Wednesday 25 September 2019

தளர்ந்து விட வேண்டாம் அல்லாஹ் இருக்கின்றான்

தளர்ந்து விடாதீர்கள்

மனஅழுத்தம்
இப்படி சொல்வது கவுரவக் குறைவாக நினைத்து
டென்ஷன் என்று சொல்லிக் கொள்கிறோம்


கவலையும் இப்போது மனஅழுத்தத்தின் கீழே வந்துவிட்டது
கவலை பயம் சந்தேகம் பதற்றம்
இவைகளெல்லாம்
மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்

குடிகாரன் தவறு செய்தால்
போதையில் செய்துவிட்டான் என்று சொல்லுவதுன்டு
இப்பல்லாம்
டென்ஷனில்
இருந்தார்
அதனால் தற்கொலை  செய்துகொண்டார்

டென்ஷன் அதனால்
ரூபாய் நூறு கொடுப்பதற்கு ஐநூறு கொடுத்து விட்டார்      என்று
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டப்படுகிறது

உலக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் முஸ்லிம்கள்
சத விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது
ஆரம்பத்திலிருந்து
நமது மனதில் பதிந்திருக்கும் மார்க்க போதனை தற்கொலையில் இருந்து பாதுகாக்கிறது

வரும் காலங்களில் மன அழுத்தத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஒரு அறிக்கை சொல்கிறது அதிலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற வழியிருக்கிறது

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து
தொழுது துஆ செய்வது
தன்னால் இயன்ற அளவு சதக்கா செய்வது
அதிகமாக திக்ரு செய்வது
நல்ல ஆலோசனை சொல்லக்கூடியவர்களிடம்
ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி
மசூரா எனும் ஆலோசனை செய்வது
இப்படி செய்தோமானால்
இறைவன் நாடினால்
பாதுகாப்பு பெறலாம்

மன அழுத்தம் வருவதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்
அதிகமான பணத்தேவையை ஏற்படுத்திக்கொள்வது
கடன் தொல்லைக்கு ஆளாவது
பேராசைகொள்வது
குடும்பத்தினர் செய்யும் தவறுகள்
கணவன் மனைவி பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அனுசரணை இல்லாமல் இருப்பது
குணங்களிலேயே கெட்ட குணமான பொறாமை கொள்வது
மூட நம்பிக்கை கொள்வது இதல்லாம்
மன உளைச்சலுக்கு காரணமாக அமைகிறது

மாணவ பருவத்திலும்
இந்த பிரச்சினை வருவதற்கான காரணங்கள்
நண்பர்கள் வட்டாரமும்
  சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்
பெற்றோர்களின் கவன குறைவாலும்
(குழந்தைகளின் மனநிலையை சரியாக அறியாமல்
பொருத்தமில்லாத பள்ளி கல்லூரிகள் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவும்)
இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்


வரும் காலங்களில்
புதிய
கல்விக் கொள்கை
குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு
பெரிதும் காரணம் ஆகிவிடுமோ
என்று அஞ்சப்படுகிறது

மறுமைக்காக கவலைப்படலாம்
இந்த உலகத்தில் நடப்பதெல்லாம் விதிப்படியே
அதனால் எதுவும் நடப்பதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
அதையும் மீறி நடந்து விட்டால்
கவலைப்பட்டு முடங்கி விடாமல்
அதிலிருந்து வெளியே வரும்
முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்
அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்

தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள்
நம்பிக்கை கொண்டிருந்தால்
நீங்களே உயர்ந்தவர்கள்
திருக்குர்ஆன் 3:139

டென்ஷன் குறைய
மனதை ஒரு நிலைப்படுத்தி  அதிகமான பாவ மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வைப் புகழ்வது இதுவே நிரந்தர தீர்வாகும்
அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக!!!!!!

No comments:

Post a Comment