Saturday 23 April 2016

நோய் ஒரு சோதனையா.? இஸ்லாத்தின் நிலை பாடு.!!!

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🌡நோய் ஒரு சோதனையா.?
🔮இஸ்லாத்தின் நிலை பாடு.!!!

💫நம்மில் சிலருக்கு நோய் வந்தால் .!!!!

💫அல்லாஹ் நம்மை கஷ்ட படுத்தவே நோயை தருகிறான் என்று நினைக்கிரோம்.!!

💫அல்லது நல்லவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் இப்படி கஷ்டம் கொடுப்பான் என்றும்.!!!

நம் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி கொண்டு இருப்பார்கள்.!!!

💫ஆனால்

💫உண்மையில் நோய் என்பது அல்லாஹ் நமக்கு கொடுக்கும் அருள் கொடை என்று புரியாததே இதற்கு காரணம்.!!

💫நபி மொழி.!!!!

💫இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 5645

💫மற்றொரு நபி மொழி.!!!!

💫இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
ஷஹீஹ் புகாரி 5641 5642

💫ஆனால் இதை அறியாத நம்மவர்கள் நோய் என்று வரும் வரை  ஈமான் என்ற  ஒன்றை பெயரிலாவது வைத்துருப்பவர்கள் .!!!

💫நோய் வந்து விட்டால் போதும்.!!!

💫நோயை போக்குவதற்கு என்ன வெல்லாம் செய்கிறோம்.!!!!

💫கற்பனைகள் ஆரம்பமாகிவிடும்...

💫பேய் , பிசாசு , தெய்வ குத்தம் .…

💫இப்படியே ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை மறந்து தர்ஹா, கோவில் என எங்காவது சென்று தன் நோயை போக்க போரடுகிறார்கள்.!!!

💫நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 4:48)

💫அல்லாஹ் இவ்வளவு அழகாக சொல்லியும் ,

💫தன் நோய் குணம் அடைந்தால் போது என்று இம்மை சுகத்திற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு சாதாரணமாக இணைவைத்து வைத்துவிடுகிறார்கள்.!!!

💫இப்படி பட்டவர்களை பற்றி அல்லாஹ் தெளிவாக சொல்லுகிறான்.!!!

💫இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.
ஷஹீஹ் புகாரி 5643

💫ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 21:35)

💫சாதாரண நோயின் காரணமாக அல்லாஹ்யே இணைக்கும் அளவுக்கு சென்று விடுக்கிறோமே

💫நாம் சிந்திக்க வேண்டாமா.?

சிந்திக்கும் திறன் அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லையா.?

💫நன்மையோ , கேட்டதோ  அல்லாஹ் புறத்தில்.இருந்து  வருவதை உறுதி படுத்தபட வேண்டிய நாம்.!!!!

💫சிறந்த சமுதாயமாக ஆக்கப்பட்ட சமுதாயம் (குன் தும் கைரி உம்மத்) என்கிற நாம்.!!!

💫பிறருக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நாம்.!!!!

💫இப்போது இருப்பதோ மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றி கொண்டும்.!!!

💫அல்லாஹ்விற்கு இனைவைத்து கொண்டு இருகிறோம்.!!!

💫இப்படி பட்டவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.!!!

💫அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
(அல்குர்ஆன் : 10:30)

💫இன்ஷா அல்லாஹ்

💫இனி வரும் காலங்களிலாவது இதை போல் இணைவைப்பதை விட்டு விட்டு .!!!

💫ஒரே இறைவன் அகிலத்தின் அதிபதி.!!
அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர்களாக

💫வாழும் வாழ்க்கையிலும்,மரணிக்கும் தருவாயில் கலிமா சொன்ன நிலையில் மரணிக்க முயற்சி செய்பவர்களா வாழ

💫அல்லாஹ் அருள் புரிவானாக .!!

💫ஆமீன் யாரப்பில் ஆலமீன்.!!!! .

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUDATION 📡

No comments:

Post a Comment