Wednesday 27 April 2016

இஸ்லாம் கூறும் நற்குணம் பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮இஸ்லாம் கூறும் நற்குணம்💟

     பகுதி - 3

🌀அல்ஹம்துலில்லாஹ் சென்ற தொடரின் தொடர்ச்சியாக இதை காண்போம் இன்ஷா அல்லாஹ்

🗯நற்குணத்தை இல்லாமல் ஆக்கக்கூடியவைகள்👇🏼

🔹பெருமை
🔹பொறாமை
🔹கல்நெஞ்சம்
🔹நல்லுபதேசத்தை ஏற்க மறுத்தல்
🔹தலைமைத்துவம்
🔹உயர்ந்த பதவிகளையும் எதிர்பார்த்தல்
🔹தான் செய்த செயலுக்கு புகழை எதிர்பார்த்தல்

👆🏽போன்ற அனைத்து விஷயங்களும் நற்குணைத்தை இல்லாமலாக்குகின்ற  காரியங்களாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 👆🏽இவைகள் அனைத்துமே தற்பெருமை உள்ளவர்களிடமிருந்தே உருவாகின்றன.

💫 தீய விஷயங்கள் அனைத்துமே நற்குணத்தை அழிக்க கூடிய விசயம் ஆகும்.

💫 நல்ல விஷயங்கள் அனைத்துமே நற்குணத்திற்கே உரிய பண்பாகும்!                            .

💯நற்குணம்  என்பது உயர்ந்த பண்பாகும்,

 💯அதனது கூலியையும் பண்பையும் எடுத்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

 ❌🚫அதனை விட்டு தடுக்கக்கூடிய
🔹பொறாமை
🔹பிறரை நாவினால் நோவினை செய்தல்
🔹நேர்மையின்மை
🔹கோல்
🔹 புறம்
🔹கஞ்சத்தனம்
🔹உறவினர்களை துண்டித்து நடத்தல்

👆🏽இது போன்றவற்றிலிருந்து தவிர்ந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

 ☝🏻அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்து தடவைகள் தனது மேனியை சுத்தம் செய்கின்றான்.

💫கோபத்தை விட்டு விட்டு நம்மை சூழ உள்ள பெற்றோர்கள், மனைவியர்கள், குழந்தைகள், நண்பர்கள், அறிந்தவர்கள் அனைவர்களுடனும் சிறந்த முறையில் வாழ்ந்தவர்கள், இனிமையான பேச்சுக்களையும், முக மலர்ச்சியுடனும் இருக்கின்றவர்கள் இவர்கள் அனைவருமே நற்குணத்தின் மூலம் உயர்ந்த நற்கூலியை பெறத்தகுதியானவர்களே!.

💫நபி (ஸல்) அவர்கள்  நல்லுபதேசத்தின் போது சுருக்கமாக அழகாக நற்குணத்தைப் பற்றி  குறிப்பிட்டார்கள்:

📓“எங்கிருந்த போதிலும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள்! இதனால் தீமைகள் அழிந்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் நடந்துகொள்ளுங்கள்”

💫வெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம் போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.

💫அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்(அல்குர்ஆன் 7:179).

💫இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும்.(அல்குர்ஆன் 7:176)

💫உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி தடுமாறி போனது ஏன்⁉

💫எந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும் முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம்வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.

💫நாம் அனைவரும் நபிகளார் கூறிய “மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள், நற்குணமுடையவரே!”
எனற கூட்டத்தில் இருக்க வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும்  அருள் புரிவானாக!


💯💯💯💯💯💯💯💯💯💯💯

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 28 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

No comments:

Post a Comment