📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
☮இஸ்லாம் கூறும் நற்குணம்💟
பகுதி - 1⃣
💢இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை
✨தன் குணங்களை நற்குணங்களால் அழகாக்கி கொள்ளக் கட்டளையிடுகிறது கற்றுதருகிறது.
📓உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
📓நபி (ஸல்) அவர்களும் "நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்" என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
✨நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும்,
⚡இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான்.
⚡இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,
📓“நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04)
💫என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள்.
✨நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள்.
📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அதிகமானவர்கள் சுவர்க்கம் நுழைவது இறையச்சத்தினாலும், நற்குணத்தினாலுமேயாகும்” (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)
📜நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கு சிறந்த ஒரு நல்லுபதேசம் செய்கின்றார்கள்:
💥அபூ ஹுரைராவே நீர் நற்குணத்தை கடைபிடிப்பீராக! அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! நற்குணம் என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள், ‘துண்டித்து நடக்கும் உறவினர்களுடன் சேர்ந்து நடப்பீராக! உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக!” (ஆதாரம்: அல்பைஹகீ)
🌟பிரமாண்டமான நன்மையையும் உயர்தரமான அந்தஸ்தையும் இந்த நற்குணத்தினால் ஒரு அடியான் எளிதில் பெற்றுக் கொள்கின்றான்.
📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நற்குணம் உள்ள ஒரு அடியான் நின்று வணங்கி நோன்பு நோற்பவனின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றான்” (ஆதாரம்:அஹ்மத்)
📜நபி (ஸல்)அவர்கள் நற்குணத்தை பூரண இறை விசுவாசத்திற்கு உரிய அடயாளங்களில் ஒன்றாக கணிப்பிட்டுள்ளார்கள்.
📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
🌟“எவரிடத்தில் நற்குணம் என்ற பண்பு இருக்கின்றதோ அவரே பூரண இறை விசுவாசியாவர்”
📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
🌟“மனிதர்களுக்கு பிரயோஜனம் அளிக்கக் கூடியவற்றை செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்;
🔺ஒரு முஸ்லிமுக்கு சந்தோசமளிக்ககூடிய செயல்களை செய்வது
🔺 அல்லது கஷ்டத்தை விட்டும் நீக்குகின்ற
🔺 அல்லது அவனின் கடனை நிறைவேற்றுவது
🔺 அல்லது பிறரின் பட்டினியை நீக்குவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல்களாகும்.
🔻ஒரு முஸ்லிமின் தேவயை நிறைவேற்றுவதற்காக செல்வதென்பது பள்ளிவாசலில் ஒரு மாத காலம் இஃதிகாப் இருப்பதனை விடவும் என்னிடத்தில் விருப்பதுக்குரிய செயலாகும்” (ஆதாரம்:தபரானி)
🌟ஒரு முஸ்லிம் நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கற்றுதருகிறது
✨ஆனால் இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.
📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்". (ஆதாரம்-புகாரி)
🏮அதனால் தீயவார்த்தைகளை பேசுவதை விட வாயை மூடி மவுனமாக இருக்க கட்டளையிடுகிறார்கள் நபி(ஸல்).
🏮ஆனால் இன்று நம்மில் பலர் நண்பர்களுடன் இணைந்து விட்டால் சகட்டு மேனிக்கு தீய விஷயங்களையும் ஆபாசமான உரையாடல்களையும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.
✨அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்
🌟எம் தூதர் தெளிவாக சொல்லியும் நாம் அந்த வார்த்தைகளை சர்வசாதாரணமாக எடுத்து கொண்டு இருக்கிறோம்
✨ஆகவே அன்பார்ந்தவர்களே எந்த உபதேசங்களை படித்தோமோ அதை வாழ்வில் செயல் படுத்தக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் எம்மை மாற்ற வேண்டும்
💥இன்ஷா அல்லாஹ் தொடரும்......
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📮 பதிவு நாள்: 25 APR 2016
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:
Post a Comment