Thursday 17 October 2019

பட்டாசு வெடிக்கபோரீங்களா

பட்டாசு வெடிக்க போறீங்களா
ஒரு நிமிடம் யோசிங்க


அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே
நம்மவர்களில் சிலர் மாற்றார்களை போல்  தீபாவளி பண்டிகை ,நிக்காஹ் போன்ற சில விசேஷங்களின் போது   பட்டாசுகளை வெடித்து
தங்கள் ஹலாலான பணத்தை கூட சில நேரம் வீண் வழியில் செலவு செய்து விடுகின்றனர்.


கேட்டால் அந்த காரணத்தை பிள்ளைகள் மீது போடுகிறோம்.


பிள்ளைகளை திருத்துவது நம் கடமை இல்லையா


பிள்ளைகளிடம் அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவினால் இறைவன் நமக்கு உதவுவான் என்றும் வீண்
விரயம் செய்யகூடாது என்றும் நாம் தானே சொல்லி தர வேண்டும்.
வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது.


வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 6:141)


(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
நூல் : அபூதாவுத் (3512)


மேலும் இறைவன்  நமக்கு அளித்த செல்வத்தை எப்படி  எந்த வழியில் செலவு  செய்தாய்  என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வரை நம் கால்கள் அவ்விடம்  விட்டு நகராது.


நாம் பட்டாசுகளை வெடிப்பதால் என்ன பயன் துளியும் பயனில்லை.


மாறாக யாருக்கும் பயனில்லாமல் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு கரியாகும்.


அடுத்து நம் சூற்றுசூழலுக்கு நச்சு காற்று உண்டாகும்.நச்சு காற்றினால் அலர்ஜி மற்றும் சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும்.
பயங்கரமான வெடிகளை நோயாளிகளை அதிர்ச்சி அடைய வைக்கும்.


ராக்கெட் வெடிகள் போன்றவை குடிசைகளை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.


இவைகளை இஸ்லாம் அனுமதிபதில்லை.


அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல் முஸ்லிம் 73.


நல் வழியில் செலவு  செய்தால் மட்டுமே ஈருலகிலும் வெற்றி பெறாலாம். இல்லையேல் அதற்குரிய தண்டனை  கிடைக்கும்.

எனவே தானதர்மங்களை செய்து 
அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து தப்பிப்போம்.


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 2:268)


ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    
(அல்குர்ஆன் : 7:31)


உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(குர்ஆன் 17:26, 27)


இதன் மூலம் சைத்தானிற்க்கு மறுமையில் என்ன நிலையோ அதை நிலையே அவனின் கூட்டாளி க்கும் என்பது தெளிவாகிறது.


மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 13:21)


அன்பார்ந்த சகோதர
சகோதரிகளே சிந்தியுங்கள் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள் மாற்று மதத்தில் கூட இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் நம் கஷ்டத்தில் அல்லாஹ் உதவி செய்வான்.


இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக.ஆமீன்

No comments:

Post a Comment