Saturday, 16 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-8

🔥அல்ஹம்துலில்லாஹ் நாம் கடந்த சில தொடர்களிலே வட்டி பற்றி பார்த்தோம்.

🔥வட்டி எந்த அளவு தடுக்கப்பட்ட குற்றம் எவ்வளவு பெரிய பாவம் என தெரிந்திருப்போம்.

🔥நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.


🔥பலர் நமது தேவைக்கும் அதிகமாக கிடைக்கிறதே என எண்ணி வட்டிக்கு விடுகிறார்கள்.

🔥வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம் அதை யாரும் மறுக்க முடியாது.


🔥அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது அதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.


🔥இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


🔥வட்டியினால் உலகிலும் கேடு்  மறுமையிலும் கேடு என்பதை நீங்கள் என்று உணரப் போகிறீர்கள்❓


☝🏼அல்லாஹ் தான் நேர்வழி காட்ட வேண்டும்.


🔥மேலும் வட்டியினால் பலர் பல பாவமான செயல்களும் செய்ய நேரிடும்

🛡அதாவது வியாபாரத்தில்

🔸பொய் பேசுவது

🔸ஏமாத்துவது

🔸எடையில் மோசடி செய்வது என சொல்லிக் கொண்டேபோகலாம்

🔥இதர்க்கு மூலகாரணம் என்னவென்றால் வட்டிக்கு வாங்கியதே எப்படியாவது  நாம் சம்பாதித்து அந்த வட்டியை முடித்து விட வேண்டும் என்று
மார்க்கத்தில் தடை செய்த பலகாரியத்தை செய்ய முற்படுகிறார்கள்.

☝🏼அல்லாஹ்தான் ஹிதாயத் கொடுக்க வேண்டும்.

🔥மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க ☝🏼அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .

🔥வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

🔥எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


🔥வட்டிக்கு என்னதான் தீர்வு அடுத்த தொடரில் பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்

💥தொடரும்............

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 16 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment