Tuesday, 5 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

           
          🔵பகுதி-3


💥உறுதியாக தடுக்கப்பட்டவை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது
உதாரணமாக👇🏻


🔵“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்;


📓எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள் அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:151)

👆🏻இதுபோல் ஹதீஸில் நாம் பார்க்கலாம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓நிச்சயமாக அல்லாஹ் மது செத்த பிராணிகள் பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றின் வியாபாரத்தை (ஹராம் என்று) தடை செய்திருக்கிறான்
        (அபூதாவூத் )


💥நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓நிச்சயமாக அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால் அதன் (மூலம் கிடைக்கும்) கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான் .;
            (தாரகுத்னீ)


☝🏾அல்லாஹ் சில வசனங்களில் குறிப்பிட்ட வகையை சேர்ந்த தடுக்கப்பட்ட சில வற்றை குறிப்பிடுகிறான்.

🔸உதாரணமாக


💥சாப்பிட அனுமதிக்கப்படாதவை பற்றி பின் வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்👇🏻


 📓(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:3)


💥திருமணம் செய்துகொள்ள விளக்கப்பட்ட பெண்களைப் பற்றி பின் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்👇🏻


📓உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:23)

❌தடை செய்யப்பட்ட வியாபாரங்களை பற்றியும் ☝🏾இறைவன் கூறுகிறான்👇🏻

📓அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கி விட்டான்
                                           (2:275)


💥நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்கள் மீது நிகரற்ற அன்புடையவன் .

🔸ஏராளமான நல்லவற்றை நமக்கு ஆகுமாக்கி வைத்துள்ளான் ஆகுமாக்கப்பட்டவையின் விவரங்கள் நமக்கு கூறப்படவில்லை ..

🔸தடை செய்யப்பட்ட குறிபிட்ட சில விஷயங்கள் தான் ...

🔸அவற்றை நாம் விளங்கிக் கொள்வதற்காக அவை அனைத்தும் கூறப்பட்டு விட்டன ...

💥குர்ஆன் கூறுகிறது

📓 நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்
(6:119)

❌தடுக்கப்பட்டவைகளை நாம் பெரியதாகவும் கஷ்டமானதாகவும் நினைப்பதால் தான்  நமக்கு அது சிரமமாக தெரிகின்றது

💥இந்த வசனங்களை நாம் நன்கு படித்தோம் என்றால் நமக்கு அது இலகுவாகிவிடும்...


💥ஆகுமானவற்றை பற்றி இறைவன் என்ன கூறுகின்றான்????

💥அடுத்த தொடரில் பார்ப்போம்.


            🔵தொடரும்....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment