💥🔥 *நம்மில் அறியாமல் நுழைந்து விட்ட சில ஷிர்க் என்னும் இணைவைப்புகள்* 🔥💥
😱 *முஸ்லிம்களில் தொழுது வருபவர்களும் சில தவறான மூடநம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். அதில் பெரும்பாவமான செயல்கள் சில உள்ளன. அதில் சகுனம் பார்த்தல்,நல்ல காலம், ராகு காலம் பார்ப்பது, ஸபர் மாதத்தை பீடையாக நம்புவது, ஒடுக்கத்து புதன் என்று ஆற்றில் தலை மூழ்குவது போன்றவைகள் சில.*
♻இஸ்லாமியர்களில் சிலர் ஸபர் மாதம் வந்துவிட்டால்
மகிழ்ச்சியான எந்த நிகழ்ச்சியும்
நடந்த மாட்டார்கள்.
முஸீபத்துடைய மாதம் என்று நல்ல காரியங்களை ஒத்தி வைக்கிறார்கள்.
🎙அல்லாஹ் சொல்கிறான்
காலத்தை திட்டாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன் என்று .
❓ *ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால்,*
✅நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்
ஸபர் வெற்றியை தரும் மாதம் என்று.
மற்ற மாதங்கள் வெற்றியைத் தராதா ?
இப்படி ஒரு கேள்வி வரக்கூடாது. காரணம்?👇🏼
💎நோன்பு மாதம் மற்ற எல்லா மாதங்களைவிடவும் சிறந்தது .
வெள்ளிக்கிழமை மற்ற
நாள்களை விட சிறந்தது.
இந்த அடிப்படையில்
ஸபர் மாதம் சிறந்தது .
💯ஸபர் மாதத்தில் ஹிஜ்ரத் செய்தார்கள்
இஸ்லாம் வளர்ந்தது.
நபியவர்கள் விட்டு சென்றது
1,24,000 ஸஹாபாக்கள்
ஆனால் இன்று
எத்தனையோ கோடி முஸ்லிம்கள். அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது. சிந்திப்பவர்களுக்கு இவை போதுமானதாகும்.
🧐நம்மைவிட நபிக்கு தெரியும் மாதங்களைபற்றி .
அதனால் தான் தனது மகள் சுவர்கத்து தலைவி
பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஸபர் மாதத்தில் நிக்காஹ் செய்து வைத்தார்கள்.
👍🏼ஹைபர் வெற்றி ஸபர் மாதத்தில் கிடைத்தது.
🤑இப்பவும் நடைமுறையில் உள்ளது
காகம் கத்தினால் விருந்தினர் வருவதாகவும்
ஆந்தை கத்தினால், நாய் ஊழையிட்டால் யாராவது மரணிக்கலாம் என்றும்
பறவைகளை வைத்து கணிக்கும் மூடநம்பிக்கை .
📖 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ *ஸஃபர்* தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.
புஹாரி : 5717 அபூஹுரைரா (ரலி).
🤔நபிகளார் ஸஃபர் மாதம் பீடை இல்லை என்று அறிவித்து விட்ட பிறகு முஸ்லிம்கள் மாற்றமாக நம்பலாமா❓
🧐ஸபர் மாதத்தை குறைகாண காரணம் உயரமான மிகப் பெரிய பலம்பொருந்திய
ஆது கூட்டத்தை
வாழ்ந்த அடையாளம் இல்லாமல் அல்லாஹ் அழித்துவிட்டான்.
தகாத குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக .
🤑இந்த சம்பவம் ஸபர் மாதத்தில் புதன்கிழமை நடந்ததால் புதன் கிழமையிலும் குறை கண்டு
(ஒடுக்கத்துபுதன்)
முஸீபத்து நாளாகவும்
ஆக்கிக்கொள்கிறார்கள்
💯நோய்,வறுமை, துன்பம்,
மரணம் மகிழ்ச்சி எல்லாமே...
அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பது
இதற்கெல்லாம் காலம் காரணமல்ல.
🤑 *இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன.*
💯 *அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.*
📖 *அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகாரமும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன்.* அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 5/4826, 6/6181.
📖 *அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான்.* (1:பத்ஹுல் பாரி)
📖ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)
😱 *அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணைவைத்தல்) ஆகும்.*
🧐 *ஆனால் நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கும் என்றோ அவற்றிற்கு பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றோ சொல்லி உள்ளார்களா என்றால் இல்லவே இல்லை என்பதே பதில்.*
🤔அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட்டார்களா❓
🤔 *சிந்தித்து செயல்படுங்கள் நம்பிக்கையாளர்களே. இஸ்லாத்தின் ஆதாரம் குர்ஆன் சுன்னாவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தானே தவிர முன்னோர்களின் கட்டுகதைகள் அல்ல என்பதை விளங்கி இது போன்ற ஷிர்க்கில் இருந்து நம்மையும் நம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்*
🤲🏻 *இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக! ஆமீன்.*
No comments:
Post a Comment