Thursday, 14 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-6

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-6


💈நமக்கே தெரியாமல் நமது சமுகத்தில் நமது வாழ்க்கையில் இந்த வட்டி பல ரூபத்தில் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் வாங்கும் பழக்கத்தில் உள்ள சில வட்டிகளைப் பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக👇🏻

🏍வாகனம் வாங்குவதில் வட்டி❌


💈இன்று சர்வசாதாரணமாக வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்த முடியவில்லை என்றும் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.

💈இதில் வெளிடையாக நாம் வட்டி கொடுகிறோம் என்று தெரியாவிட்டாலும்

👆🏻இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

 💈பலரை புது வண்டியா எவ்வளவு என்று கேட்டால் நான் 'டிவ்'வில் வாங்கினேன் என சர்வசாதரமாக கூறுவார்கள்.

💢அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

💈பலர் இதை தவறு என்றே உணர்வது கிடையாது வட்டிக்கு உள்ள தன்டனை அனைத்தும் இதுக்கும் பொருந்தும் என்பதை வாங்குபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

💢அதற்கு நாம் என்ன செய்யலாம் ❓

💢ஏன் புதிய வாகனம் தான் வாங்க வேண்டுமா?பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்குமே

💈அதே நேரம் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தையும் வாங்கிக் கொள்ளலாமே!!

❌வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும்❌

💢என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.

💈ஏன் வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.

💈அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மறுமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.

       🛡அடுத்து

🏛வீடு வாங்குவதில் வட்டி❌


🏍வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதற்க்கும் பொருந்தும் இதற்கு தெளிவான விளக்கம் தேவை படாது இருந்தாலும் சிரிய ஆலோசணை கூறுகிறோம்👇🏻


💢வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💢வட்டியின் வாயிலாக நாம் பெறும் வீடு நிச்சயம் அழிய கூடியதே.

💢சிந்தித்துப்பார்த்து அல்லாஹ்வால்  தடுக்கப்பட்ட விஷயத்தின் வாயிலாக பெறப்படும் வீட்டை விட ஒன்றும் இல்லாதவனாக இருப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது

💢நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர்  சற்று கீழே உள்ள வசனத்தை நினைவில் சிந்தித்து பார்க்க வேண்டும்.


📓மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!

(அல் குர் ஆன் 66:11)

🌀எனவே அன்பார்ந்தவர்களே நாம் அல்லாஹ்விடம் நிரந்தரமான அந்த சொர்கத்தில் அழகிய வீடு கட்டித்தர பிரார்த்திப்போம்.

🌿இன்ஷா அல்லாஹ் வல்ல ரஹ்மான் நமக்கு அருள் செய்வானாக


🗯 தொடரும்.....

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment