Thursday 7 April 2016

பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💢பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா❓

🗯பிள்ளை பெற்றடுப்பது பெரிதல்ல அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

👆🏻இந்த விசயம் இந்த காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தான் கூறமுடியும்.


🗯கேட்டால் நவீன காலம் பிள்ளையை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லையாம்.

💢 பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா❓

💢பராமரிக்க வேண்டாமா❓


✅பலர் நமது பிள்ளை நல்ல பிள்ளை தவறு ஏதும் செய்யாது, எனது பிள்ளையை நான் நம்பாவிட்டால் யார் நம்புவது என்றெல்லாம் கூறுவார்கள்.

👆🏻இதை நாம் குறை கூறவில்லை ஆமாம்,நமது பிள்ளைகளை நாம் நம்பாவிட்டால் வேறு யார் நம்புவது.


💢ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடும் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும்.


❎இன்றைய சூழல் நமது பிள்ளைகளை தவறான நிலைக்கு கொண்டு செல்கிறது.

         🗯ஒன்று👇🏻

💢நமது பிள்ளைகளை கெடுக்கும் விசயம் பல வீடுகளில் உள்ளது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

❎பிள்ளைகளுக்கு எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன.

👆🏻இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர் என்பது வேதனையான விசயம்.

           🗯அடுத்து👇🏻

💢பல பெற்றோர்கள் செய்யும் அடுத்த தவறு

📱📲செல்போன்

❎பல பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள்.


👆🏻இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர்.


📱செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

✅பெற்றோர்களே பிள்ளைகளை பெற்றடுப்பதினால் மட்டும் நமது பொறுப்பு நீங்கி விடாது.


✅அந்த பிள்ளைகளுக்கு மார்கத்தையும் அந்த பிள்ளைகளை கண்கானிப்பதும் பெற்றோர்கள் மீது கடமை ஆகும்.

♦சிந்தித்துப்பாருங்கள்

💥உங்கள் பிள்ளைகளின் எதிர்ககாலத்தைப்பற்றி சிந்தித்ததுண்டா?

🔃முஸ்லீம் பெண்களைக் குறி வைத்து  தேடிக்கொண்டிருக்கிறது கயவர்க்கூட்டம்..

❌தன் பெண்களின் எதிர்காலத்தை சீரழிக்க நீங்களே காரணமாகாதீர்கள்.

🚫பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரம் எல்லை மீறாமல் இருக்கும் வரை பாதுகாப்புதான்.

💔ஆனால் எல்லை மீறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகள் குடும்பங்களை சிதைத்து விடும்.

📲செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கப்பாருங்கள்.

🎙குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

💥அல்லாஹ் அனைத்து சகோதரிகளையும்  அனைத்து விதமான சீரழிவுகளில் இருந்து பாதுகாப்பானாக!!!!!!

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 07 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment