்களின் வசிப்பிடமான ஃபலஸ்தீனத்திற்க்குத் திரும்பீனார்கள்.


✳அக்காத்தில் அங்கு இறை இல்லமான 'கஅபா' கட்டிடமாக இரூக்கவில்லை கஅபா இருந்த இடம் சற்று உயரமான குன்றைப்போல் இருந்தது.

✳வெள்ளம் வரும்போது கஅபா இருந்த அந்த மேட்டுப்பகுதியின் வலது இடது இரு ஓலங்களைத் தண்ணீர் அரித்து வந்தது.

✳கஅபத்துல்லாஹ்வின் அருகிலிருந்த ஓர் அடர்த்தியான மர நிழலில் அவ்விருவரையும் அமரவைத்து   சிறிது பேரித்தங்கனிகள் இருந்த ஒரு பையையும் தண்ணீர் உள்ள ஒரு துருத்தியையும் அவ்விருவருக்காக வழங்கிவிட்டு நபி இப்ராஹிம் (அலை)அவர்கள் ஃபாலஸ்தீனம் திரும்பினார்கள்.

✳சில நாட்கள் அவ்விருவரின் உணவான பேரித்தகனிகளும் தண்ணீரும் தீர்ந்து விட்டன.

✳அல்லாஹ்வின் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும் அர்புதமான "ஜம் ஜம்"ஊற்றை  அவ்விருவருக்காக தோன்றச்செய்தான்.
(ஸஹீஹூல் புகாரி)

✳இக்காலத்தில் இரண்டாவது ஜுர்ஹூம் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியே வரும் போது (தண்ணீர் இருப்பதை பார்த்து) அங்கு வசிக்க விரும்பி அன்னை ஹாஜரிடம் அனுமதி பெற்று தங்கினர்.

✳சில வரலாற்று ஆசிரியர்கள் இந்த இரண்டாவது ஜுர்ஹும் வம்சத்தினர் முன்பிருந்தே மக்காவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர் என்றும் மக்காவில் அன்னை ஹாஜர் குடியேறி "ஜம் ஜம்"  கினறு தோன்றியவுடன் தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறினர் என்றும் கூறுகிறார்கள்.
(ஸஹீஹூல் புகாரி)


💐இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஆராய்ந்தால் நாம் முதலில் கூறிய கூற்றே மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளளாம்.

🚫இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது.

✴அடுத்த தொடரிலே பார்ப்போம்.

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 13 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday, 11 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு-பகுதி -5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 5⃣

🔱லக்ம் மற்றும் ஜுதாம் ⚜

🗺இவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு நாடுகளில் குடிபெயர்ந்தனர்.!!

🔱லக்ம் வம்சத்தில் வந்த நஸ்ர் இப்னு ரபீஆ என்பவன் சந்ததியினர் தான் ஹுரா நாட்டை ஆண்ட அரசர்கள்.!!

🔱அந்த அரசர்களை "முனாதிரா" என்று அழைக்கப்பட்டது.!!.

⭕பனூ தைய்

⚜அஜ்த் வம்சத்தினர் யமனிலிருந்து குடிபெயர்ந்தவுடன்  இந்த கோத்திரத்தினரும் அரபிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிக்கு சென்று அஜஃ , சல்மா என்ற இரு மலைகளுக்கிடையில் குடியேறினர் .!!


⚜பிற்காலத்தில் அந்த மலைக்கு "தைய்" மலைகள் என்று பெயர் வந்தது.!!

⭕கின்தா

🗺இந்த கோத்திரத்தினர் பஹ்ரைனில் குடியேறினர்.!!

🔅அங்கு அவர்களுக்கு பல சிரமங்கள் எற்படவே மீண்டும் எமன் நாட்டில் ஹழ்ர மவுத் என்ற நகரில் குடியேறினர்.!!

🔅அங்கும் அவர்களுக்கு சிரமம் ஏற்படவே அரபிய தீபகற்பத்தின் நஜ்து பகுதியில் குடியேறி ஒரு பெரும் அரசாங்கதை நிறுவினர்.!!

🔅சில காலங்குள்ளாகவே அவர்கள் அரசாங்கம் அழிந்து சுவடுகள் தெரியாமல் போயிற்று.

💠ஹிம்யர் வம்சத்தைச் சேர்ந்த 'குழாஆ' என்ற கோத்திரத்தார் யமனிலிருந்து வெளியேறி 'மஷாபுல் இராக்' என்ற பகுதியில் ''பாதியத்துஸ் ஸமாவா'' என்னும் ஊரில் குடியேறினர்.!!

💠குழாஆ வம்சத்தை சேர்ந்த சில பிரிவினர் "மஷாஃபுஷ் ஷாம்" என்ற பகுதியிலும் ஹிஜாஸ் மாநிலத்தின் வடக்கு பகுதியிலும் குடியேறினர்.!!

⭕இதற்கு முன் கூறப்பட்ட அல் அரபுல் முஸ்தஃபாவின் முதன் முதலான பாட்டானார் நபி இப்ராஹிம்(அலை) ஆவார்.!!


🔆நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் ஈராக் நாட்டில் ஃபுராத் நதியின் மேற்கு கரையில் கூஃபாவிற்கு அருகாமையில் உள்ள உர் என்ற ஊரை  சேர்ந்தவர்கள் .!!

🕵நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பம் உர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களின் சமுக சமய பண்பாடுகள் குறித்து பல விரிவான தகவல்கள் அகழ்வாராச்சிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி முலம் கிடைத்து உள்ளன.!!


🔆இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் ஊரில் இருந்து வெளியேறி ஹாரான் மற்றும் ஹர்ரான் எனும் ஊரில் குடியேறினர்.!!

🔅சில காலத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்டு ஃபாலஸ்தினம் நாட்டில் குடியேறினர்கள்.!! பாலஸ்தீனை தனது அழைப்பு பணிக்கு மையமாக ஆக்கி கொண்டு அங்கும் அதன் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை ஒரே இறைவன் பக்கம் அழைத்தார்.!!

🔅ஒரு முறை மனைவி சாராவுடன் அருகில் உள்ள ஊருக்கு சென்றார்கள் , அன்னை சாரா மிக அழகிய தோற்றமுடையவராக இருந்ததை அறிந்த  அவ்வூரின் அநியாயகார அரசன் அவர்களை அழைத்து வர செய்து அவர்களிடம் தவறான முறையில் நடக்க முயன்றான்.!! அன்னை சாரா அவனிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்.!!
அவர் சாராவை நெருங்க முடியாத படி அல்லாஹ் அவனை ஆக்கிவிட்டான்.!!

🔅அல்லாஹ்விடம் சாரா மிகவும் மதிப்புற்குரியவர் மேலும் நல்லொழுக்க சீலர் என்பதை இதன் மூலம் அறிந்த அந்த அந்நியாயக்காரன் சாராவின் சிறப்பை மெச்சி அல்லது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ள சாராவுக்கு பணி செய்ய ஒரு அழகிய அடிமை பெண்னை வழங்கினான்.!

🔅 சாரா அவர்கள் அப்பெண்னை தன் கணவர் இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கிவிட்டார்.!! அந்த பெண்தான் அன்னை ஹாஜிர் ஆவார்.! (ஸஹீஹ் புகாரி)

✳💥தொட.....ரும்....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 10 May 2016

இயக்க சன்டைகள் ஏன்?

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
⁉எங்கே செல்கிறது நம் சமுகம்‼❓

⁉இது தான் நபி வழியா⁉❓

⁉இவ்வளவு நாட்களாக இஸ்லாத்தின் எதிரிகளுடன் சன்டை போட்ட நமது சமுகம்.


⁉ஆனால் இப்பொழுது நமக்குள்ளயே இப்படி அடித்து கொள்ளும் அவள நிலை‼❓

⁉ஏன் இந்த அவள நிலை⁉

⁉ஏன் இந்த சூழல் ⁉

⁉இது தான்  நமது மார்க்கம் நமக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறையா⁉

💥நபி மொழி 👇🏼

📓இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற குற்றச்செயல்) ஆகும் . ஷஹீஹ் புகாரி 7076

💥பிறருக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நமது சமுகம்.

💥இன்று நம்க்குள் ஏன் இப்படி ஓர் விரோத போக்கு.!!

⁉சிந்திக்க வேண்டாமா⁉

💥குர் ஆன்&ஹதீஸ் பின்பற்ற வேண்டிய நமது சமூகமோ இப்போது மனோ இச்சை படி மார்க்கத்தை வளைத்து செயல் படுவது தான் கேவலம்.!!

💥குர் ஆன்&ஹதீஸை
பின்பற்ற கூடியவர்களாக இருந்தால் ஏன் இப்படி சகோதரர்குள்ளயே இப்படி பகைமை வளர்க்க வேண்டும்.?!

💥நமது நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக அழகாக கூறிஉள்ளார்களே நாம் சிந்திக்க வேண்டாமா⁉

📓இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி 7070

💥மேலும் இன்றைய காலக்கட்டத்தில் நடப்பதை முன்கூட்டியே பார்ப்பது போல் நமது நபி(ஸல்) அவர்கள் தன் அறிவிப்பில் கூறியதாவது.!!

📓நபி(ஸல்) அவர்கள் (”விடைபெறும்” ஹஜ்ஜின்போது) கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். ஷஹீஹ் புகாரி 7077

💥நமது நபிஅவர்கள் நமக்கு தெளிவாக சொல்லியும் கூட நபி மொழி , திரு மறை வாழ்பவர்கள் கூட இப்படி செய்வது தான் மன வருத்தத்தை கொடுக்கிறது.!!

💥அன்பார்ந்த சகோதரர்களே
 நமக்குள் ஏன் பிரிவினை‼⁉

💥நமக்குள் ஏன் இந்த சண்டை‼⁉

💥நமக்குள் ஏன் பகைமை குணம்‼⁉


📓”நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்” என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்”
ஷஹீஹ் புகாரி 2410

💥ஒரு சகோதரர் குற்றம் செய்தால் அவரை நாம் இனிய அணுகுமுறை மூலம் மாற்ற வேண்டும்.!!

👆🏽இது தானே நமது மார்க்கம் நமக்கு கற்றுதந்த விசயம் ⁉

💥அன்பு சகோதர்களே‼

💥 நாமோ இப்படி நமக்குள் அடித்தால் பகைவர்கள் எளிதாக நம்மை விழ்த்த முடியும் என்பதை நினைத்து கொள்ளுங்கள்.!!

👍இன்ஷா அல்லாஹ்
இனி வரும் காலம் நபி(ஸல்) அவர்கள் சொல்படி  நடப்போம்👍

👍இஸ்லாம் என்ற குடும்பத்தில் என்றும் நாம் சகோதரர்களாக இருப்போம்👍

👍அல்லாஹ் நமக்கு ஒற்றுமையை தருவானாக!!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஸலாம்-பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
                     💥பகுதி-1

💞அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)💞

🌴(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)🌴

🌎இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் படைத்து அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்தான்

🌎படைத்ததோடு மட்டும் இல்லாமல் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான்.


🌎அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.

🌎இன்றைய காலக்கட்டத்தில் வணக்கம்

🌎நல்ல காலை(good mor)பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது (good of)
(Goog nit)நல்ல இரவு பொழுது.

🌎அல்லது காலை, மாலை வணக்கம்

👆🏽இது போன்று பலவிதமான முகமன்கள் மனிதர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.


👆🏽இவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை.


🌎ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining
அல்லது Good night
என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

👆🏽இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட வார்த்தைகள்  அனைத்தும் குறைஉள்ளதாகவே இருக்கிறது.


🌎ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நமக்கு தெளிவாக அழகாக கற்றுத்தந்த முகமன் இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன்

🌎காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.


🌴இனி வரக்கூடிய பதிவுகளில் இன்ஷா அல்லாஹ்

👍ஸலாம் சொல்வதின் சிறப்புகள்.

👍ஸலாம் யாருக்கு கூற வேண்டும்.

👆🏽இன்னும் ஸலாம் சம்மந்தமான சில விசயங்களை பார்ப்போம்


🌴🌴🌴🌴தொட....ரும்....


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

📲+919629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Friday, 6 May 2016

நீ செய்யும் தர்மம் யாருக்காக

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍃நீ செய்யும் தர்மம் யாருக்காக🍃

🍃மனிதா நீ கர்வம் கொள்வது ஏன்?

🍃பெருமை அடிப்பது ஏன் நீ செய்யும் தர்மம் யாருக்காக சிந்திக்க மாட்டாயா?

🍃நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்👇🏼


🍃சதி செய்பவனும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”

 (ஆதாரம் : நஸயி, திர்மிதி)


🍃உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை நடைமுறை படுத்திய மார்க்கமே இஸ்லாம் தான்

🍃ஆனால்.....


🍃ஆனால் இன்றையகாலத்தில் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்க்காகவும் தன்னை மக்கள்  வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்க்காகவும்

🔺தினசரிகளில் விளம்பரம் செய்தும்

🔺போஸ்டர் அடித்து ஒட்டியும்

🔺கொடுக்கும் பொருளில் தன் பெயரை போட வேண்டும் என்று

🍃தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே பாராட்டிக்கொள்ளும் அவல நிலையை நாம் கண்கூடாக பார்கிறோம்.

🍃சிந்தனை செய்⁉

🍃ஆனால் சிலர் இறைவனுக்கு பயந்து அவனுக்கு கட்டுப்பட்டு
இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும்

🍃என்று எண்ணி பெரிய அளவில்  தர்மம் செய்வதை  யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர்.

🍃தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர்.

👆🏽இத்தகையோர்க்கு நற்கூலியை இறைவன் வழங்குவான்.

🍃ஆனால் சிலர்

🍃தான தர்மங்கள் அனைத்தையும் செய்வார்கள் அவரால் பயன்பெற்றவர் அவருக்கு கட்டுப்படவில்லை யென்றால்

🔺என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்.
🔺நான் தான் நீ இத்தகைய நிலைக்கு உயர உதவி செய்தேன்.
🔺நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?

👆🏽இது  போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர்.

⁉ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

📓“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

🍃சகோதர சகோதரிகளே!!!

🍃நாம் கஷ்டப்பட்டு செய்து சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிவுசெயலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அல்லவா????

🔺சிந்திக்க வேண்டாமா⁉⁉

💫யா அல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து எங்களை காப்பாயாக!!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 07 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

பெருமை கொள்ளாதே

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


💤பெருமை கொள்ளாதே💤



🌴பெருமை என்றால் என்ன?

💫என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்?

💫பெருமையின் விளைவுகள் என்ன?

👆🏽என்பது பற்றி எல்லாம் தெளிவான கண்ணோட்டம் நம்மிடத்தில் இல்லை எனவே பெருமை பற்றி மார்க்கத்தில் சில விசயங்களை பார்ப்போம்.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

📓ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான்.

பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (அல்குர்ஆன்: 2:34)


👆🏽இதே கருத்தில குர்ஆனில் இன்னும் பல வசனங்கள் உள்ளன.

📓அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் 💤பெருமை💤தான் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

🌴பெருமை என்ற சொல் இறைவனுக்கு சொந்தமானவை நம்மை படைத்த இறைவன் இதை பல இடங்களில் கூறி உள்ளான்.

💤அவற்றில் சில👇🏼

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼


📓போர்த்திக்கொண்டு இருப்பவரே! எழுந்து (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! உமது ரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக. (அல்குர்ஆன் : 74:1,2,3)

📓வானங்களிலும், பூமியிலும் உள்ள பெருமைகள் (அனைத்தும் அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியது. அவன்தான் (யாவற்றையும்) மிகைத்தவன் நுண்ணறிவு மிக்கவன். (அல்குர்ஆன் : 45:37, 59:23)

📓கண்ணியம் எனது கீழாடையாகும். பெருமை எனது மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றோடு ஒருவன் என்னிடம் தர்க்கம் செய்தால் (போட்டியிட்டால்) அவனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் என்று அல்லாஹ் எச்சரிப்பதாக, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) ஆதார நூல்: முஸ்லிம் 2620)

👆🏽இன்னும் இது போன்று பல வசனங்களும் ஹதீஸ்களிலும் உள்ளது

🌴இவை அனைத்தையும் நாம் கூர்ந்து கவனித்தால் பெருமைக்கு சொந்தக்காரன் ஒரே இறைவன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளளாம்.

❌ஆனால் இன்று
செல்வந்தர்களாக இருப்பவர்கள் தனக்குக் கீழே இருப்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும்
ஏளனமாக பேசுவதும்.

❌ஆடைகள் விஷயத்தில் கரண்டைக் காலுக்கும் கீழே  ஆடை அணிவதும்.


❌இது போலவே கல்வி கற்றுள்ளோம் என்று எண்ணுபவர், படிப்பறிவு இல்லாதவரை இழிவாக எண்ணுவதும்

❌பதவி பொறுப்புக்களைக் கொண்டு பெருமை அடிப்பதும்

❌ தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களை இழிவாக எண்ணுவது அதிகமாகவே உள்ளது.

👆🏽இவை எல்லாம் பெருமையின் அடையாளமே⁉

🌴அன்பு சொந்தங்களே பெருமை என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்

✅நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்👇🏼


📓மறுமையில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்கவும் மாட்டான். கருணைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டான். அவர்கள் யாரெனில்

1. முதுமையில் விபச்சாரம் செய்தவர்.
2. பொய்யுரைக்கும் அரசன், 3.பெருமை அடிக்கும் ஏழை ஆகியவர்கள் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதார நூல்: முஸ்லிம், நஸாயீ


☝🏻மேலும் அல்லாஹ் கூறுகிறான்👇🏼


📓அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்ப்பட்டால் “”சாந்தி உண்டாகட்டும்” என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன் : 25:63)

🌴ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு பெருமை இல்லா வாழ்க்கையை வாழ வல்ல ரஹ்மான் நமக்கு துனை புரிவானாக!!!!


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday, 5 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

பகுதி - 4⃣

♻நாடு துறந்த கஹ்லான் வம்சத்தினர் நான்கு வகைப்படுவர்.!!!

💠1. அஜிது கிளையினர்.

💠2.லக்ம் மற்றும் ஜுதாம்

💠3.பனூ தைய்

💠4. கின்தா

🔸🔹🔸🔹🔸

♻1. அஜ்து கிளையினர்

🔆இவர்கள் தங்களின் தலைவர் இம்ரான் இப்னு அம்ர் முஜைக்கியாஃ என்பவன் ஆலோசனைகிணங்க நாடு துறந்தனர்.!!!

🔆இவர்கள் யமன் நாட்டின் பல இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்து , தங்களுக்கு விருப்பமான பகுதிகளில் தங்கினர்.

🔆இவ்வம்சத்தில் யார் எங்கு தங்கினர் என்ற விபரம் வருமாறு.!!

🔆இம்ரான் இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் உமான் (ஒமன்) நாட்டில் சென்று தாங்கினார்.!!

🔆இவர்களை உமான் நாட்டின் அஜ்து வம்சத்தினர் என்று சொல்லபடுகின்றது.!!

🔆நஸ்ர் இப்னு அஜ்து குடும்பத்தினர் துஹாமா என்ற இடத்திற்கு சென்று தாங்கினர்.!!

🔆இவர்களை ஷனூஆ அஜ்து வம்சத்தினர் என கூறப்படும்.!!

🔆ஸஃலபா இப்னு அம்ர் முஜைகியா என்பவர் ஹி ஜாஸ் பகுதிக்கு சென்று ஸஃலபா மற்றும் தூ கார் என்ற இடங்களுக்கிடையில் தனது குடும்பத்துடன் தாங்கினார்.!

🔆அவரது பிள்ளைகள் , பேரன்கள் பெரியவர்களாகி  நன்கு வலிமை பெற்றவுடன் அங்கு இருந்து புறப்பட்டு மதினா நகர் வந்து தாங்கினார்கள்.!!

🔆இந்த ஸஃலபாயுடைய மகன் ஹஸாவின் பிள்ளைகள் தான் அவ்ஸ் , கஸ்ரஜ் என்ற இருவரும்.

🔆இவ்விருவரில் இருந்தே அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வம்சங்கள் தோன்றின.!!

🔆அஜ்து வம்சத்தை சேர்ந்த ஹாஸா இப்னு அம்ர் குடும்பத்தினர் ஹி ஜாஸ் பகுதியில் மர்ளுல் ளஹ்ரான் என்ற இடத்தில் தங்கினர்.

🔆சிறிது காலத்திற்கு பின் மக்கா மீது படையெடுத்து அங்கு வசித்த ஜுர்ஹும் வம்சத்தவர்களை வெளியேற்றி விட்டு மக்காவை தங்கள் ஊராக ஆக்கி கொண்டனர்.!!

🔆இந்த ஹாஸாவின் வம்சத்திற்கு "குஜா ஆ" என்ற பெயரும் உண்டு.!!

🔆ஜஃப்னா இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் சிரியா சென்று தாங்கினார்.!!

🔆இவர் சந்ததியினர் தான் வருங்காலத்தில் சிரியாவை ஆட்சி செய்த கஸ்ஸானிய மன்னர்கள் ஆவர்.!!

🔆சிரியா வருவதற்கு முன் ஜஃப்னா இப்னு அம்ர் ஹி ஜாஸ் பகுதியில் உள்ள கஸ்ஸான் என்ற கிணற்றுக்கு அருகில் குடியேறி சில காலங்கள் தங்கியிருந்தனர்.!!

🔆இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்களுக்கு ஹஸ்ஸானியர்கள் என்று பெயர் வந்தது.!!

🔆கஅப் இப்னு அம்ர் , ஹாஸ் இப்னு அம்ர் , அவ்ஃப் இப்னு அம்ர் போன்ற சிறிய சிறிய குடும்பத்தவர்களும் மேற் கூறப்பட்ட பெரிய கோத்திரங்களுடன் இணைந்து ஹி ஜாஸ் மற்றும் சிரியாவில் குடிபெயர்ந்தனர்!!

🔰தொடரும்.....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

☝🏻படைத்தவன் ஒருவனே!!☝🏻

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☝🏻படைத்தவன் ஒருவனே!!☝🏻

🌴என் அருமை சகோதர சகோதரிகளே!!!

☝🏻படைத்தவனை வணங்க வேண்டிய நாம் ஏன் படைப்புகளை ஏன் வணங்குகிறோம்⁉

⁉சிந்திக்க வேண்டாமா⁉

🌴அன்பார்ந்தவர்களே இந்த பதிவை படித்தவுடன் சற்று சிந்தித்துப் பாருங்கள் நாம் யாரை எதை இறைவனாக எடுத்து கொண்டோம் அதற்கு அந்த தகுதிகள் இருக்கிறதா என்று??

💫மனிதன் இயற்கையிலேயே நன்மை தீமையை, உண்மை பொய்யை பிரித்தறியும் பகுத்தறிவு உடையவன்.

💫இந்த பண்புகளை வைத்து மனிதன் அனைத்தையும் பிரித்து அறிய முடியும்.

💫இந்த பண்பு வணக்கத்திற்குரியவன் ஓரே இறைவன்  என்பதை அறியவும் உதவுகிறது.

💫மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் அனைவரும் இந்த இயற்கைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்டவர்களாக ஒரே இறைவனுக்கு கீழ்படிபவராகவே பிறக்கின்றனர்.

💫ஆனால் அவர்களின் பெற்றோரே அவர்களை தங்களின் கலாச்சாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் வளர்த்து விடுகின்றனர்.

☝🏻இறைவன் அவனது தன்மையை நமக்கு தெளிவாக கூறுகிறான்👇🏼

☝🏻அல்லாஹ் ஒருவனே!!!

☝🏻அவன் எந்த தேவையுமற்றவன்!!!

☝🏻அவன் யாரையும் பெறவுமில்லை!!!

☝🏻அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமில்லை!!!

☝🏻அவனுக்கு நிகராக எவருமில்லை !!!

என்று நபியே! நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1-4)

☝🏻ஒரே இறைவன் தன்னை பற்றி தெளிவாக அழகாக கூறி இருக்கும் பொழுது நாம் ஏன் அவனுக்கு மாறு செய்கிறோம் சிந்திக்க வேண்டாமா⁉⁉

💫இஸ்லாத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மனிதன் தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கி அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்.

💫இறைத்தூதர்கள்
இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள்.

💫அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள்.

💫இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள்.

👆🏽இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.

☝🏻இறைவன் ஒருவனே!!

☝🏻அவன் மட்டுமே படைக்கும் வல்லமை கொண்டவன்.

☝🏻அவனே நம்மையும் நாம் வாழும் பூமியையும்

☝🏻நாம் காணும் கடல், மலை, விண், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் படைத்தான்.

☝🏻வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே.

☝🏻அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல.

☝🏻எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்!!!

☝🏻அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன.

☝🏻அதனை நாம் அனைரும்
அந்த ஒரே இறைவனை  பின்பற்ற வேண்டும் எனபதே இந்த பதிவின் நோக்கமாகும்.

 
☝🏻நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
(அல்குர்ஆன் : 7:194)

☝🏻எல்லாம் வல்ல ஏக இறைவன் அவனுக்கு மட்டும் தலை வணங்கும் பாக்கியத்தை நமக்கு வழங்குவானாக!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday, 4 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

பகுதி - 3⃣

🔆ஹிம்யர் கோத்திரமும் அதன் உட் பிரிவுகளும்.!!!

🖲குழா ஆ

🖲ஸகாஸிக்

🖲ஜைத் அல் ஜம்ஹூர்

♻குழா ஆ

🔆பஹ்ராஃ ,  பலிய்ம் , அலைகன் , கல்ப், உத்ரா , வபரா , ஆகிய குடும்பத்தினர் குழாஆவிலிருந்து உருவானவர்கள்.!!!

♻ஸகாஸிக்

🔆இவர்கள் ஜைது இப்னு வம்லா இப்னு ஹிம்யர் என்பவர் சந்ததியினர் ஆவர்.

🔆இதில் ஹிம்யரின் பேரரான ஜைது என்பவர் ஸகாஸிக் என்ற புனை பெயரால் அழைக்கப்பட்டார்.!!

🔆(பின்னால் கூறப்பட்டுவுள்ள கஹ்லான் வம்சத்தில் தோன்றிய  கின்தா என்ற பிரிவில் கூறப்படும் ஸகாஸிக் என்பவர் வேறு.!! இங்கு கூறப்பட்டுள்ள ஜைது ஸகாஸிக் வேறு.)

♻ஜைத் அல் ஜம்ஹூர்


🔆இதில் ஹிம்யர் அஸ்ஙர் (சின்ன ஹிம்யர் ) ஸபா அஸ்ஙர்  (சின்ன ஸபா) ஹழுர் , தூ அஸ்பா , ஆகிய குடும்பங்கள் உருவாகின.!


🔆ரோமர்கள் அக்காலத்தில் மிஸ்ர்,  ஷாம் ஆகிய இரண்டு நாடுகளையும் கைப்பற்றி கஹ்லான் வம்சத்தினரின் கடல் மற்றும் தரைவழி வியாபாரங்களை தடுத்தனர்.!!

🔆இதனால் கஹ்லான் வம்சத்தினரின் வணிங்கள் பெருமளவு நசிந்தன.!!

🔆இதனாலும் அவர்கள் யமனில் இருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம்.!!!

🔆அத்தோடு ஸபா பகுதியில் அல் அரீம் என்ற வெள்ளப்பெருக்கு எற்பட்டது.!!

🔆அதனாலும் சில காலத்திற்குப்பிறகு அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.!!!

🔆இவ்வாறு கஹ்லான் வம்சத்தினர் யமன் நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிலர் சில காரணங்களை கூறினாலும்.!!

🔆வெள்ளப்பெருக்கு எற்படுவதற்கு முன்பிருந்தே இவர்களின் வணிகம் நசிந்து போயிருந்தன.!!

🔆தொடர்ந்து ஸபா நாட்டில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு விவசாயங்களும் கால்நடைகளும் முழுமையாக அழிந்துவிட்டதால் ஸபா பகுதியில் இவர்களால் வாழ்க்கையை தொடர முடியவில்லை.!!

🔆இதனாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறி என சிலர் குறிப்பிடுகின்றனர்.!!

🔆மேன்மை மிகு குர் ஆனில் ஸபா எனும் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் 15-19 ஆகிய வசனங்கள் இவர்களின் கூற்றை உறுதி செய்கிறது.!!!

🔆மேற்கூறப்பட்ட இரு காரணங்களை தவிர மற்றொரு காரணமும் இருந்ததாக தெரிய வருகிறது.!!!

🔆அதாவது கஹ்லான் , ஹிம்யர் இரு வம்சத்தினர் இடையே சண்டை சச்சிரவுகள் தோன்றின.!!!

🔆இதனால் கஹ்லான் வம்சத்தினர் தங்களது நாட்டை துறந்து அமைதியான இடத்தை நோக்கி சென்றுவிட்டனர்.!!!

🔆வணிகங்கள் நசுங்கி விட்டது மட்டும் காரணமாக இருந்திருந்தால் ஹிம்யர் வம்சத்தினரும் ஸபாவில் இருந்து வெளியேறி இருப்பார்கள்.!!

🔆ஆனால் அவர்கள் வெளியேறவில்லை.!!!

🔆இதிலிருந்து இவ்விரு வம்சத்தினருக்கும் இடையே இருந்த பகைமையும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.!!!

🔰தொடரும்.....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 3 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

பகுதி - 2⃣

🔆வரலாற்றாசியர்கள் அரபிய சமுதாயத்தை வம்சாவளி அடிப்படையில் முன்றாக பிரிக்கின்றனர்

🖲1. அல் அரபுல் பாயிதா
🖲2.அல் அரபுல் ஆபா
🖲3. அல் அரபுல் முஸ்ஃதபா

♻1. அல் அரபுல் பாயிதா

🔆இவர்கள் பண்டையக்கால அரபியர்களான ஆது , தஸ்மு , ஜிதீஸ் இம்லாக் , உமைம் , ஜுர்ஹும் , ஹழூர் , வபார், அபில்,  ஜாஸிம் , ஹழ்ர மவுத் , ஆகிய வம்சத்தினர் ஆவர்.

♻2அல் அரபுல் ஆபா

🔆இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு , கஹ்தானின் சந்ததினர் ஆவர்.!!!

🔆இவர்களை கஹ்தான் வசமி அரபிகள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.!!

♻3. அல் அரபுல் முஸ்ஃதபா

🔆இவர்கள் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின்  சந்ததினர் ஆவர்.

🔆இவர்களை அத்னான் வசமி அரபிகள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.!!

🔆மேல் கூறப்பட்ட அல் அரபுல் ஆபா  என்பவர்கள் கஹ்தான் வம்சத்தில் வந்த யமன்வாசிகள் .!!

🔆இவர்களது கோத்திரங்கள் ஸபா இப்னு யஷ்ஜுப் இப்னு கஹ்தான் இப்னு என்பவர் வழி வந்தவையாகும்.!!

🔆இந்த கோத்திரங்களில்

🖲அ. ஹிம்யர் இப்னு ஸபா,

🖲ஆ. கஹ்லான் இப்னு ஸபா.

🔆என்ற இரண்டு கோத்திரதினர் மட்டும் பிரபலமானவர்கள்.!!

🔆ஹிம்யர் , கஹ்லான் இருவரை தவிர ஸபா விற்கு பதினொன்று அல்லது பதினான்கு பிள்ளைகள் இருந்தனர்.!!!

🔆அவர்களுக்கும் அவர்களது வழி வந்தவர்களுக்கும் ஸபா வம்சத்தினர் என்று கூறப்படுகிறது.!!

🔆அவர்களுக்கென தனிப் பெயர்  கொண்ட கோத்திரங்கள் எதுவும் உருவாக்கவில்லை.!!

🕹தொடரும்.....
(உதவி- அல் ரஹீக் கிதாப்)



🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 4 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday, 2 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி - 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு☮

♈பகுதி - 1

🌴அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே! !

அல்லாஹ்வின் உதவியோடு உலகம் போற்றும் மாமனிதர் என்ற தலைப்பிலே முஹம்மது நபி (ஸல்)அவரேகளின் வாழ்க்கையில் நடந்த சில விசயங்களை பார்த்தோம் .!!♻

🔰இன்ஷா அல்லாஹ்

🔰அந்த மாமனிதரை பற்றி இன்னும் விபரமாக இன்னும் தெளிவாக ஆழமாக வரும் காலங்களில் வரலாறு தொடராக பார்க்கலாம்.!!

🌴எங்கள் பணிசிறக்க வல்லரஹ்மானிடம் பிராத்திய்யுங்கள்



♻முன்னுரை♻

🔰அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் , அரபிய சமுதாயங்களும்.!!!

🔰நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறை தூதுத்துவத்தை குறிக்கும் சொல்லாகும்.

🔰தான் கொண்டு வந்த இறை தூதுத்துவத்தால் தங்களின் சொல் செயல் ஒழுக்க மாண்பு முலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்.

🔰அந்த இறை தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவின் அளவு கோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்.!!

🔰தீமை களைந்து நன்மை போதித்தார்கள்.!!

🔰இருளை விட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி மக்களை அழைத்து வந்தார்கள்.!!

🔰படைப்பினங்களை வணங்குவதிலிருந்து இருந்து மனிதனை முழுமையாக விடுவித்து.!!

🔰படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும் படி செய்தார்.!!

🔰சுருங்க கூறினால் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில்  வாழச்செய்தார்கள்.!!!

🔰நமது இக்கருத்தை விளங்கி கொள்ள வேண்டுமாயின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் துதராக அனுப்பப்படுவதற்கு  முன்னதாக முன் இருந்த நிலைமைகளையும்.

🔰அவர் தூதராக அனுப்பப்பட்ட பிறகு எற்பட்ட மாற்றங்களை முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.!!!

🔰இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த

💠அரபிய சமுதாயங்கள்

💠அவர்களது கலாச்சாரங்கள்

💠மேலும் அக்காலத்தில் இருந்த சிற்றரசர்கள்

💠பேரரசர்கள், சமுதாய அமைப்புகள்

💠அவர்களுது மத நம்பிக்கைகள்

💠சமுக பழக்க வழக்கங்கள்

💠சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல்

💠பொருளியல்

🔰ஆகியவற்றை குறித்து  சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.!!

🔰இவற்றுள் ஒற்வொன்னையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை எற்படுத்தியிருக்கின்றோம்

🔰இன்ஷா அல்லாஹ்

🔰நாளை அந்த பிரிவுகளை பார்க்கலாம்.!!

👍இன்ஷா அல்லாஹ்

🔰தொட........ரும்


🍥(உதவி- அல் ரஹீக் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Sunday, 1 May 2016

தாஃவா இஸ்லாத்தின் உயிர்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✅தாஃவா இஸ்லாத்தின் உயிர்✅


✅இவ்வுலக வாழ்க்கையை உண்மையான இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு மரணத்திற்கு பின் நிரந்தர சொர்க்க வாழ்வை அடைய விரும்பும் நாம்.

✅ஒவ்வொருவரும்

🌴அதே ஆதமுடைய பிள்ளைகளான ஒரு இறைவனை
பற்றிய செய்தி அறியாத மக்களை பற்றி நாம் நினைத்ததுண்டா⁉⁉


🌴என்ன இந்த இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் என நினைத்துக்கொன்டீர்களா⁉⁉

🌴குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இறக்கப்பட்டதா⁉⁉

🌴நாம் உண்டு, நம் வேலை உண்டு என ஒரு முஸ்லிம் வாழலாமா⁉⁉

🌴இறுதி தூதரை மாற்று மதத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினோமா???

👆🎇வை அனைத்திர்க்கும் நம்மிடம் பதில்


⁉இல்லை....
இல்லை...இல்லவே இல்லை.....என்று தான் வரும் காரணம் பலர் தான் தனது வணக்கம் உன்டு தனது வேலை உண்டு என செல்கிறார்கள்....

🌴இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டது....

🌴 குர்ஆன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருளப்பட்டது....

🌴அழைப்பு பணி செய்வது நம் அனைவர் மீதும் உள்ள கடமை....என்பதை நாம் ஏன் மறுக்கிறோம்....

☝🏻இறைவன் கூறுவதை சிந்திக்க வேண்டாமா⁉⁉

📓3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்;தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.


✅இந்த வசனத்தில் இறைவன் நமக்கு தெளிவாக கூறிய பின்பும் நாம் தாவா செய்யாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை⁉


🌴இன்னும் நமது நபி (ஸல்) அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் பற்றி வலியுறித்தி உள்ளார்கள்👇🏼

📓இன்று நீங்கள் என்னுடைய மார்க்கத்தின் பேச்சுகளை கேட்கிறீகள். நாளை உங்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுக்கள் கேட்கப்படும். பிறகு, உங்களிடமிருந்து யார் மார்க்கத்தின் பேச்சுகளை கேட்டார்களோ, அவர்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுகள் கேட்கப்படும். எனவே, நன்கு கவனமாக கேளுங்கள். உங்களுக்கு பின்னால் வருவோருக்கு அதை ஏத்தி வையுங்கள், பிறகு அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருக்கு எத்தி வைக்கட்டும். இந்த காரியம் தொடர்ந்து இவ்வாறு நடைபெறட்டும்.
-அபு தாவூத்

✅அன்பு சொந்தங்களே நமக்கு தெரிந்த சில விசயங்களையாவது நாம் மற்றவர்களுக்கு எத்திவைக்கிறோமா!!!!!!


🤔சிந்திய்யுங்கள்!!!

👍நமது தாஃவாபணி தொடரட்டும்.

✅வல்லரஹ்மான் நமக்கு துனை புரிவானாக!!!!



🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 2 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡