Monday 30 September 2019

ஸஃபர் மாதத்தின் பெருமைகளும் காலத்தின் கண்ணியங்களும்

💥🔥 *நம்மில் அறியாமல் நுழைந்து விட்ட சில ஷிர்க் என்னும் இணைவைப்புகள்* 🔥💥

😱 *முஸ்லிம்களில் தொழுது வருபவர்களும்  சில தவறான மூடநம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். அதில் பெரும்பாவமான செயல்கள் சில உள்ளன. அதில் சகுனம் பார்த்தல்,நல்ல காலம், ராகு காலம் பார்ப்பது, ஸபர் மாதத்தை பீடையாக நம்புவது, ஒடுக்கத்து புதன் என்று ஆற்றில் தலை மூழ்குவது போன்றவைகள் சில.*

♻இஸ்லாமியர்களில் சிலர் ஸபர் மாதம் வந்துவிட்டால்
மகிழ்ச்சியான எந்த நிகழ்ச்சியும்
நடந்த மாட்டார்கள்.
முஸீபத்துடைய மாதம் என்று நல்ல காரியங்களை ஒத்தி வைக்கிறார்கள்.

🎙அல்லாஹ் சொல்கிறான்
காலத்தை திட்டாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன் என்று .

❓ *ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால்,*

✅நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்
ஸபர் வெற்றியை தரும் மாதம் என்று.
மற்ற மாதங்கள் வெற்றியைத் தராதா ?
இப்படி ஒரு கேள்வி வரக்கூடாது. காரணம்?👇🏼

💎நோன்பு மாதம் மற்ற எல்லா மாதங்களைவிடவும் சிறந்தது .
வெள்ளிக்கிழமை மற்ற
நாள்களை விட சிறந்தது.
இந்த அடிப்படையில்
ஸபர் மாதம் சிறந்தது .

💯ஸபர் மாதத்தில் ஹிஜ்ரத் செய்தார்கள்
இஸ்லாம் வளர்ந்தது.
நபியவர்கள் விட்டு சென்றது
1,24,000 ஸஹாபாக்கள்
ஆனால் இன்று
எத்தனையோ கோடி முஸ்லிம்கள். அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது. சிந்திப்பவர்களுக்கு இவை போதுமானதாகும்.

🧐நம்மைவிட நபிக்கு தெரியும் மாதங்களைபற்றி .
அதனால் தான் தனது மகள் சுவர்கத்து தலைவி
பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஸபர் மாதத்தில் நிக்காஹ் செய்து வைத்தார்கள்.

👍🏼ஹைபர் வெற்றி ஸபர் மாதத்தில் கிடைத்தது.

🤑இப்பவும் நடைமுறையில் உள்ளது
காகம் கத்தினால் விருந்தினர் வருவதாகவும்
ஆந்தை கத்தினால், நாய் ஊழையிட்டால் யாராவது மரணிக்கலாம் என்றும்
பறவைகளை வைத்து கணிக்கும் மூடநம்பிக்கை .

📖 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ *ஸஃபர்* தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.
புஹாரி : 5717 அபூஹுரைரா (ரலி).

🤔நபிகளார் ஸஃபர் மாதம் பீடை இல்லை என்று அறிவித்து விட்ட பிறகு முஸ்லிம்கள் மாற்றமாக நம்பலாமா❓

🧐ஸபர் மாதத்தை குறைகாண காரணம் உயரமான மிகப் பெரிய பலம்பொருந்திய
ஆது கூட்டத்தை
வாழ்ந்த அடையாளம் இல்லாமல் அல்லாஹ் அழித்துவிட்டான்.
தகாத குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக .

🤑இந்த சம்பவம் ஸபர் மாதத்தில் புதன்கிழமை  நடந்ததால் புதன் கிழமையிலும் குறை கண்டு
(ஒடுக்கத்துபுதன்)
முஸீபத்து நாளாகவும்
ஆக்கிக்கொள்கிறார்கள்

💯நோய்,வறுமை, துன்பம்,
மரணம் மகிழ்ச்சி எல்லாமே...
அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பது
இதற்கெல்லாம் காலம் காரணமல்ல.

🤑 *இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன.*

💯 *அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.*

📖 *அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகாரமும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன்.* அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 5/4826, 6/6181.

📖 *அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான்.* (1:பத்ஹுல் பாரி)

📖ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

😱 *அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணைவைத்தல்) ஆகும்.*

🧐 *ஆனால் நபிகளார் (ஸல்) அவர்கள்  குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கும் என்றோ அவற்றிற்கு பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றோ சொல்லி உள்ளார்களா என்றால் இல்லவே இல்லை என்பதே பதில்.*

🤔அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட்டார்களா❓

🤔 *சிந்தித்து செயல்படுங்கள் நம்பிக்கையாளர்களே. இஸ்லாத்தின் ஆதாரம் குர்ஆன் சுன்னாவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தானே தவிர முன்னோர்களின் கட்டுகதைகள் அல்ல என்பதை விளங்கி இது போன்ற ஷிர்க்கில் இருந்து நம்மையும் நம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்*

🤲🏻 *இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக! ஆமீன்.*

Saturday 28 September 2019

பொய் பேசுவதால் நரகில் கிடைக்கும் தண்டனைகள்

பொய் பேசுவதால் ஏற்படும் தீமைகள் பகுதி - 2

பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: –

உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது.

1)பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்:

அல்லாஹ் கூறுகிறான்:

39:60 அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர் பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)

2)பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: –

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)

3)பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: –

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

4)பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்:

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது 'பொய் பேசுவது' ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'பொய் சாட்சி' என்பதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் 'அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!' என்று கூறினோம். ஹதீஸ் 6919

அனுமதிக்கப்பட்ட பொய்கள்: –

1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: –

மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
யுத்தத்தின் போது
மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

Thursday 26 September 2019

பொய்யின் தீமைகள்

பொய் பேசுவதால்  ஏற்படும் தீமைகள்- பகுதி 1
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.
பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: –
அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
பொய் பேசுவது முனாபிஃக்கின் (நயவஞ்சகனின்) அடையாளம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று
பேசினால் பொய் பேசுவான்,
வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்
பொய்யின் வகைகள் மொத்தம் 7.அவைகள்
1. அல்லாஹ்வின்மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது
அல்லாஹ் கூறுகிறான்:
‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்
என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்

2.வியாபாரத்தில் பொய் கூறுவது:
மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.

3.கனவுகளில் பொய் கூறுவது:

ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.(ஹதீஸ் சுருக்கம்)
ஆதாரம்,புகாரி:-7042


4.கேட்பதை யெல்லாம் பிறரிடம் கூறுவது

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.

5.நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது

யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.

6.குழந்தைகளிடம் பொய் சொல்வது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு

7.மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

பொய் பேசுபவர்களுக்கு மறுமையில் நரகில் கிடைக்கும் தண்டனைகள் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்

தொட.....ரும்

Wednesday 25 September 2019

தளர்ந்து விட வேண்டாம் அல்லாஹ் இருக்கின்றான்

தளர்ந்து விடாதீர்கள்

மனஅழுத்தம்
இப்படி சொல்வது கவுரவக் குறைவாக நினைத்து
டென்ஷன் என்று சொல்லிக் கொள்கிறோம்


கவலையும் இப்போது மனஅழுத்தத்தின் கீழே வந்துவிட்டது
கவலை பயம் சந்தேகம் பதற்றம்
இவைகளெல்லாம்
மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்

குடிகாரன் தவறு செய்தால்
போதையில் செய்துவிட்டான் என்று சொல்லுவதுன்டு
இப்பல்லாம்
டென்ஷனில்
இருந்தார்
அதனால் தற்கொலை  செய்துகொண்டார்

டென்ஷன் அதனால்
ரூபாய் நூறு கொடுப்பதற்கு ஐநூறு கொடுத்து விட்டார்      என்று
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டப்படுகிறது

உலக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் முஸ்லிம்கள்
சத விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது
ஆரம்பத்திலிருந்து
நமது மனதில் பதிந்திருக்கும் மார்க்க போதனை தற்கொலையில் இருந்து பாதுகாக்கிறது

வரும் காலங்களில் மன அழுத்தத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஒரு அறிக்கை சொல்கிறது அதிலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற வழியிருக்கிறது

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து
தொழுது துஆ செய்வது
தன்னால் இயன்ற அளவு சதக்கா செய்வது
அதிகமாக திக்ரு செய்வது
நல்ல ஆலோசனை சொல்லக்கூடியவர்களிடம்
ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி
மசூரா எனும் ஆலோசனை செய்வது
இப்படி செய்தோமானால்
இறைவன் நாடினால்
பாதுகாப்பு பெறலாம்

மன அழுத்தம் வருவதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்
அதிகமான பணத்தேவையை ஏற்படுத்திக்கொள்வது
கடன் தொல்லைக்கு ஆளாவது
பேராசைகொள்வது
குடும்பத்தினர் செய்யும் தவறுகள்
கணவன் மனைவி பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அனுசரணை இல்லாமல் இருப்பது
குணங்களிலேயே கெட்ட குணமான பொறாமை கொள்வது
மூட நம்பிக்கை கொள்வது இதல்லாம்
மன உளைச்சலுக்கு காரணமாக அமைகிறது

மாணவ பருவத்திலும்
இந்த பிரச்சினை வருவதற்கான காரணங்கள்
நண்பர்கள் வட்டாரமும்
  சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்
பெற்றோர்களின் கவன குறைவாலும்
(குழந்தைகளின் மனநிலையை சரியாக அறியாமல்
பொருத்தமில்லாத பள்ளி கல்லூரிகள் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவும்)
இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்


வரும் காலங்களில்
புதிய
கல்விக் கொள்கை
குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு
பெரிதும் காரணம் ஆகிவிடுமோ
என்று அஞ்சப்படுகிறது

மறுமைக்காக கவலைப்படலாம்
இந்த உலகத்தில் நடப்பதெல்லாம் விதிப்படியே
அதனால் எதுவும் நடப்பதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
அதையும் மீறி நடந்து விட்டால்
கவலைப்பட்டு முடங்கி விடாமல்
அதிலிருந்து வெளியே வரும்
முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்
அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்

தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள்
நம்பிக்கை கொண்டிருந்தால்
நீங்களே உயர்ந்தவர்கள்
திருக்குர்ஆன் 3:139

டென்ஷன் குறைய
மனதை ஒரு நிலைப்படுத்தி  அதிகமான பாவ மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வைப் புகழ்வது இதுவே நிரந்தர தீர்வாகும்
அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக!!!!!!

மீண்டெழுவோம்

மீண்டெழுவோம்

💦பொருளாதார நெருக்கடி வரலாம்
வல்லுனர்கள் கணிப்பு
எதிர்வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது

💦ஆடம்பரப் பொருட்களும்
அத்தியாவசிய பொருட்களும்
வாங்கும் சக்தி
குறைந்துவிட்டது

💦கட்டுமானத்துறை முடங்கிவிட்டது பலதரப்பட்டவர்களுக்கும்
வியாபாரம் நடக்கவும்
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு
வாழ்வளிக்கவும் கட்டுமானத்துறை
முதலிடம் வகிக்கும்

💦தனியார் துறை ஊழியர்கள்
எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது
தமிழகத்தைப் பொருத்தவரை
அதன் தாக்கம் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை
இந்த நிலை வந்தால் வியாபாரம் இன்னும் மந்தமாகும்

💦 இப்படி ஒரு நிலைமை வருவதற்கு முன்பு
நாம் என்ன செய்ய வேண்டும்
என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்

#உணவு #மருத்துவம் #கல்வி
இது போன்ற செலவுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும்
இருந்தாலும் இவற்றிற்கு ஆகும் செலவுகளை குறைவாக
செய்ய பழகிக்கொள்ள
வேண்டும் இதைத்தவிர
மற்ற எல்லா வகையான செலவுகளையும்
தவிர்ப்பதே சிறந்த முடிவாகும்

💦குறிப்பாக ஆடம்பர வாகனம்
நகைகள் உடைகள் எலக்ட்ரிக்
எலக்ட்ரானிக்
பொருள்கள் இதுபோன்ற தேவைகளை நிலைமை சீராகும் வரை தள்ளி வைக்கலாம்

💦 நீண்ட தூரப் பயணங்களுக்கு
தனி வாகனத்தை பயன்படுத்துவதை
தவிர்க்க வேண்டும்

💦 இறைவன் கூறியவை மட்டுமே எக்காலத்திற்கும் பொருந்தும்.

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 7:31

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் நிறைந்தது.

அஹ்மத் 23388

💦திருமணங்களை குறைந்த செலவில் செய்வது இறை திருப்தியை பெறுவதோடு
இந்த கால சூழ்நிலைக்கும்
பொருத்தமாக இருக்கும்

💦 அத்தியாவசிய செலவுகளை தவிர மற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்

💦நிலைமை சீராகும் வரை
செலவுகளை குறைவாகச் செய்ய பழகிக் கொள்ள வேண்டும்
எந்த வகையிலும் கடன் வாங்க கூடாது
என்கிற உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

💦வருவாய்கள் முழுமையாக நின்றுவிடப் போவதில்லை
செலவுகளை குறைவாக செய்தாள்
வரும் வருவாயில் கடன் இல்லாமலும்
நம்மிடம்
இருப்பதை இழக்காமலும்
வாழ்ந்துவிடலாம்

💦ஏற்படவிருக்கும் மோசமான நிலைமையை
வீட்டிலிருக்கும் பெண்களிடமும்
புரிந்துகொள்ளும் வயதை அடைந்த குழந்தைகளிடமும்
பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
அவர்களின் ஒத்துழைப்பு
அவசியமான ஒன்றாகும்

💦பொதுவாகவே நெருக்கடியான காலம் வந்தால்
கொலை கொள்ளை போன்ற
அசம்பாவிதங்கள் நடைபெறும்
அதனால் பாதுகாப்பு
நடவடிக்கையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்

💦நமது நாடு எதையும் தாங்கும் தகுதியுடையது
கூடிய விரைவில் நிலைமை சீரடைந்து விடும்
நாடும் நாமும் மீண்டெழுவோம்
என்று
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்போம்

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard