Sunday 13 March 2016

❤ காதல் ❤ பகுதி - 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

              ❤ காதல் ❤

                பகுதி - 1⃣

❤காதல் என்றால் என்ன❓

💓காதல் என்றால் உணர்வு ரீதியான பல அர்த்தங்கள் கொண்ட ஒரு வாக்கியம் ...

💕அன்பு,பாசம்,அரவனைப்பு,அக்கரை
என்று இதன் பட்டியல் தொடரும்..

💗உண்மை என்னவெனில் காதல் என்பதை யாராலும் வார்த்தைகளால் வடிக்க இயலாது..

😍உணர்ச்சியால் மட்டுமே அதனை உணர முடியும் ..

❤தாயிடம்  இக்காதலை உணரமுடியும் ...

❤தந்தையிடம் இக்காதலை உணரமுடியும் ..

❤திருமணத்திற்கு பிறகு மனைவியிடமும் இக்காதலை உணர முடியும் ..

💗ஆனால் நடைமுறையில் காதல் என்ற புனிதமான வார்த்தைகளை நாம் கலங்கப்படுத்தி வைத்திருக்கிறோம் ..

💘ஆண் என்ற பாலினம் பெண் என்ற பாலினத்தின் மீது எந்த உறவும் இல்லாமல் ஈர்ப்பு கொள்வது இறைவன் விதித்த இயற்கை மரபு..

❌இவ்வகையான ஈர்ப்புக்கு காதல் என்று அர்த்தம் இல்லை ...

😍காதல் என்றால் ஏதேனும் ஆகுமான உறவுக்குள் ஏற்படும் இனம்புரியாத உணர்வுதான் ..

💕எந்த உறவும் இல்லாமல் அங்கே காதலுக்கு வேலையில்லை ..

💗காதலின் மூலம் வெளிப்படும் உணர்ச்சிகளை இந்த உலகம் விமர்சிக்காது ...

😘மகனை கொஞ்சும் தாயையும்,

😘மகளை கொஞ்சும் தந்தையையும்,

😘மனைவியை கொஞ்சும் கனவனையும் ,

💬இந்த உலகம் விமர்சிப்பதில்லை ..

💓ஆனால் எந்த உறவும் இல்லாம் ஈர்ப்பை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் கொஞ்சுதல்களை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது ..மாறாக விமர்சிக்கும் ..

💘காதல் வெளிப்பட கட்டாயம் ஆகுமான உறவு தேவை ..

💕ஆகுமான உறவில்லாமல் அங்கே காதலுக்கு இடமில்லை ..

💓இயற்க்கை மரபின் படி ஒரு பெண் மீது ஆணுக்கு பிரியம் (ஈர்ப்பு ) ஏற்பட்டால் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை
அல்லாஹ் குர்ஆனில் அழகான வார்த்தைகளோடு சொல்வான் ..

  
 📖உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் -

இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

(அல்குர்ஆன்: 4:3)

👆🏻இறைவனின் வசனத்தை பார்த்தீர்களா !!!!

💓ஒரு பெண் மீது பிரியம் ஏற்பட்டால் அந்த பிரியத்தோடு தொடரும்படி இறைவன் கூறவில்லை,
மாறாக திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்...

👇🏼நபி(ஸல்) அவர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள் ..

📓அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2712. Book: 16)

💥அல்லாஹ் ரஸூல் கட்டளைபடி செயல்பட்டால் அங்கே அனாச்சாரங்கள் ஏற்படாது ..

❤இன்று வாழக் கூடிய பெரும்பான்மையான மக்கள் காதல் என்றால் எந்தவித உறவுமில்லாமல் ஒரு ஆண் ஒரு பெண் மீதும் ஒரு பெண் ஒரு ஆண் மீதும் ஏற்படக்கூடிய இயற்கை மரபான ஈர்ப்பை காதல் என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர் .

💗இஸ்லாம் கூறும் காதலை புரிந்து நம்வாழ்வை வளமாக்குவோம் ..

😊நாளை தொடரும் இன்ஷா அல்லாஹ் ...


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  08 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FONUDATION📡

No comments:

Post a Comment