Tuesday, 12 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-4


💈வட்டியும், மறுமையும்💈

💥மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இருக்க வேண்டும்.

🔥 வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

📓வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும், ) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல்குர்ஆன் 4:161)


💈அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டியை பற்றி வண்மையாக எச்சரித்த போதிலும்

💈நமது சமுகத்திலும் நமது தனிப்பட்ட வாழ்விலும் வட்டி பல ரூபத்தில் நமக்கே தெரியாமல் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் நம்மில் புழக்கத்தில் உள்ள சில வட்டிகளை இங்கு பார்ப்போம்👇🏻

1⃣பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி👇🏻


💢விலை அதிகமான பொருட்களை நம்மில் பலர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல  பொருட்கள் விற்கப் படுகிறது.

👆🏻இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.

💈ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் தவணை முறையில் வாங்கும் போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் வராது  அதை இஸ்லாம் தடுக்கவும் இல்லை.

💈ஆனால் நாம் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தால் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட சற்று அதிகமாகவே   இருக்கும்.


💈ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.

👆🏻இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :


1.முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .

2.சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

💢அடுத்த தொடரிலே இன்னும் தெளிவாக பார்களாம்

 
🗯 தொடரும்.....

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment