Thursday, 7 April 2016

பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💢பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா❓

🗯பிள்ளை பெற்றடுப்பது பெரிதல்ல அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

👆🏻இந்த விசயம் இந்த காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தான் கூறமுடியும்.


🗯கேட்டால் நவீன காலம் பிள்ளையை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லையாம்.

💢 பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா❓

💢பராமரிக்க வேண்டாமா❓


✅பலர் நமது பிள்ளை நல்ல பிள்ளை தவறு ஏதும் செய்யாது, எனது பிள்ளையை நான் நம்பாவிட்டால் யார் நம்புவது என்றெல்லாம் கூறுவார்கள்.

👆🏻இதை நாம் குறை கூறவில்லை ஆமாம்,நமது பிள்ளைகளை நாம் நம்பாவிட்டால் வேறு யார் நம்புவது.


💢ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடும் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும்.


❎இன்றைய சூழல் நமது பிள்ளைகளை தவறான நிலைக்கு கொண்டு செல்கிறது.

         🗯ஒன்று👇🏻

💢நமது பிள்ளைகளை கெடுக்கும் விசயம் பல வீடுகளில் உள்ளது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

❎பிள்ளைகளுக்கு எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன.

👆🏻இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர் என்பது வேதனையான விசயம்.

           🗯அடுத்து👇🏻

💢பல பெற்றோர்கள் செய்யும் அடுத்த தவறு

📱📲செல்போன்

❎பல பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள்.


👆🏻இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர்.


📱செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

✅பெற்றோர்களே பிள்ளைகளை பெற்றடுப்பதினால் மட்டும் நமது பொறுப்பு நீங்கி விடாது.


✅அந்த பிள்ளைகளுக்கு மார்கத்தையும் அந்த பிள்ளைகளை கண்கானிப்பதும் பெற்றோர்கள் மீது கடமை ஆகும்.

♦சிந்தித்துப்பாருங்கள்

💥உங்கள் பிள்ளைகளின் எதிர்ககாலத்தைப்பற்றி சிந்தித்ததுண்டா?

🔃முஸ்லீம் பெண்களைக் குறி வைத்து  தேடிக்கொண்டிருக்கிறது கயவர்க்கூட்டம்..

❌தன் பெண்களின் எதிர்காலத்தை சீரழிக்க நீங்களே காரணமாகாதீர்கள்.

🚫பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரம் எல்லை மீறாமல் இருக்கும் வரை பாதுகாப்புதான்.

💔ஆனால் எல்லை மீறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகள் குடும்பங்களை சிதைத்து விடும்.

📲செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கப்பாருங்கள்.

🎙குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

💥அல்லாஹ் அனைத்து சகோதரிகளையும்  அனைத்து விதமான சீரழிவுகளில் இருந்து பாதுகாப்பானாக!!!!!!

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 07 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday, 6 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

           
          🔵பகுதி-4⃣

❤அல்ஹம்துலில்லாஹ்

💠இதுவரை தடுக்கப்பட்டவைகளை பற்றி நாம் பார்த்தோம்
ஆகுமானவை பற்றி அல்லாஹ் குர்ஆன் ஷரீஃபில் கூறுகிறான்

📓மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (உண்ண உங்களுக்கு ) அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள்
                       (2:167)

🌀இவ்வசனத்தின் மூலம் நல்லவை அனைத்தும் ஆகுமனவையே என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்

🌀பொதுவாக ஹராம் என்பதற்கான ஆதாரம் இல்லாத எதையும் ஹலால் என்றே நாம் ஏற்க வேண்டும் .
இது அல்லாஹ் நமக்கு செய்த கருனையும் மகத்தான உபகாரமுமாகும். இதற்காக நாம் இறைவனுக்கு அதிகம் நன்றி செலுத்த வேண்டும் .

🌀மார்க்கத்தை விளங்கிக்கொள்ளாத சிலர் ஹராமுடைய வகைகளை பார்க்கும் போது மனச்சங்கடதிற்க்கு ஆளாகிறார்கள் . ஹலால் உடைய வகைகளை கூறினால் மட்டும் மார்க்கம் இலகுவானது என்று இவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ன ❓

💠ஆகுமாக்கப்பட்ட நல்ல உணவுகளின் பட்டியல் இவர்களுக்கு விவரிக்கப்பட்டால் மார்க்கம் தங்களுடைய வாழ்க்கையை கசப்பாக்கி விடவில்லை என்று நிம்மதி பெறுவார்களா என்ன ❓❔

☘மார்க்கம் இலகுவானது தான் ‼
ஆனால் மக்கள் அதை தவறாக விளங்கிக் கொண்டார்கள் .

☘இலகுவானது என்பது மக்களின் மனோ இச்சை இன்னும் விருப்பங்களுக்கு ஏற்பவாறு அமைந்திருப்பது என்பது பொருளல்ல ; மாறாக மார்க்கம் கூறி இருக்கும் முறையில் தான் இலகு இருக்கிறது ...

☘மார்க்கம் இலகுவானது என்று கூறி தடை செய்யப்பட்டவற்றை செய்வதற்கும்  அனுமதித்தவற்றை செய்வதற்குமிடையே வேறுபாடு உண்டு.

🌿மார்க்கம் இலகுவானது என்பதன் பொருள் நம் மனோ இச்சையின் விருப்பத்திற்கேற்ப அமைந்துள்ளது என்பதல்ல.

🌿இது மட்டுமல்ல அல்லாஹ் சில பொருட்களை ஹராமாக்கி இருப்பதில் பல நுட்பங்கள் இருப்பதை முஸ்லிம்கள் உறுதியாக நம்ப வேண்டும் .
🔹உதாரணமாக அல்லாஹ் சில விஷயங்களை செய்யக்கூடாது என தன் அடியார்களை தடுத்து ,
அவர்கள் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதை சோதிக்கிறான் .

🔹இன்னும் சுவர்க்க வாசிகள் யார் நரக வாசிகள் என்பதையும் இதன் மூலம் சோதிக்கிறான்

🔺நரக வாசிகள் மனோ இச்சைகளையே பின்பற்றுவார்கள்.
நரகம் இச்சைகளைக் கொண்டே சூழப்பட்டிருக்கிறது .

🔸சுவர்க்க வாசிகள் மனதிற்கு சிரமமானதை பொறுமையுடன் சகித்துக் கொள்கிறார்கள் . சொர்க்கம் சிரமானவற்றைக் கொண்டே சூழப்பட்டுள்ளது ...


🍃இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் உள்ள சிரமத்தை நன்மையின் பார்வையுடனும் அல்லாஹ்வின் திருப்தியை வேண்டி கீழ்படிதலின் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது அவர்களுக்கு சிரமமாக தெரிவதில்லை ...

🍁நயவஞ்சகர்கள் இறைக்கட்டளைகளில் உள்ள சிரமங்களை வேதனை மற்றும் இழப்பின் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது அவர்களுக்கு செயல்படுத்த முடியாத கடினமான காரியமாக தெரிகிறது ...


💠தடுக்கப்பட்டதை அல்லாஹ்விற்க்காக விடுவதின் மூலமே அடியான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதை விட சிறந்ததை பகரமாகப் பெறுகிறான், இறை நம்பிக்கையின் இன்பத்தையும் உள்ளத்தில் உணர்கிறான்...

💥அல்லாஹ்வே! எங்கள் அனைவரையும் நீ அமைத்த வரம்புகளை பேணி நடக்கும் நல்லருளை உன்னிடம் வேண்டுகிறோம்..


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 5 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

           
          🔵பகுதி-3


💥உறுதியாக தடுக்கப்பட்டவை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது
உதாரணமாக👇🏻


🔵“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்;


📓எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள் அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:151)

👆🏻இதுபோல் ஹதீஸில் நாம் பார்க்கலாம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓நிச்சயமாக அல்லாஹ் மது செத்த பிராணிகள் பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றின் வியாபாரத்தை (ஹராம் என்று) தடை செய்திருக்கிறான்
        (அபூதாவூத் )


💥நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓நிச்சயமாக அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால் அதன் (மூலம் கிடைக்கும்) கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான் .;
            (தாரகுத்னீ)


☝🏾அல்லாஹ் சில வசனங்களில் குறிப்பிட்ட வகையை சேர்ந்த தடுக்கப்பட்ட சில வற்றை குறிப்பிடுகிறான்.

🔸உதாரணமாக


💥சாப்பிட அனுமதிக்கப்படாதவை பற்றி பின் வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்👇🏻


 📓(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:3)


💥திருமணம் செய்துகொள்ள விளக்கப்பட்ட பெண்களைப் பற்றி பின் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்👇🏻


📓உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:23)

❌தடை செய்யப்பட்ட வியாபாரங்களை பற்றியும் ☝🏾இறைவன் கூறுகிறான்👇🏻

📓அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கி விட்டான்
                                           (2:275)


💥நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்கள் மீது நிகரற்ற அன்புடையவன் .

🔸ஏராளமான நல்லவற்றை நமக்கு ஆகுமாக்கி வைத்துள்ளான் ஆகுமாக்கப்பட்டவையின் விவரங்கள் நமக்கு கூறப்படவில்லை ..

🔸தடை செய்யப்பட்ட குறிபிட்ட சில விஷயங்கள் தான் ...

🔸அவற்றை நாம் விளங்கிக் கொள்வதற்காக அவை அனைத்தும் கூறப்பட்டு விட்டன ...

💥குர்ஆன் கூறுகிறது

📓 நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்
(6:119)

❌தடுக்கப்பட்டவைகளை நாம் பெரியதாகவும் கஷ்டமானதாகவும் நினைப்பதால் தான்  நமக்கு அது சிரமமாக தெரிகின்றது

💥இந்த வசனங்களை நாம் நன்கு படித்தோம் என்றால் நமக்கு அது இலகுவாகிவிடும்...


💥ஆகுமானவற்றை பற்றி இறைவன் என்ன கூறுகின்றான்????

💥அடுத்த தொடரில் பார்ப்போம்.


            🔵தொடரும்....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday, 4 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

             🔵பகுதி-2


☝🏾அல்லாஹ்வின் சட்டங்கள் அனைத்தும் அவனது ஞானம் மற்றும் நீதி நிறைந்தவை
அவை அர்த்தமற்றவையும் அல்ல வீனானவையும் அல்ல


📓وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

📓மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:115)


☑ஹலால் (அனுமதிக்கப்பட்டவை)
ஹராம்(தடுக்கப்பட்டவை) ஆகியவற்றின் அடிப்படை காரணத்தை அல்லாஹ் மிக தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகிறான்👇🏻


📓(இத்தூதர்) நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார்  தீயவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார் .....(7:157)


👆🏻இவ்வசனத்திலிருந்து நாம் தெளிவாக தெரிந்துகொள்வது என்னவெனில் நல்லவை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்
கெட்டவை நமக்கு விலக்கப்பட்டவையாகும் ...


⚪ஒன்றை ஆகுமாக்குவதும் தடை  செய்வதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும் உரிமையாகும்.

⚪எவரேனும் ஒருவர் அந்த உரிமையை தமக்கும் இருப்பதாக அல்லது அல்லாஹ் அல்லாத வேறு எவருக்கேனும் இருப்பதாக நம்பினால் அவர் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்ட இறை நிராகரிப்பாளர் (காபிர்) ஆவார் .


📓أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ


📓அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு
(42:21)

⚪ஹலால் ஹராமை பற்றி பேசுவது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கறிந்தவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகும்.


⚪ஒன்றைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளாமல் அதை ஹலால் ஹராம் என்று கூறுபவனை குர்ஆன் கடுமையாக கண்டிக்கிறது👇🏻

📓உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 16:116)



         🔵தொடரும்....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 04 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday, 3 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫


🌿நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களுக்கு பல கடமைகளை விதித்திருக்கிறான் :

🌿 அவற்றை பாழ் படுத்தக் கூடாது.

 ☘பல சட்ட வரம்புகளை நிர்ணயித்துள்ளான் :

☘ அவற்றை தகர்த்திடக் கூடாது.

🍁பல செயல்களை விலக்கியுள்ளான்:  அவற்றை செய்யக்கூடாது.

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் தனது நூலில்

🔹எவற்றை ஆகுமானதாக ஆக்கியுள்ளானோ அவைகள் அனைத்தும் ஆகுமானவை.

🔹எவைகளை விளக்கியுள்ளானோ அவை அனைத்தும் விலக்கப்பட்டவை.

🔹அல்லாஹ் எதை தெளிவு படுத்தாமல் மவுனம் காத்துள்ளானோ, அவை சலுகைகள்.
எனவே அச்சலுகைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

🔸நிச்சயமாக அல்லாஹ் எதையும் மறந்துவிட மாட்டான்"
 என்று கூறி விட்டு பின்னர் கீழ்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

💥.. உம் இறைவன் மறப்பவனாக இல்லை ",
             
📖 ( ஸூரா மர்யம் 19:64)
📓(முஸ்தத்ரகுல் ஹாகிம்)

🍁அல்லாஹ்வால் (ஹராமாக்கப்பட்டு)விலக்கப்பட்டவை அனைத்தும் அவன் நமக்கு விதித்திருக்கிற வரம்புகளாகும்.

📖இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகள் . ஆதலால் அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள் (2:187)


📖எவன் அல்லாஹ்விற்க்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகிறானோ,
அவனை நரகத்தில் புகுத்தி விடுவான் ,
அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான்.
இழிவு படுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு..  (4:14)

🍄இன்று வாழக் கூடிய எம் சகோதர சகோதரிகள் சர்வசாதாரணமாக அல்லாஹ் எதையெல்லாம் ஆகுமாக்கப்பட்டதாக ஆக்கினானோ அவற்றை விட்டு தூரமாகி

🍄எதை எல்லாம் அல்லாஹ் விலக்கினானோ அதை நெருங்க கூடிய சமுதாயமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

♻அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்

🌿குறுகிய அறிவும் பலவீனமான உள்ளமும் கொண்டு மனோ இச்சையை பின்பற்றுவோர்,
தடை செய்யப்பட்ட விஷயங்களை பற்றி கேட்கும் போது சலிப்புடன் கூறுகிறார்கள் :

🌿மார்க்கம் இலகுவாக இருந்தும் இந்த அறிஞர்கள் அனைத்தையும் ஹராம் என்று கூறி எங்கள் வாழ்வை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதை கசப்பாக்கி விட்டார்கள்

☘அல்லாஹ் எம்மை முஸ்லிமாக படைத்ததே தமக்கு அல்லாஹ் செய்த மிக பெரிய கிருபை ஆனால் நாம் ஒரு கடுகளவு கூட அவன் செய்த கிருபையை நினைக்காமல் அவனுக்கும் அவனுடைய சட்டத்திற்கும் மாறு செய்கிறோம்.

☘அல்லாஹ்வின் சட்டத்தை மாறு செய்தவர்களை  அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றியதை பற்றி அவன் தன் திருமறையில்  கூறுவதை நீங்கள் பார்க்க வில்லையா❓

🏮ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்


🍁நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை சட்டமாக்குகிறான்;
அவன் மிக நுட்பமாக அறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான்
அவன் நாடியதை ஆகுமாக்கவும்
நாடியதை தடை செய்யவும் முழு உரிமை பெற்றவன்
நாம் அல்லாஹ்வின் அடிமைகள்
எனவே அவனது சட்டங்களை மனமுவந்து எவ்வித ஆட்சேபனையுமின்றி பொருந்தி கொள்வது கடமையாகும்...

 🍃இன்ஷா அல்லாஹ் தொடரும்.....



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday, 2 April 2016

வெட்கம்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🌿வெட்கம்🌿

⚡அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்று நாம் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

💐அல்ஹம்துலில்லாஹ்💐

💫இன்று மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் நாகரீகம் என்ற பெயரில் வெட்கத்தை இழந்து கொண்டே போகிறோம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்


💫ஆனால் இன்று நம்மில் பெரும்பாலோர் இந்த வெட்கம் என்ற ஒரு வார்த்தை இருப்பதையே மறந்துவிட்டார்கள் என்றே கூறளாம்.

⚡நாட்கள் செல்ல செல்ல கேவலங்களும் அசிங்கங்ளும் எண்ண முடியாத அளவில் நம்மிடம் பெருகி உள்ளது வேதனையான விசயம்

👆🏽இதற்கு இந்த சினிமா பெரிதும் உதவுகிறது.

💫இதில் வேதனை ஆன ஒன்று என்னவென்றால் இந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சி நம் முஸ்லிம் மக்களிடமும் காணப்படுகிறது என்பது தான்.

☝🏻அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

💫வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

💫அன்பார்ந்தவர்களே இதோ எம்தூதரின் குணத்தை பாருங்கள்👇🏻

📓நபி(ஸல்) அவர்கள் அதிக நாண உணர்வுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தைக் கண்டால் அதன் பிரதிபலிப்பை அவர்களின் முகத்தில் காணலாம். (நூல் : புகாரி)

⚡கண்ணியத்திற்குரியவர்களே இன்று நாம் சர்வசாதாரணமாக எந்தவொரு வெட்கமும் இல்லாமல் தவறுகள் செய்து கொண்டு இருக்கிறோம்

💫அது தனிமையில் செய்யக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரி அல்லது பகிரங்கமாக செய்யக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரி எந்தவொரு அச்சமும் இல்லாமல் செய்கிறோம்

💫ஏன் அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓

💫⚡ எம் இஸ்லாமிய இளைஞர் இளைஞிகள் காதல் ( விபச்சாரம் ) என்று  எந்த  தைரியத்தில் செய்கிறீர்கள்?

⚡ஏன் அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓

💫எம் சகோதரிகள் சிலர் ஹிஜாபுகளை பேணாமல் சிலர் ஹிஜாபுகளை அணிந்தாலும் அதை அளங்காரத்தாலும் நறுமணத்தாலும் அந்த ஹிஜாபின் நோக்கத்தை மாற்றுகின்றனர் ...

⚡ஏன் அல்லாஹ்வின் பயம் இல்லையா❓

💫அல்லது அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓


💫இன்னும் இது போன்று  பாவங்களை அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் இந்த பதிவின் நோக்கம் பாவங்களை பட்டியல் இடுவது அல்ல

⚡அன்பார்ந்தவர்களே ஒரு முஸ்லிம் வெட்க உணர்வுடையவர்.

⚡மக்களை சிரமப்படுத்தும் அருவருப்பான எந்தச் செயலும் அவரிடம் இருக்கக்கூடாது.

⚡ஒரு முஸ்லிம் பிறரின்  உரிமையிலும் எந்த வகையிலும்  குறைவு செய்யமாட்டார்.

⚡ஏனெனில், வெட்கம் இவ்வாறான செயல்களுக்குத் திரையாகிறது.

⚡அவர் அல்லாஹ்வுக்காகவே வெட்கம் கொள்கிறார்.

⚡தனது ஈமானில் அநீதி கலந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்.

👆🏽இதுதான் ஒரு முஸ்லிமின் அடையாளம் நாம் யாராக இருக்கிறோம்❓❔


💫என்பதை நாமே சிந்தனை செய்வோம்.



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 02 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday, 1 April 2016

ஏப்ரல் 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

           🚫ஏப்ரல் 1🚫

🎭அறியாமையின் வெளிப்பாடே முட்டாள் தினம்🎭

✳மனிதனை முட்டாள் ஆக்கும் தினம் மார்க்கத்தில் உள்ளதா❓

❤கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே

🏮இந்த உலகத்தில் வாழ்ந்த சில மூடர்கள் அவர்களின் அறியாமையின் காரணத்தாலும் தங்கள் புகழை இந்த உலகத்தில் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் சில தினங்களை தோற்றுவிக்கின்றனர்

⭕அதில் ஒரு தினம் தான் இந்த உலக முட்டாள் தினம்.

 ✅இதற்கு இஸ்லாத்திற்கு எந்த சம்மதமும் இல்லை என்பதை இதற்கு முன் பகுதிகள் வாயிலாக பார்த்தோம்.

🔰ஆனால் நம்மில் இருக்கும் சில சகோதரர்கள் விளையாட்டிற்காகவும், சந்தோஷத்திற்காகவும் இந்த நாள் வந்தவுடன் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிறரிடம் பொய்யை கூறிக்கொண்டு அவர்களை ஏமாற்றுகின்றனர்.



🚫இதை பார்க்கும் எமக்கும் இதில் என்ன இருக்கு?இது ஒரு சாதாரண விளையாட்டு தான் என்று தோன்றும்.


✳இந்த தினத்தை கொண்டாடுவதின் காரம் பல ஹதீஸ்களையும் பல வசனங்களையும் நமது சகோதரர்கள் அறிந்தும் அறியாமலும் நிராகரிப்பதே ஆகும்.


💔இந்த தினத்தை கொண்டாடுவதின் மூலம் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியுமா❓

❌இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவது கூடத் தடுக்கப்பட்டுள்ளது.❌


❌அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.❌

🔰முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் –
📚ஆதாரம்:  (திர்மிதி, அபூதாவூத்)

✅எம்தூதரே உனக்கு கேடு உண்டாகட்டும் என்று சபித்தற்கு பிறகு நீங்கள் யாருடைய சிபாரிசை பெறப்போகிறீர்கள்❓

♦ஒன்று இல்லாத இந்த அர்ப்ப துன்யாவில் உள்ள இந்த அற்ப தினத்திற்காக வேண்டி எம்தூதர் உடைய சிபாரிசை இழக்க தயாராகிறீர்கள்❓


இன்னும் பல வசனங்களும் ஹதீஸ்களும் இந்த தினத்திற்கு எதிராக உள்ளது.


❤சகோதரர்களே❗❕

💥நாம் பல தினங்களை  சம்மந்தம் இல்லாமலே கொண்டாடுகிறோம்.


✳இதை பற்றி நமது இறைவன் நம்மிடம் கேள்வி கேட்டால் நம்மிடம் என்ன பதில் இருக்கிறது❓

♦சிந்தித்துப்பாருங்கள்♦

🔰யார் பிற மத கலாச்சாரத்தை கொண்டாடுகிறார்களோ அவர்களும் அவரை சாந்தவர் என்ற நபி மொழி நினைவு இல்லையா?

💥இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான

♦பொய் பேசுதல்,
♦பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல்,
♦ஏமாற்றுதல்

🔃ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்தால் தானே,மற்ற சகோதரர் நம்மை பார்த்து திருந்துவார்கள்.

🔰 இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுவதை கேளுங்கள்👇🏻

🔰“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

💥அதை போல் அல்லாஹ் மிக தெளிவாக தன் திருமறையில் சொல்கிறான் யார் பொய்யை கூறுகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய வசனத்தை நம்பாதவர்கள் என்று..

✳ஒருவன் குர்ஆனுடைய வசனங்களை நம்பவில்லை என்றால் முஸ்லிம் இல்லை.

🔰அல்லாஹ் கூறுவதை பார்த்தும் நீங்கள் இந்த பொய்யை கூற தயார் என்றால் அதற்கு நிச்சயம் கூலியை மறுமையில் பெறுவீர்கள் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

❤ஆகவே கண்னியத்திற்குயவர்களே நாம் ஒரு முஸ்லிம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு சம்மதம் இல்லாதவற்றிற்கு பக்கம் செல்லாமல் இருப்பதுடன்,

💥இனிவரக்கூடிய காலங்களில் எம்தூதர் எச்சரித்த இந்த பொய்யை பேசாமல் வாழ முயற்சிப்போம்

💥இன்ஷா அல்லாஹ் அதற்கு அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.

💥வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக ஆமீன்.



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 01 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡