Tuesday, 15 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 7
   
👩🏻பெண்ணுரிமை👩🏻

💠நாம் இத்தா வை பற்றி ஆரம்பிப்பதற்கு  முன் மார்க்கம் இத்தாவைப்பற்றி என்ன தெளிவுபடுத்துகிறது என்பதை ஆராய்வோம்..

☀காரணம் என்னவென்றால் அறியாமையின் காரணமாகவும்,
வெறுப்பு கண்ணோத்துடனும் சிலர் கூறுவார்கள்

👳🏻ஆண்கள் மட்டும் மறுமணம் எப்போது நினைக்கிறார்களோ அப்போது செய்துகொள்ளலாம்.

          🔹ஆனால்🔹

👩🏻பெண்களுக்கு மட்டும் நான்கு மாதம் மூன்று மாதம் குழந்தை பிறக்கும் வரை இத்தா இருக்கனும்
(அதாவது தனிமையில் இருக்கனுமாம்)

👩🏻பெண்களை தனிமையில் வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

❌அவர்களுக்கு சுதந்திரம்  வழங்குவதில்லை❌

❌அபசக்குணம் என்று கூறி நற்காரியங்களில் ஒதுக்கி வைக்கிறார்கள்.


❌போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

👆🏻இதுவெல்லாம் இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை✔

🔆இஸ்லாம் இந்த இத்தா விஷயத்திலும் பெண்களின் நலன் கருதியே அந்த சட்டத்தை முன்வைக்கிறது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

🔆இஸ்லாம் ஏன் இத்தாவை கட்டாயப்படுத்த வேண்டும் என நாம் சிந்தித்தால் நமக்கு விளக்கம் கிடைக்கும்.

🔆பிறகு இத்தாவை எதிர்பவர்களே அதை ஆதரிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

🔆அதை பற்றிய தெளிவுப்பெறுவதற்கு முன் அல்குர்ஆன் விளக்கத்தை பார்ப்போம்.


📓விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அல்குர்ஆன் (2 : 228)

📓கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்குர்ஆன் (65 : 4)

👆🏻இந்த வசனங்கள்  அந்த குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பிணி பெண்கள் விதி விலக்கு ஏற்படுகிறார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

🔹எனவே      
           சிந்தித்துப்பாருங்கள்❓

👆🏻இந்த குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

👍🏻எனவே இஸ்லாம் தெளிவான விளக்கத்தை தருகிறது.

❌தேவையற்ற குற்றச்சாட்டுகளை தவிர்த்திடுங்கள்❌

✔ இத்தா காலக்கட்டத்திலும் பெண்களுக்கான சில தேவைகளை நிறைவேற்ற அனுமதி வழங்குகிறது.

❌ஆனால் வீணாக ஊர் சுற்றுவது கூடாது❌


🔆அது சம்மந்தமாக கீழே உள்ள ஹதீஸ்👇🏻


📓என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (‘இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார்.

(இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார்.

ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், ”ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.
அறிவிப்பவர் :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : முஸ்லிம் (2972)

👆🏻இத்தா சம்மந்தமாக இன்னும் பல வசனங்கள் பல ஹதீஸ்கள் தெளிவாக உள்ளது நமது நோக்கம் அதை விவரிப்பது கிடையாது.

🔆மார்க்கம் ஒரு விசயத்தை சரி என கூறினாலும் தவறு என கூறினாலும்

    🔹சுப்ஹானல்லாஹ்🔹

அதை ஆராய்ந்தால் ஆயிரம் தெளிவுகள் கிடைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

✔ஆராய்ந்து தெளிவுப்பெறுவோம்✔

❓ஏன் இஸ்லாம் இத்தாவை  வலியுறுத்த வேண்டும்
 இன்ஷா அல்லாஹ் தெளிவாக அடுத்த தொடரிலே பார்போம்.


  💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 6

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 6
   
      👩🏻பெண்ணுரிமை👩🏻

🔹💠சென்ற தொடரிலே இஸ்லாத்தை விளக்காமல் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்திருக்கும் உரிமையை விளங்காமல் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டையும்

👩🏻பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் தொடரும் அனாச்சாரத்தையும் பார்த்தோம்.

💠இந்த தொடரிலிலே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி இருக்கும் உரிமைகளை பார்ப்போம்.

❄இஸ்லாம் அனைத்து நிலைகளிலும் பெண்ணிர்க்கு தர வேண்டிய கண்ணியத்தையும் உரிமைகளையும் வழங்கிக்கொண்டு தான் இருக்கிறது.


❄💠சென்ற தொடரிலே இஸ்லாத்தை விளங்காத சிலர் இஸ்லாத்தின் மீது வைக்கும் சில முக்கிய குற்றச்சாட்டுகளை பார்த்தோம்

❄இனி ஒவ்வொரு குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை என்னவென்று அறிந்து கொள்வோம்.


❌அனைத்து வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமில்லை.

❌அனைத்து  வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமில்லை.

❌அனைத்து வகையிலும் இருவரும் சமமானவர்களும் இல்லை.

✔காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

🍀இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

❄இனி ஒவ்வொரு குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை என்னவென்று அறிந்து கொள்வோம்.

1⃣கணவன் இறந்தால் இத்தா என்ற பெயரில் குறிப்பிட்ட நாட்கள் பெண்களை தனிமைப்படுத்தி வைப்பது.

        💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard



📮 பதிவு நாள்: 11 MAR 2016


📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி-5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி-5  
   
      👩🏻பெண்ணுரிமை👩🏻

💠இன்றைய  நவீன காலக்கட்டத்தில்  உலகில் எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்ட  பெண்கள் எந்த நாட்டிலாவது உண்டா❓

❄அவர்கள் கேட்கும் பெண்ணுரிமைகள் என்ன❓

🌟இத்தனை நூற்றாண்டுகளாகப் போராடியும் இன்னும் ஏன் அவை முழுமையாகக் கிடைக்கவில்லை❓

❌அதிகபட்ச உரிமைகளை வழங்கி விட்டதாகச் சொல்லும் மேற்கத்திய நாடுகளிலும்கூட இன்னும் ஏன் பெண்ணுரிமைப் போராட்டங்கள் தொடருகின்றன❓

👱🏼ஆண்களிடம் இருந்து தங்களுக்கு உரிமையை வேண்டும் பெண்கள் வீதியில் போராடும் அளவுக்கு அப்படி எத்தகைய உரிமைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்❓

❄என்றெல்லாம் ஆராய்ந்தால் நூற்றாண்டுகளாகத் தொடரும் பெண்ணுரிமைப் போராட்டத்தின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும்.

👩🏻பெண்கள் உரிமை என தற்காலத்தில் சாதித்ததது
என்ன❓

🔹நாகரீகம் என்ற பெயரில் ஆடையில் கட்டுபாடு இல்லை❗

🔹நாகரீகம் என்ற பெயரில் கணவணுக்கு கட்டு படுவது இல்லை❗

🔹நாகரீகம் என்ற பெயரில் நினைத்தவனுடன் நினைத்த நேரத்தில் வாழலாம்(திருமணம் தேவையில்லை)❗

👆🏻இது போன்று பல அனாச்சாரங்களே நாகரீகம் என்ற பெயரில் அரங்கேறுகிறது


🌿ஆனால் இஸ்லாம் மார்க்கம் எந்தெந்த உரிமைகளை பெண்களுக்கு வழங்கலாம் என தெளிவாக கூறி இருக்கிறது அனைத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி உள்ளது.


🌟இஸ்லாத்தின் மீது காழ்புணர்ச்சி கொண்ட சில மூடர்கள்📍

🌟இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது கிடையாது என எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகள் சில👇🏻


🌟கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது

🔹பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கிறது.

🔹முஸ்லீம் பெண்களை கல்வி பயில அனுமதி மறுக்கப்படுகிறது.

🔹முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.

🔹இஸ்லாம் பெண்களின் அதிகாரத்தை பறிக்கிறது.

🔹ஆண்களுக்கு சொத்தில் இரண்டு பாகம் பெண்களுக்கு ஒன்று என சட்டம் பிறப்பித்து பாரபட்சம் .

🔹இஸ்லாம் பெண்களை கருப்பு அங்கி அணியும் படி கட்டாயப்படுத்தி பெண் சுதந்திரத்தை பறிக்கிறது ..


👆🏻இது போன்று ஒரு சில சம்மந்தமே இல்லாத குற்றச்சாட்டுகளை வைப்பார்கள்

✔✔அனைத்து மதங்களை ஒப்பிடும் போது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே பெண்ணையும் சமமான படைப்பு என்று பறைச்சாற்றுகிறது.

❌இத்தகைய குற்றச்சாட்டுகள் சில அறியாமையின் காரணமாக சொல்லப்படுகிறது.

✔உண்மையில் இஸ்லாம் மார்க்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களை அறியாமையின் பிடியில் இருந்த மக்களிடம் இருந்து வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கான உரிமையை வழங்கியது.

✔அவைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரிலே பார்போம்

        💠தொடரும்💠

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 10 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👗மகளிர் தினம் ஓர் பார்வை👗

          பகுதி-4  

💠 இத்தலைப்பின் நோக்கம் 💠

☀ அதிகரித்து வரும் மேற்கத்திய கலாச்சாரத்தை பார்த்து நம் இஸ்லாமியர்கள் குறிப்பாக

         🌹பெண்கள் 🌹

ஏமாந்துவிடக்கூடாது .


📚 நமக்கென்று ஷரீஅத் எதை வகுத்துக்கொடுத்துள்ளதோ அதை அப்படியே ஏற்று நம் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் .

🏮 இதற்கு மாற்றமாக ,
நடைமுறை காலத்தில் நம் இஸ்லாமிய மார்க்கம் கூறாத பல காரியங்களை நாம் கடைபிடித்து வருகிறோம் .

❌ குறிப்பாக அன்னிய கலாச்சாரங்களின் வரிசையில் நாட்களை சிறப்பிப்பது தற்போது அதிகரித்துள்ளது .

1: ஆங்கிலப்புத்தாண்டு (ஜனவரி 1)

2: காதலர் தினம் (பிப்ரவரி 14)

3: மகளிர் தினம் (மார்ச் 8)

⛔ போன்ற தினங்களை இஸ்லாமியர்களும் ஆங்காங்கே சிறப்பிப்பதை பார்க்க முடிகிறது .

♻ மகளிர் தினத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது .

⛔ பார்க்கபோனால் இது முற்றிலும் தவாறான ஏற்பாடு .

✳ இதை மையப்படுத்தி பல ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுருக்கிறது .

🔅 பெண்களின் பாதுகாப்பிற்கும்,
உரிமைகளுக்கும்
👉 புது புது அமைப்புகளை தொடங்குவதும் ,

👉 வீதியில் இறங்கி போரட்டம் நடத்துவதும்,

👉 மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடுவதும்

❌ எந்த வகையிலும் சரியான தீர்வாக அமைய முடியாது .

✳ அப்படி ஒரு வாதத்திற்க்கு ஏற்றுக்கொண்டாலும்

         ❓ ஏன் ❓

☀ ஆங்காங்கே பெண்களின் மீது அத்துமீறல் நடக்கிறது.

🌐 இதற்கான புள்ளிவிவரங்களை சென்ற தொடரிலேயே கொடுத்திருந்தோம் .

🔰     🔰     🔰

பெண்கள் மீது நடைபெறும் அத்துமீறல் அனைத்திற்கும் பெண்கள்தான்
காரணம் .
 
🔰     🔰     🔰

⚓ ஈமான் கொண்ட முஸ்லிம் பெண்களே

👉 உங்களுக்கு தேவையான அனைத்து

💥 உரிமைகளையும்,

💥 பாதுகாப்பையும்,

இஸ்லாம் நீங்கள் கேட்காமலேயே கொடுத்துள்ளது .

🌹 இஸ்லாம் வழங்கியிருக்கும் உரிமைகளிலும் ,பாதுகாப்பு
ஏற்பாடுகளிலும் உலகம் அழியும் வரை யாராலும் குறை கண்டுவிட முடியாது .

ஆனால்

🚧 அறைகுறையாக ,முழுவதையும் ஆராயமல் நம் மார்க்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை

🚧 நம் பெண்களும் உண்மை என நம்பி ஏமாறுவது தான் வேதனையாக உள்ளது .

இதன் விளைவுதான் ,

     👇👇👇

இன்று நம் மார்க்கத்தில் பெண்களால் ஏற்படும் குழப்பங்கள் அதிகரிக்க காரணம் .

❌ ❌ இதில் வெட்கக்கேடு என்னவெனில்,
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் உரிமைகளை பெண்கள் 20% கூட சரியாக பயன்படுத்துவது கிடையாது ❌ ❌

⚡ நினைவில் வைக்க வேண்டும் :

👍 பெண்கள் இஸ்லாம் வழங்கிய உரிமைகளை,
100% சரியாக  எப்பொழுது பயன்படுத்துகிறார்களோ

👍 அப்பொழுதுதான் அவர்களுக்கான பாதுகாப்பு வலிமைபெறும் .

❎ மேக்கத்திய கலாச்சார சீர்கேட்டை கண்டு யாரும் ஏமாற்றமடைய வேண்டாம் .

♻ நம் இஸ்லாம் நமக்கு வழங்கியிருக்கும் அனைத்து உரிமைகளும் பாதுகாப்புடன் கூடிய  உரிமைகள் ,

👉  அவைகள் என்னவென்று இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம் .


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 09 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

👗மகளிர் தினம் ஓர் பார்வை👗

          பகுதி-3    

   
🏮இதுவரை மகளிர் தினம் எதற்காக உருவாக்கப்பட்டு கொண்டாபடுகிறது என்பதை  அறிந்தோம் ..

அல்ஹம்துலில்லாஹ் ..

💥இன்றய நடைமுறை காலத்தில் பெண்களுக்கென்று நிறைய அமைப்புகள் ,திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன .

💥அவ்வப்பொழுது உரிமைக்கான குரலும் எழுப்பப்பட்டு வருகிறது .

💥சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக நாமும் மதிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மங்கையர்களின் உள்ளத்தில் நிம்மதி பெருமூச்சாக வருகிறது .

💈இங்கேதான் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் நிலை உருவாகிறது .💈

✅உண்மை என்னவெனில் பெண்கள் நாளுக்கு நாள் நசுக்கப்படுகிறார்,

✅சமூகத்தின் கேளிக்கையாக மாறிவருகிறார்கள் .

✳WEB DUNIYA என்ற இனையத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தை பாருங்க

🕙இந்தியாவில் பெண்களின் நிலை
வியாழன், 27 மார்ச் 2008 (16:16 IST)

💥இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம்.

💥பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.

💥பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.

💥இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

✳ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு,

🏮இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

💈இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவத‌ற்கு எதிராகவே உள்ளது.💈

🔰அந்த பட்டியலில், பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் இந்தியாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

♦அதாவது 1000 ஆண்களுக்கு 927 பெண்கள்தான் இந்தியாவில் உள்ளனர்.
இதற்குக் காரணம்
👇👇👇👇👇👇
✳உலகத்தைக் காண்பதற்கு முன்பே பெண் குழந்தைகள் கரு‌விலேயே அழிக்கப்படுவதுதான்.

✳ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது.

✳பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர்.

✳குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும், மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.

✳இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பெண்கள் தங்களது 22 வயதுக்குள்ளாகவே முதல் குழந்தையைப் பெற்று விடுகின்றனர்.

✳கருத்தடைக்காக பெண்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், மருந்துகள் உண்பதுமாக உள்ளனர்.

💥இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர்.

💥அப்படியே படித்தாலும், பள்ளியோடு பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு முடிந்து போகிறது.

💥வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு பெண்கள்பணியமர்த்தப்படுகின்றனர்.

🏮வீடுகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிக மணி நேரங்கள் வேலை செய்கின்றனர். சம்பளமும், அங்கீகாரமும் இன்றி எத்தனையோ பெண்கள் வீடுகளில் அடிமைகளைப் போல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

🏮ஆணும், பெண்ணும் பணியாற்றும் ஒரே நிறுவனத்தில் ஆணை விட பெண்ணுக்குக் குறைந்த சம்பளமே அளிக்கப்படுகிறது.

✅ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இருவருக்கும் சமமான கூலி அளிக்கப்படுகிறது.

💈அது விவசாயத்தில் மட்டும்தான்.💈

❎பல்வேறு இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.❎

💥பல குடும்பங்களில் பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை.

♦அதேப்போன்று பெற்றோரது சொத்தில் எந்த பங்கும் அளிக்கப்படுவதுமில்லை.

♦எத்தனையோ பெண்கள் வீட்டிலும், வீட்டிற்கு வெளியேயும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு ஆளாகுகின்றனர்.

📋காவல்துறை புள்ளி விவரத்தில், இந்தியாவில்

📜ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர்.

📜ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்,

📜ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் வன்முறைக்குள்ளாகிறாள்,

📜ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார்,

📜ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

💥கணக்கில் வந்ததே இப்படி என்றால் கணக்கில் வராதது எவ்வளவோ...

இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்❓

✳உங்களுக்கு வெறும் குறைகளை மட்டுமே பேச தெரியும் ,பிரச்சனைக்கு சரியான தீர்வை கூறமுடியாது என்று
நீங்கள் மனதில் நினைப்பது எங்களுக்கு புரிகிறது ..

✅இதே மனநிலையோடு வாருங்கள் ..

✔மகளிர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறியிருக்கும் பிரம்மிப்பூட்டும் தீர்வுகளை அலசிப்பார்க்கலாம்.
         
 👗தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 08 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

மகளிர் தினம் ஓர் பார்வை

          பகுதி-2

💐அல்ஹம்துலில்லாஹ்💐

✳மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி எதற்கு தேர்வு செய்தார்கள் என்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம்.

✳கடந்த பகுதியில் மகளிர் தினம் மார்ச் 8யில் அமைய காரணமாக இருந்த நிகழ்வை பார்த்தோம்.

💥இன்ஷா அல்லாஹ் அதை தொடர்ந்து அந்த நாள் எப்படி உறுதி செய்யப்பட்டு  சர்வதேச நாளாக அமைந்தது என்பதை பார்ப்போம்💥
👇👇👇

🏮1909-இல் அமெரிக்க
சோஷலிஸ்ட் கட்சியால்        அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-இல் கொண்டாடப்பட்டது.

♦அதன்பிறகுபிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.

🏮 1910-இல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடிப் பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து, சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


🏮1911 மார்ச் 19ல் நடைபெற்ற பெண்கள் தினத்தில் லட்சகணக்கில் பெண்கள் பங்கேற்றனர்.

💥அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் வேளைக்கு சென்ற பெண்கள் 140 பேர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் கருகி இறந்தனர்.

💥இதனால் அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

🏮1917ல் ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் போரில் பலியான சமயத்தில் பெண்கள் அமைதிக்காக போராட்டம் நடத்தினர்.

💥அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது .

✅அன்று ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23 ஆகும்.ஆனால் அது உலகம் மக்கள் பின்பற்றக்கூடிய கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள்.

 💥ஐ.நா.-வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.


📜1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்குச் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது.

🔶பெண்கள் தொடர்பானசர்வதேசக் கொள்கைகள்

🔶வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் திட்டங்கள்

🔶லட்சியங்கள்

உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.


🏮 1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.


🏮1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


✳அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது.

✳சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 💥பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

🚻அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.


✳சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின.

🔶பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், 🔶பொதுக்கருத்து உருவாக்குதல்,
🔶சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி,
🔶ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி,
 முயற்சியும் செய்து வருகிறது.


💥நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும்,

💥அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள்.


✔இதுவரை மகளிர் தினத்தின் வரலாற்றை அறிந்தோம் .

💥 இனி மகளிர் தினம் என்ற தலைப்பை ஷரீஅத்தின் கட்டமைப்பில் விரிவாக காண்போம் ..
           
   இன்ஷா அல்லாஹ்              
         
 👗தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 08 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

மகளிர் தினம் ஓர் பார்வை
          பகுதி-1

🚫மகளிர் தினம் ஒரு சிறப்பு பார்வை 🚫

👩🏻மகளிர் தினம் உருவாக்கப்பட்டதின் பின்னனி  என்னவெனில் ,
பெண்களை சமுதாயத்தில் தரம் உயர்த்தி ஆண்களுக்கு சரிசமமாக பெண்களுக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுதருவதே .

🚫இதற்காக ஒவ்வொரு ஆண்டும்
மார்ச் 8 ஐ மகளிர் தினமாக
கொண்டாடி வருகின்றனர் .

👩🏻மகளிர் தினம் என்று ஏற்படுத்தி கொண்டாடுவது பெண்களின் பிரச்சனைக்கு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்பதை விளக்குவதற்காகவே
"மகளிர் தினம் ஓர் சிறப்பு பார்வை " என்ற இத்தலைப்பை கையிலெடுத்துள்ளோம் ..

💐அல்ஹம்துலில்லாஹ்💐

💠வாருங்கள்..
 முதலில் மகளிர் தினம் உருவான வரலாற்றை விரிவாக அறிந்து கொள்வோம் .

🌿எதற்காக மார்ச் 8 குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்❓

🌎வரலாற்றை திருப்பி பார்த்தால் வியப்பூட்டும் பல தகவல்கள் கிடைக்கின்றன

🌎உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நாளில் பல நாடுகளில் விடுமுறை கூட அளிக்கப்படுகிறது..

🍃இனம்,மதம்,மொழி,
கலாச்சாரம் போன்ற வேறுபாடுகளை மறந்து பெண்கள் என்ற ஒரே எண்ணத்தில் ஒன்று கூடி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர்.

🍂பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர பெண்கள் போராடினர்.

🍂 அதைப்போல் பிரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம்,சமத்துவம் போன்றவற்றிற்காக போராடினர்.

🔻 ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் !!

🔻 ஆண்களும் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து உற்சாகமாக அரசு மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

🔘உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய மெய்க்காப்பாளர்கள் இருவரையும் கூட்டத்தினர் தாக்கி கொன்றனர் இதை கண்ட அரசன் கூட்டத்தை சமாதானப்படுத்த கோரிக்கைகளுக்கு ஒற்று கொண்டான் பிறகு  முடிதுறந்தான்.

💠இந்தச் செய்தி வேகமாக பரவியது.பெண்கள் அங்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

💠 ஜெர்மனி,ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்க தொடங்கியது.

💠இதுதான் சமயம் என்று வாக்குரிமைகள் கேட்டு இத்தாலியில் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இறங்கினர்.

💠பிரான்சில்,புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாளாகும்.

💐இந்த காரணம் தான் வித்தாக அமைந்து இன்று உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது

👆மேலே கூறப்பட்டவை வித்ததாக இருந்தாலும் பிறகு வந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளில் அது உறுதி செய்யப்பட்டது..

😊அது என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் பார்ப்போம்
                           
            👗தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 08 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡