Saturday, 16 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-9

🔥🔥வட்டிக்கு என்னதான் தீர்வு வட்டியை அழிக்க நாம் என்ன செய்யலாம்.


🔥பணம் உள்ளவர்கள் அந்த பணத்தை மார்க்கம் கூறியமுறையில் செலவு செய்தால் வட்டி என்ற முஸிபத் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


          🛡மேலும்.......

🔥வட்டி இல்லாத வங்கியே இதற்க்கு தீர்வாக அமைய முடியும்.

🔥நமது முஸ்லிம்கள் சமூகத்தில் உள்ள அனைவரும் அல்லது அதிகமானோர் வட்டி வாங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாலே வட்டி இல்லா வங்கிகள்  அதிகரிக்கும்.

🔥வட்டி இல்லாத பொருளாதார அமைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த பொருளாதார தேக்கம் சிறிய அளவிலேயே காணப் பட்டது.


🔥இதற்க்கு ஒரு சிறிய முயற்சியாக பைத்துல் மால் போன்ற செயல்முறையை நடை முறைப்படுத்தலாம்.


🔥பைத்துல் மால் என்பது வட்டி இல்லா சிறிய வங்கியை போல் இயங்கக் கூடியதாகும்.

🔥பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதும் பணத் தேவை உடைய மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதும் மக்கள் செலுத்தும் ஜகாத் வரிகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் பைத்துல் மாலின் முக்கிய பணிகளாகும்.


🔥இந்த செயல்முறையின் மூலமாக வட்டியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் கடன் தேவை உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்கலாம் அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உதவ முடியும்.


🔥வேறு எந்த (மத) சமூகத்திலும் இல்லாத இந்த இனிய முறையை செயல் படுத்துவதின் மூலம் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக் காட்டாக திகழ முடியும்.


🔥அன்பு சொந்தங்களே இதுவரை நாம் போட்ட பதிவுகளை பத்தோடு பதினொன்றாக நினைக்காமல் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்யுங்கள் வல்ல ரஹ்மான் நமக்கு முற்றிலும் உதவி செய்வான்.


🔥சமுதாயத்தின் சாபக்கேடான வட்டியை மனதாலும் உடலாலும் வெறுத்து வல்ல ரஹ்மானின் முழு உதவியை பெறக்கூடிய சமூகமாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!!!!!


ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment