Saturday, 12 October 2019

முஃமீன்கள் என்றால் யார்?

சொர்க்கத்தை அடைய போகும் அந்த முஃமின்கள் யார் ?

📖(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். *(உண்மையாகவே) நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் உயர்ந்தவர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)

💯முதலில் உண்மையான முஃமினாக மாறாத வரை உயர்வு இருக்காது.

📖 முஃமின்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)

📖 அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)

📖 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டும் விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)

📖 ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.*
(அல்குர்ஆன் : 23:4)

📖 மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் பாதுகாத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)

📖 ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:6)

📖 ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 23:7)

📖 இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:8)

📖 மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:9)

📖 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (மேலும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)

📖 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நல்ல முறையில் செலவு செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 8:3)

📖 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்
(அல்குர்ஆன் : 8:4)

👆🏾மேற்கூறப்பட்ட தன்மைகள் எதுவும் இல்லாது உயர்வு வேண்டும் வெற்றி வேண்டும் ஆட்சி வேண்டும்  என்றெல்லாம் கோஷம் போடுவதிலும் கூக்குரலிடுவதிலும்,போராடுவதிலும் எந்த பலனும் துளியளவும் இல்லை
.
😱 நாம் முஃமின்களாக வாழவிட்டால்  அல்லாஹ் நமக்கு உயர்வை தரவ போவதில்லை

💯 சஹாபாக்கள் முஃமின்களாக வாழ்ந்ததால் தான் இவ்வுலகிலே ஆட்சி,அதிகாரம்,வெற்றி போன்றவற்றை அல்லாஹ் கொடுத்தான்.

🌐 மேலும் சஹாபாக்கள் முஃமீன்களாக இருந்ததால் தான் உலகில் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவியது.

👉🏻எனவே முஃமீன்களாக வாழ்ந்தால் தான் ஈருலகிலும் வெற்றி என்பதை உணர வேண்டும்.நம்மை நாமே   கேட்டு சீர்திருத்தி கொள்ள வேண்டியவைகள்❓

🤔 நம் சமுதாயம் உள்ளச்தோடு பேணுதலாக  தொழகையை நிறைவேற்றுகிறதா❓

🤔 நம் சமுதாயம் முழுமையாக ஜகாத் கொடுக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் கேடுகெட்ட இசை,ஆபாசம், சினிமாவில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் போதை,மதுவில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் வீணான காரியங்களில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் வட்டியில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் பொய்,புறம் பேசுவதில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் முழுமையாக ஹிஜாபை பேணிப் பாதுகாக்கிறதா❓

🤔 நம் சமுதாயம்   அமானிதத்தை,வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுகிறதா❓

🤔 அல்லாஹ்வை நினைத்து  நமது  உள்ளம் பயப்படுகிறதா❓

📖 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; *எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;* இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 13:11)

👍🏼 முதலில் உண்மையான முஃமினாக வாழ்வோம் பிறகு உயர்வு நம்மை தேடி தானாக வரும்

🤲🏻 இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக! ஆமீன்.

Friday, 11 October 2019

சத்தியத்தின் பக்கம் மக்களை அழைப்போம்.

சத்தியத்தின் பக்கம் மக்களை அழைப்போம்.நன்மையை ஏவுவோம்.தீமையை தடுப்போம்

அழைப்புப் பணி செய்யுமாறு அல்லாஹ்வின் கட்டளை:

📖(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).

📖என்னைப் பற்றி ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள்.  (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம்: புஹாரி).

தீமையை தடுப்பதற்கு அவசியமில்லை என்போருக்கு மறுப்பு:

📖இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப் பட்டுள்ளனர், ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறுசெய்து கொண்டும், வரம்பு மீறி நடந்துகொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையெருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை, அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.” (அல்மாயிதா 5: 78, 79).

📚எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப் பின் சமூகங்கள், அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார், அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால் போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லை” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்).

அழைப்புப் பணி ஏன்❓

1⃣ நம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்தவற்காக!:

📖(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.” (11: 117).

2⃣ நஷ்டத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக:

📖காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).

3⃣ ஆதாரங்கள் நிலை நாட்டப்பட வேண்டும்:

📖தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.” (4: 165).

முஃமினின் பண்பு:

📖முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர், அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாக)க்கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள், அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் -நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.” (அத்தவ்பா 9: 71).

அழைப்புப் பணி செய்யும் முறை❗

1⃣ அழகான வார்த்தை:

📖எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்)?” (புஃஸ்ஸிலத் 41: 33).

2⃣ சிறந்த சமுதாயம்:

📖மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3: 110).

3⃣ வெற்றிபெற்ற சமூகம்:

📖மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.” (ஆலு இம்ரான் 3: 104).

4⃣ சமமான கூலி:

📖எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. எவன் வழிகேட்டின் பால் மக்களை அழைக்கின்றானோ அவனுக்கு அதை செய்தவர்களின் கூலி போன்று உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), முஸ்லிம்).

நிலையான நன்மை:

📚ஒருவன் மரணித்து விட்டால் அவனது அனைத்து அமல்களும் துண்டிக்கப்படுகின்றன, மூன்றைத் தவிர: (அவன் செய்த) நிலையான தர்மம், அல்லது அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைவது, அல்லது அவனது பிள்ளை அவனுக்காக பிரார்த்திப்பது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), முஸ்லிம்).

தெளிவான ஞானத்துடன் அழைப்பு பணி செய்ய வேண்டும்

📖(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” (யூசுப் 12: 108).

Tuesday, 8 October 2019

அல்லாஹ் விரும்பும் தன்மைகள்

இறையச்சமுடையவராவது எப்படி❓

ஒரு சாராரை நீங்கள் வெறுத்த போதிலும் அவர்களுக்கும் நீதி செலுத்த வேண்டும்!

📖“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:8)

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமாகும் என்பதையும் மறுமை வீடே நிரந்தரமானதும் மிக்க மேலானதும் என்பதையும் சிந்தித்து உணர வேண்டும்!

📖“உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?” (அல்-குர்ஆன் 6:32)

விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு மிக்க நெருக்கமானதாகும்!

“விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:237)

வேறு வழிகளை விட்டுவிட்டு அல்-குர்ஆனை பின்பற்றினால் இறையச்சமுடையவராகலாம்!

📖நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி)
பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்” (அல்-குர்ஆன் 6:153)

இறைவேதத்தைப் பலமாக பற்றிப் பிடித்துக்கொண்டால் இறையச்சமுடையவராகலாம்!

📖“நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 7:171)

அல்-குர்ஆனைப் படித்து அதன் எச்சரிக்கைகளை மீறாமல் நடக்க வேண்டும்!

📖“மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்” (அல்-குர்ஆன் 20:113)

பயபக்தியுடையவராவதற்கு குர்ஆன் வழிகாட்டுகிறது!

📖“இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (அல்-குர்ஆன் 39:27-28)

நேர்வழியில் செல்பவர்களுக்கு தக்வாவை இறைவன் வழங்குகிறான்!

📖“மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை – பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்” (அல்-குர்ஆன் 47:17)

இறைவனுக்கு பயந்து அவன் விதித்த வரம்புகளை மீறாமல் இருந்தால் இறையச்சமுடையவராகலாம்!

📖“நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்” (அல்-குர்ஆன் 2:187)

Sunday, 6 October 2019

ஹலாலை பேணுவோம்

லக்கும் தீனுக்கும் வலியதீன்

💧ஆயுத பூஜை ஒரு சாராருக்கு வணக்க வழிபாடு.அதாவது எதை வைத்து தொழில் செய்கிறோமோ
அதுவும் வணக்கத்திற்குரியது
என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்

💧 வருடத்தில் ஒரு நாள்
பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்து வழிபடுவார்கள்.

💧சுத்தம் என்பது இஸ்லாத்தின் ஒரு பகுதி
அதுக்கு ஒருநாள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
தினமும் சுத்தமாக இருப்பது
நம் மீது கடமையாக இருக்கிறது.

💧 சுத்தம்  ஈமானில் பாதியாகும்.
முஸ்லிம் ஹதீஸ்

💧கடவுள் நம்பிக்கையில்
அவர்கள் படைத்த பொருட்களை
நாம் உண்ணலாமா என்கிற ஒரு கேள்வி வருகிறது.

♻ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல.  சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தால் அவற்றை சாப்பிட கூடாது.

♻இந்து சகோதரர்களில் பலர் முஸ்லிம்கள்
படைத்த பொருளை உண்ண மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

🔹இதனால் படைக்க பயன்படுத்தாத
தனியாக இருக்கும் உணவுப் பொருளைத் தான் முஸ்லிம்களுக்கு தருவார்கள்.
அதையும் தாண்டி படைத்த பொருளை யாரும் நமக்கு தந்தால் நாம் அதை
சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்வதே நல்லது.

📖 அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான் அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.
திருக்குர்ஆன் 6:119

🔹மேலும்
அவர்கள் தரும் அந்த உணவு பொருளை வீணடித்து விடாமல்
இன்னொரு இந்து சகோதரருக்கு
கொடுத்துவிடலாம்.

👬மற்ற நேரங்களில் அவர்கள் நமக்கு உணவு பொருளையோ அன்பளிப்புகளையோ தந்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நாமும் அவர்களுக்கு உணவுகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் இது நபிவழியாகும்.

👬அதிலும் குறிப்பாக நமது வீடுகளில் அருகிலோ அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ அருகில் இருப்பவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்

📚 அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல
என்று நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்

👬இந்த கால சூழ்நிலையில் அண்டை வீட்டாரிடம் நட்பை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.

📚அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு அவர் வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5119.

👬இதிலிருந்து அண்டை வீட்டாரின் நட்பின் அவசியம் புரிகிறது.
ஜாதி மதம் பார்க்க கூடாது அண்டைவீட்டார்
யாராயிருந்தாலும் உடன் பிறந்தவர்களுக்கு இருக்கும்
நட்பு உணர்விலேயே அவர்களையும் பார்க்க வேண்டும்.

☝🏻வழிபாடு என்று வரும்பொழுது அவர்களது மார்க்கம் அவர்களுக்கு நமது மார்க்கம் நமக்கு என்கிற கொள்கையில் உறுதியாக இருப்போம் அல்லாஹ் பாதுகாப்பானாக.

➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖

🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/1rx4vEznirX5J1qRVwc902

*share to all.........*

*ⓂAKKAL ⓂEDIA*

Part of....👇🏽👇🏽

*ECHO DAWA FOUNDATION*

Monday, 30 September 2019

ஸஃபர் மாதத்தின் பெருமைகளும் காலத்தின் கண்ணியங்களும்

💥🔥 *நம்மில் அறியாமல் நுழைந்து விட்ட சில ஷிர்க் என்னும் இணைவைப்புகள்* 🔥💥

😱 *முஸ்லிம்களில் தொழுது வருபவர்களும்  சில தவறான மூடநம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். அதில் பெரும்பாவமான செயல்கள் சில உள்ளன. அதில் சகுனம் பார்த்தல்,நல்ல காலம், ராகு காலம் பார்ப்பது, ஸபர் மாதத்தை பீடையாக நம்புவது, ஒடுக்கத்து புதன் என்று ஆற்றில் தலை மூழ்குவது போன்றவைகள் சில.*

♻இஸ்லாமியர்களில் சிலர் ஸபர் மாதம் வந்துவிட்டால்
மகிழ்ச்சியான எந்த நிகழ்ச்சியும்
நடந்த மாட்டார்கள்.
முஸீபத்துடைய மாதம் என்று நல்ல காரியங்களை ஒத்தி வைக்கிறார்கள்.

🎙அல்லாஹ் சொல்கிறான்
காலத்தை திட்டாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன் என்று .

❓ *ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால்,*

✅நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்
ஸபர் வெற்றியை தரும் மாதம் என்று.
மற்ற மாதங்கள் வெற்றியைத் தராதா ?
இப்படி ஒரு கேள்வி வரக்கூடாது. காரணம்?👇🏼

💎நோன்பு மாதம் மற்ற எல்லா மாதங்களைவிடவும் சிறந்தது .
வெள்ளிக்கிழமை மற்ற
நாள்களை விட சிறந்தது.
இந்த அடிப்படையில்
ஸபர் மாதம் சிறந்தது .

💯ஸபர் மாதத்தில் ஹிஜ்ரத் செய்தார்கள்
இஸ்லாம் வளர்ந்தது.
நபியவர்கள் விட்டு சென்றது
1,24,000 ஸஹாபாக்கள்
ஆனால் இன்று
எத்தனையோ கோடி முஸ்லிம்கள். அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது. சிந்திப்பவர்களுக்கு இவை போதுமானதாகும்.

🧐நம்மைவிட நபிக்கு தெரியும் மாதங்களைபற்றி .
அதனால் தான் தனது மகள் சுவர்கத்து தலைவி
பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஸபர் மாதத்தில் நிக்காஹ் செய்து வைத்தார்கள்.

👍🏼ஹைபர் வெற்றி ஸபர் மாதத்தில் கிடைத்தது.

🤑இப்பவும் நடைமுறையில் உள்ளது
காகம் கத்தினால் விருந்தினர் வருவதாகவும்
ஆந்தை கத்தினால், நாய் ஊழையிட்டால் யாராவது மரணிக்கலாம் என்றும்
பறவைகளை வைத்து கணிக்கும் மூடநம்பிக்கை .

📖 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ *ஸஃபர்* தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.
புஹாரி : 5717 அபூஹுரைரா (ரலி).

🤔நபிகளார் ஸஃபர் மாதம் பீடை இல்லை என்று அறிவித்து விட்ட பிறகு முஸ்லிம்கள் மாற்றமாக நம்பலாமா❓

🧐ஸபர் மாதத்தை குறைகாண காரணம் உயரமான மிகப் பெரிய பலம்பொருந்திய
ஆது கூட்டத்தை
வாழ்ந்த அடையாளம் இல்லாமல் அல்லாஹ் அழித்துவிட்டான்.
தகாத குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக .

🤑இந்த சம்பவம் ஸபர் மாதத்தில் புதன்கிழமை  நடந்ததால் புதன் கிழமையிலும் குறை கண்டு
(ஒடுக்கத்துபுதன்)
முஸீபத்து நாளாகவும்
ஆக்கிக்கொள்கிறார்கள்

💯நோய்,வறுமை, துன்பம்,
மரணம் மகிழ்ச்சி எல்லாமே...
அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பது
இதற்கெல்லாம் காலம் காரணமல்ல.

🤑 *இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன.*

💯 *அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.*

📖 *அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகாரமும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன்.* அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 5/4826, 6/6181.

📖 *அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான்.* (1:பத்ஹுல் பாரி)

📖ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

😱 *அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணைவைத்தல்) ஆகும்.*

🧐 *ஆனால் நபிகளார் (ஸல்) அவர்கள்  குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கும் என்றோ அவற்றிற்கு பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றோ சொல்லி உள்ளார்களா என்றால் இல்லவே இல்லை என்பதே பதில்.*

🤔அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட்டார்களா❓

🤔 *சிந்தித்து செயல்படுங்கள் நம்பிக்கையாளர்களே. இஸ்லாத்தின் ஆதாரம் குர்ஆன் சுன்னாவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தானே தவிர முன்னோர்களின் கட்டுகதைகள் அல்ல என்பதை விளங்கி இது போன்ற ஷிர்க்கில் இருந்து நம்மையும் நம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்*

🤲🏻 *இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக! ஆமீன்.*