Wednesday 27 April 2016

இஸ்லாம் கூறும் நற்குணம் பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮இஸ்லாம் கூறும் நற்குணம்💟

     பகுதி - 3

🌀அல்ஹம்துலில்லாஹ் சென்ற தொடரின் தொடர்ச்சியாக இதை காண்போம் இன்ஷா அல்லாஹ்

🗯நற்குணத்தை இல்லாமல் ஆக்கக்கூடியவைகள்👇🏼

🔹பெருமை
🔹பொறாமை
🔹கல்நெஞ்சம்
🔹நல்லுபதேசத்தை ஏற்க மறுத்தல்
🔹தலைமைத்துவம்
🔹உயர்ந்த பதவிகளையும் எதிர்பார்த்தல்
🔹தான் செய்த செயலுக்கு புகழை எதிர்பார்த்தல்

👆🏽போன்ற அனைத்து விஷயங்களும் நற்குணைத்தை இல்லாமலாக்குகின்ற  காரியங்களாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 👆🏽இவைகள் அனைத்துமே தற்பெருமை உள்ளவர்களிடமிருந்தே உருவாகின்றன.

💫 தீய விஷயங்கள் அனைத்துமே நற்குணத்தை அழிக்க கூடிய விசயம் ஆகும்.

💫 நல்ல விஷயங்கள் அனைத்துமே நற்குணத்திற்கே உரிய பண்பாகும்!                            .

💯நற்குணம்  என்பது உயர்ந்த பண்பாகும்,

 💯அதனது கூலியையும் பண்பையும் எடுத்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

 ❌🚫அதனை விட்டு தடுக்கக்கூடிய
🔹பொறாமை
🔹பிறரை நாவினால் நோவினை செய்தல்
🔹நேர்மையின்மை
🔹கோல்
🔹 புறம்
🔹கஞ்சத்தனம்
🔹உறவினர்களை துண்டித்து நடத்தல்

👆🏽இது போன்றவற்றிலிருந்து தவிர்ந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

 ☝🏻அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்து தடவைகள் தனது மேனியை சுத்தம் செய்கின்றான்.

💫கோபத்தை விட்டு விட்டு நம்மை சூழ உள்ள பெற்றோர்கள், மனைவியர்கள், குழந்தைகள், நண்பர்கள், அறிந்தவர்கள் அனைவர்களுடனும் சிறந்த முறையில் வாழ்ந்தவர்கள், இனிமையான பேச்சுக்களையும், முக மலர்ச்சியுடனும் இருக்கின்றவர்கள் இவர்கள் அனைவருமே நற்குணத்தின் மூலம் உயர்ந்த நற்கூலியை பெறத்தகுதியானவர்களே!.

💫நபி (ஸல்) அவர்கள்  நல்லுபதேசத்தின் போது சுருக்கமாக அழகாக நற்குணத்தைப் பற்றி  குறிப்பிட்டார்கள்:

📓“எங்கிருந்த போதிலும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள்! இதனால் தீமைகள் அழிந்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் நடந்துகொள்ளுங்கள்”

💫வெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம் போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.

💫அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்(அல்குர்ஆன் 7:179).

💫இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும்.(அல்குர்ஆன் 7:176)

💫உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி தடுமாறி போனது ஏன்⁉

💫எந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும் முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம்வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.

💫நாம் அனைவரும் நபிகளார் கூறிய “மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள், நற்குணமுடையவரே!”
எனற கூட்டத்தில் இருக்க வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும்  அருள் புரிவானாக!


💯💯💯💯💯💯💯💯💯💯💯

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 28 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Tuesday 26 April 2016

இஸ்லாம் கூறும் நற்குணம் பகுதி - 2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮இஸ்லாம் கூறும் நற்குணம்💟

     பகுதி - 2⃣

🌀அல்ஹம்துலில்லாஹ் சென்ற தொடரின் தொடர்ச்சியாக இதை காண்போம் இன்ஷா அல்லாஹ்

🗣நல்ல விஷயங்களை பேசுவதற்கும் நன்மையுண்டு.

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

🍃“நல்ல வார்த்தைகளை பேசுவது சதகா(தர்மமாகும்)”  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


💫அதே போன்று மனிதர்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பார்க்காத புன்முறுவலுக்கும் நன்மையுண்டு!

 🌿அதுவும் நற்குணத்திலிருந்து உள்ளதுதான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்.


📓“உமது சகோதரனின் முகத்தை பார்த்து புன்முறுவல் பூர்ப்பதும் சதகாவாகும்.” என்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)


🌿நற்குணத்தின்பால் தூண்டக்கூடிய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் ஏராளம்!

🌿அவர்களது வாழ்வில் தனது மனைவியர்களுடன், அண்டை வீட்டார்களுடன், ஏழ்மையாக இருந்த நபித்தோழர்களுடன், அறிவீனர்களுடன், இவற்றுக்கெல்லாம் அப்பால் இறை நிராகரிப்பாளர்களுடன்

💫மாற்று மதம் சார்ந்தவர்களுடனும்) அனைவர்களுடனும் சிறந்த நற்குணமுள்ள வர்களாகவும் எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமுள்ளவராகவும் வாழ்ந்து காட்டி சென்றார்கள்.

📓அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக!” (3:159)

🍀நற்குணத்திற்கான அடயாளங்கள் ஏராளமானவை!

💫அவற்றில் அதிகம் வெட்கமுள்ளவர்களாகவும், பிறரை துன்பப்படுத்துவதனை விட்டும் விலகி நடத்தல், அதிக சீர்திருத்தவாதியாக இருத்தல், உண்மை பேசக் கூடியவராகவும், குறைவான பேச்சு அதிக செயலுடையவராகவும், பொறுமை, நன்றியுணர்வு, தாழ்மை, கருனை, பிறரை திட்டாமலும் கோல், புறம், பெருமை போன்ற தீய செயல்களை விட்டும் விலகி, அல்லாஹ்வுக்காக வேண்டி ஒருவரை விரும்பி அவனுக்காகவே ஒருவரை ஒதுக்கி அவனுக்காகவே ஒருவரை பொருந்திக்கொள்ள வேண்டும்.

🍀முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன.

🍀மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

 📜நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

📓“மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.”
 (ஸுனனுத் திர்மிதி)

🍃ஆகவே அன்பு சொந்தங்களே  நற்பண்புகள் அறவே இந்த காலகட்டத்திலும் எம்முடைய தூதர் கூறுவதை நினைவில் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் நற்குணங்களை கொண்டு வந்து இன்ஷா அல்லாஹ் எம்முடைய தராசின் இடையேயும் கனமாக்குவோம்

💢இன்ஷா அல்லாஹ் தொடரும்....


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 27 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Monday 25 April 2016

இஸ்லாம் கூறும் நற்குணம் பகுதி - 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮இஸ்லாம் கூறும் நற்குணம்💟

            பகுதி - 1⃣

💢இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை

✨தன் குணங்களை நற்குணங்களால் அழகாக்கி கொள்ளக் கட்டளையிடுகிறது கற்றுதருகிறது.

📓உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2)       என்று இறைவன் கூறுகிறான்.

📓நபி (ஸல்) அவர்களும் "நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்"   என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)

✨நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும்,

⚡இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான்.

⚡இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,

📓“நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது    இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04)

💫என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள்.

✨நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள்.

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அதிகமானவர்கள் சுவர்க்கம் நுழைவது இறையச்சத்தினாலும், நற்குணத்தினாலுமேயாகும்” (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)

📜நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கு சிறந்த ஒரு நல்லுபதேசம் செய்கின்றார்கள்:

💥அபூ ஹுரைராவே நீர் நற்குணத்தை கடைபிடிப்பீராக! அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! நற்குணம் என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள், ‘துண்டித்து நடக்கும் உறவினர்களுடன் சேர்ந்து நடப்பீராக! உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக!” (ஆதாரம்: அல்பைஹகீ)

🌟பிரமாண்டமான நன்மையையும் உயர்தரமான அந்தஸ்தையும் இந்த நற்குணத்தினால் ஒரு அடியான் எளிதில் பெற்றுக் கொள்கின்றான்.

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நற்குணம் உள்ள ஒரு அடியான் நின்று வணங்கி நோன்பு நோற்பவனின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றான்” (ஆதாரம்:அஹ்மத்)

📜நபி (ஸல்)அவர்கள் நற்குணத்தை பூரண இறை விசுவாசத்திற்கு  உரிய அடயாளங்களில் ஒன்றாக கணிப்பிட்டுள்ளார்கள்.

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

🌟“எவரிடத்தில் நற்குணம் என்ற பண்பு இருக்கின்றதோ அவரே பூரண இறை விசுவாசியாவர்”

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

🌟“மனிதர்களுக்கு பிரயோஜனம் அளிக்கக் கூடியவற்றை செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்;
🔺ஒரு முஸ்லிமுக்கு சந்தோசமளிக்ககூடிய செயல்களை செய்வது
🔺 அல்லது கஷ்டத்தை விட்டும் நீக்குகின்ற
🔺 அல்லது அவனின் கடனை நிறைவேற்றுவது
🔺 அல்லது பிறரின் பட்டினியை நீக்குவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல்களாகும்.
🔻ஒரு முஸ்லிமின் தேவயை நிறைவேற்றுவதற்காக செல்வதென்பது பள்ளிவாசலில் ஒரு மாத காலம் இஃதிகாப் இருப்பதனை விடவும் என்னிடத்தில் விருப்பதுக்குரிய செயலாகும்” (ஆதாரம்:தபரானி)

🌟ஒரு முஸ்லிம்  நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கற்றுதருகிறது

✨ஆனால் இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்". (ஆதாரம்-புகாரி)

🏮அதனால் தீயவார்த்தைகளை பேசுவதை விட வாயை மூடி மவுனமாக இருக்க கட்டளையிடுகிறார்கள் நபி(ஸல்).

🏮ஆனால் இன்று நம்மில் பலர் நண்பர்களுடன் இணைந்து விட்டால் சகட்டு மேனிக்கு தீய விஷயங்களையும் ஆபாசமான உரையாடல்களையும் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.

✨அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்

🌟எம் தூதர் தெளிவாக சொல்லியும் நாம் அந்த வார்த்தைகளை சர்வசாதாரணமாக எடுத்து கொண்டு இருக்கிறோம்

✨ஆகவே அன்பார்ந்தவர்களே எந்த உபதேசங்களை படித்தோமோ அதை வாழ்வில் செயல் படுத்தக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் எம்மை மாற்ற வேண்டும்

💥இன்ஷா அல்லாஹ் தொடரும்......


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 25 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday 23 April 2016

நோய் ஒரு சோதனையா.? இஸ்லாத்தின் நிலை பாடு.!!!

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🌡நோய் ஒரு சோதனையா.?
🔮இஸ்லாத்தின் நிலை பாடு.!!!

💫நம்மில் சிலருக்கு நோய் வந்தால் .!!!!

💫அல்லாஹ் நம்மை கஷ்ட படுத்தவே நோயை தருகிறான் என்று நினைக்கிரோம்.!!

💫அல்லது நல்லவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் இப்படி கஷ்டம் கொடுப்பான் என்றும்.!!!

நம் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி கொண்டு இருப்பார்கள்.!!!

💫ஆனால்

💫உண்மையில் நோய் என்பது அல்லாஹ் நமக்கு கொடுக்கும் அருள் கொடை என்று புரியாததே இதற்கு காரணம்.!!

💫நபி மொழி.!!!!

💫இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 5645

💫மற்றொரு நபி மொழி.!!!!

💫இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
ஷஹீஹ் புகாரி 5641 5642

💫ஆனால் இதை அறியாத நம்மவர்கள் நோய் என்று வரும் வரை  ஈமான் என்ற  ஒன்றை பெயரிலாவது வைத்துருப்பவர்கள் .!!!

💫நோய் வந்து விட்டால் போதும்.!!!

💫நோயை போக்குவதற்கு என்ன வெல்லாம் செய்கிறோம்.!!!!

💫கற்பனைகள் ஆரம்பமாகிவிடும்...

💫பேய் , பிசாசு , தெய்வ குத்தம் .…

💫இப்படியே ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை மறந்து தர்ஹா, கோவில் என எங்காவது சென்று தன் நோயை போக்க போரடுகிறார்கள்.!!!

💫நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 4:48)

💫அல்லாஹ் இவ்வளவு அழகாக சொல்லியும் ,

💫தன் நோய் குணம் அடைந்தால் போது என்று இம்மை சுகத்திற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு சாதாரணமாக இணைவைத்து வைத்துவிடுகிறார்கள்.!!!

💫இப்படி பட்டவர்களை பற்றி அல்லாஹ் தெளிவாக சொல்லுகிறான்.!!!

💫இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.
ஷஹீஹ் புகாரி 5643

💫ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 21:35)

💫சாதாரண நோயின் காரணமாக அல்லாஹ்யே இணைக்கும் அளவுக்கு சென்று விடுக்கிறோமே

💫நாம் சிந்திக்க வேண்டாமா.?

சிந்திக்கும் திறன் அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லையா.?

💫நன்மையோ , கேட்டதோ  அல்லாஹ் புறத்தில்.இருந்து  வருவதை உறுதி படுத்தபட வேண்டிய நாம்.!!!!

💫சிறந்த சமுதாயமாக ஆக்கப்பட்ட சமுதாயம் (குன் தும் கைரி உம்மத்) என்கிற நாம்.!!!

💫பிறருக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நாம்.!!!!

💫இப்போது இருப்பதோ மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றி கொண்டும்.!!!

💫அல்லாஹ்விற்கு இனைவைத்து கொண்டு இருகிறோம்.!!!

💫இப்படி பட்டவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.!!!

💫அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
(அல்குர்ஆன் : 10:30)

💫இன்ஷா அல்லாஹ்

💫இனி வரும் காலங்களிலாவது இதை போல் இணைவைப்பதை விட்டு விட்டு .!!!

💫ஒரே இறைவன் அகிலத்தின் அதிபதி.!!
அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர்களாக

💫வாழும் வாழ்க்கையிலும்,மரணிக்கும் தருவாயில் கலிமா சொன்ன நிலையில் மரணிக்க முயற்சி செய்பவர்களா வாழ

💫அல்லாஹ் அருள் புரிவானாக .!!

💫ஆமீன் யாரப்பில் ஆலமீன்.!!!! .

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUDATION 📡

Friday 22 April 2016

எத்தனை பேர் இன்று முஸ்லிம்❓

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🔱எத்தனை பேர் இன்று முஸ்லிம்❓

🌟மதினாவை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த பனீ அஸத்,பனூ கத்ஃபான்,பனூ  தைபா,பனூ கர்ரா,பனூ அப்ஸ் ,பனூ துனையான் ஆகிய கோத்திரத்தார்கள் அபூபக்ர்(ரழி) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்பதாக அதில் ஒரு நிபந்தனை வைத்து கலிஃபா அபூபக்ர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

🌟அது நிபந்தனை என்னவென்றால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்கள் ஆனால் ஸகாத் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

👆🏻இதை கேட்டவுடன் அபூபக்ர் (ரழி) நான் ஆலோசனை செய்து விட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு உமர்(ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்தார்கள்

💥அந்த காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு நாலாபக்கமும் நெருக்குதல் அதிகரித்து கொண்டு இருந்தது.

💈இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து சில நாட்களில் பல கோத்திரத்தார்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியும்,பொய்த் தூதர்கள் உருவாகியும் வந்த காலகட்டம் அது!!!

🌟உமர் (ரழி) அவர்களுடன் ஆலோசனை செய்த பிறகு கலீஃபா அவர்கள் கூறினார்கள் ...

🌟இஸ்லாத்தை நீங்கள் எப்பொழுது ஏற்றுக் கொள்கின்றீர்களோ,அப்பொழுதிலிருந்து அது வலியுறுத்தும் அம்சங்களையும் நீங்கள் கடைப்பிடித்தாக வேண்டியது கட்டாயமாகும்.

🌟இஸ்லாத்தில் ஒரு காலும்,ஜாஹிலிய்யத்தில் மற்றொரு காலும் என்று வைத்துக் கொண்டிருக்க முடியாது.

⭕உங்களது மன இச்சைகளுக்குத் தகுந்தவண்ணம் இஸ்லாத்தின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டு,சில அம்சங்களை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

🌟ஒன்று நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாத்திற்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும்

⭕இறுதியில் ஸகாத் பொருத்தவரையில்,ஒட்டகத்தின் மூக்கணாங் கயிறு அளவிற்கு நீங்கள் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பினும் அல்லாஹ்வின் தூதரது கலீஃபா என்ற தகுதியில் இருக்கும் நான்,அதனை உங்களிடம் இருந்து வசூலிப்பதற்காக உங்கள் மீது போரிடுவதும் கூட என் மீது கடமையானதாகும் என்றார்கள்.

💥மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் ஸகாத்திற்கு மட்டும் பொருந்தாது மொத்த இஸ்லாத்தின் அம்சங்களுக்கும்  பொருந்தும்

💠கண்ணியத்திற்குரியவர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் இன்று நாம் சர்வசாதாரணமாக இஸ்லாத்தின் அம்சங்களை உதாசீனம் படுத்திக்கொண்டு சர்வசாதாரணமாக நம்முடைய தேவைகளுக்காக அந்த அம்சங்களை உதறிவிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

🌟ஆனால் நாம் முஸ்லீம்  என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்

💠பெயரை வைத்துக் கொண்டு வேனும் என்றால் அவர்கள் ஒரு முஸ்லிம் என்று அடையாளம் காட்டி கொள்ளலாம்.

🔸ஆனால்...

☝🏾அல்லாஹ்வுடைய பார்வையிலும் அவனுடைய தூதருடைய பார்வையிலும் சஹாபாக்களுடைய பார்வையிலும் அவர்கள் முஸ்லிம் என்று அடையாளம் காணமாட்டார்கள்.

💠ஆகவே அன்பு சொந்தங்களே!!!!!

💥இஸ்லாத்தின் அம்சங்கள் அனைத்தையும் எம் வாழ்வில் நடைமுறை படுத்தி முஸ்லிமாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்

🍃வல்ல ரஹ்மான் அதற்கு உதவி செய்வானாக ஆமீன்


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday 21 April 2016

வீடுகளில் நிம்மதி பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🏤வீடுகளில் நிம்மதி 🏤

           🏤பகுதி-3


📓நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (20:14)

☝🏾அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே தொழுகையாகும்.

💥தொழுகையை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான்.

☝🏾அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு அவனது ரஹ்மத் எப்படி கிடைக்கும்?

🏤வீடு எப்படி அமைதிக்குரிய இடமாக அமையும்?

📓உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கி விடாதீர்கள்! ஸூறதுல் பகறா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதி 2877, அஹ்மத் 7821)

📓“உங்கள் வீடுகளில் ஸூறதுல் பகறாவை ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் ஸூறதுல் பகறா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தபரானீ 8564)

😸ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் ஸூறதுல் பகறா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற!!!!

 💥நாமோ ஷைத்தான்களை அழைத்து எமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம்.

📓“மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும், “எகிப்தில் உங்களிருவரின் சமூகத்திற்கும் வீடுகளை அமைத்து, உங்கள் வீடுகளை நீங்கள் கிப்லாவாக ஆக்கித் தொழுகையை நிலை நாட்டுங்கள். இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்!” என நாம் வஹி அறிவித்தோம்.” (10:87)

📓உங்களில் ஒருவர் தம் (பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால் தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும். நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: முஸ்லிம்)

🌟பர்ழான தொழுகையைப் பொறுத்த வரையில் ஆண்கள் அதனைப் பள்ளியில் தொழுவது அவசியமாகும்.

🌟ஆனால் ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்.

🌟 பெண்களைப் பொறுத்த வரையில் பர்ழான தொழுகைகளையும் வீட்டில் தொழுவதே சிறப்பானதாகும்.

💥ஆனால்

💥இன்று எத்தனைவீடுகளில் அவை நடக்கிறது?

📓உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் உங்களுடன் (ஜமாஅத்தில்) சேர்ந்து தொழ விரும்புகிறேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ உன் வீட்டில் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது உனக்குச் சிறந்ததாகும். நீ உன் சமுதாயத்தின் பள்ளிவாசலில் தொழுவதை விட உன் வீட்டில் தொழுவது சிறந்ததாகும். நீ என்னுடைய பள்ளியில் தொழுவதை விட உன் சமுதாயத்தாரின் பள்ளியில் நீ தொழுவது உனக்குச் சிறந்ததாகும்.
நூல் : அஹ்மது (25842)

💥ஆகவே வீட்டில் வசதியிருப்பின் தொழுகைக்கென்று ஒரு அறையை ஏற்பாடு செய்வது, அல்லது பிரத்தியேகமானதொரு இடத்தை ஒதுக்குவது சிறந்தது.

🌟மலக்குகள் வருகை தருகின்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக சுபஹ் தொழுகை பற்றியும் குர்ஆன் ஓதும் சந்தர்ப்பம் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

💥சுபஹ் தொழுகைக்காக எழுந்து நிற்காமல் விடியும் வரை தூங்கும்போது அந்த வீடு ரஹ்மத் பெற்ற வீடாக அமையப் பெறுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

😸ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக நிகழ்வுகள் நடைப்பெறும் போது “முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும்.

 🔸பெண்களும் தொழுவதில்லை.

🔸 பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை.

🔸பொறுப்புக்குரிய கணவனும் ஏவுவதில்லை.

🔸பிறகு எப்படி அல்லாஹ் அருள்மழை அந்த இல்லத்தில் பொழியும்.

🌟முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்துவிட்டு ஷைத்தானுக்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு-முகாமிட வழிவிட்ட- பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் எப்படி இறங்கும்?

📓அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் (திக்ர் செய்வதன் மூலம்) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (அல்குர்ஆன்:13:28) என அல்லாஹ் கூறுகின்றான்.

💥மனிதர்களது நிம்மதியான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு உள்ளம் நோயற்றதாக இருக்க வேண்டும்.

 💥வாழ்வு நிம்மதியாக இருக்கும்.

💥வாழும் வீடும் சூழலும் அமைதியானதாக இருக்கும்.

💥உள்ளம் இறந்துவிட்டால் வாழ்வே நாசமாகிவிடும்.

💥🌟ஆன்மீகத்தை அழகானதாக, ஆழமானதாக நிலைபெறச் செய்து நிம்மதியான சூழலை அமைப்போம் இன் ஷா அல்லாஹ்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 22 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUDATION 📡

வீடுகளில் நிம்மதி பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🏤வீடுகளில் நிம்மதி 🏤

           🏤பகுதி-2


🏤வீடுகளில் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி,

☝🏾அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும்,
குர்ஆன் ஓதுவதும்,
 திக்ருகள் செய்வதும்
இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.

☝🏾அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று

 🔸சினிமா
            🔸நாடகங்கள்

😸மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன.

💥காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது.

☝🏾அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.


☝🏾அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை.

😔அதற்கான எண்ணமுமில்லை.

☝🏾அல்லாஹ் பாதுகாக்க வேண்டுமௌ குர்ஆன் மனனம் செய்யப்பட வேண்டிய உள்ளங்கள் ஷைத்தானின் கீதங்களை பதிவு செய்கின்றன.

☝🏾அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட வேண்டிய உதடுகள் ஷைத்தானின் ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றன.

💢ஆன்மீகத்தை ஒதுக்கிவிட்டு அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள்.

📓“உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூறதுல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)

👍குர்ஆன் ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான்.

💥அந்த வீட்டாரிடத்தில் எந்த விதமான தீமையை தூண்டவும் செய்ய வைக்கவும் முடியாமல் போகிறது.

 📓குர்ஆன் ஓதாது விட்டால் அந்த வீட்டாரிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிகளே அதிகம் இடம்பெறும்.

📓 ஷைத்தான் நம்மை நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்வதற்கு தூண்டி விடுவான்.

🔸நாமும் அவன் வலையில் சிக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

📓“இரவில் தூங்கச் செல்லும்போது நீ ஆயதுல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்-விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி)

☝🏾அல்லாஹ்விடத்திலிருந்து வரக்கூடிய பாதுகாவலர் ஒரு மலக்கு ஆவார்.

 😸ஷைத்தான் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாவல் போடப்படுகிறது.

💥துரதிஷ்ட வசமாக அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய பாதுகாவலரை விரட்டி விட்டு ஷைத்தானை துணைக்கு வரவழைக்கின்ற காரியங்கள்தான் இன்று வீடுகளில் நடக்கின்றன.

       🏤தொடரும்.....


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday 20 April 2016

வீடுகளில் நிம்மதி பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🏤வீடுகளில் நிம்மதி 🏤

           🏤பகுதி-1

🏤வீடுகளில் நுழைந்தால் நிம்மதி இல்லை!!!!!

🏤வீடுகளில் நுழைந்தால் சந்தோஷம் இல்லை!!!!


🏤விடுகளில் நுழைந்தால் ஒரேடென்ஷன்!!!!


🏤வீடுகளில் நுழைந்தால் சன்டை சச்சரவு

🔸ஏன் 🔸ஏன் 🔸ஏன்

        💥காரணம்


🏤வீடுகளில் மார்க்கம் இல்லை!!!!

🏤வீடுகளில் மார்க்கம் சொன்ன நெறி இல்லை

💥மாறாக மார்கத்திர்க்கு புரம்பான அனைத்து விசயங்களும் விட்டில் நடந்தால் வீடுகளில் எப்படி நிம்மதி இருக்கும்!!!!

🏤வீடுகளில் எப்படி சந்தோஷம் இருக்கும்!!!!

🏤சிந்தித்து பாருங்கள் எந்த வீடுளிலாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய முறையில் இருக்கிறதா?


💥நாம் சிந்திக்க வேண்டும் வீடு என்றால் என்ன?


🏤வீடு என்பது இறைவனின் மகத்தானதொரு அருள்.

🏤வீடுகள் அமைக்கப்படுவதன் நோக்கம் அதில் மன அமைதி பெறவேண்டுமென்பதே என்பது அல்குர்ஆனின் போதனை.

📓உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

💥அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

💥அதற்கான அனைத்து  வழிகளையும்  இஸ்லாம் நமக்கு காட்டித் தந்துள்ளது.

☝🏾அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும்.

☝🏾அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.

☝🏾அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி,

💥அடுத்த தொடரிலே பார்ப்போம்!!!!!!


      🏤தொடரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

கூத்தாடிகள்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❌கூத்தாடிகள் ❌


💈எங்கே செல்கிறது நமது சமூகம்❓

💈எதை நோக்கி பயனிக்கிறது நமது சமூகம❓

💈முழுமை படுத்தப்பட்ட மார்க்கத்தில் மக்கள் பின்பற்றுவது மடமையையே!!

💈என்று தெளிவு அடைவார்கள்❓

💈எப்போது வெற்றி பெருவார்கள்❓

🔸கேவலம்  🔸கேவலம் 🔸கேவலம்

💈ஒரு கூத்தாடியின் ரசிகன் ரசிகை என்பதில் பெருமை அடையும் சமூகம்.

💈முஹம்மது நபி (ஸல் )அவர்களின் உம்மத் என கூறுவதில் வெட்கம் அடைவது ஏன்........❓

💈ஒரு கூத்தாடியின்

🔸நடை

🔸உடை

🔸பாவனையை

💈பின்பற்றுவதில் பெருமை அடையும் சமூகம்

💈சத்திய நபியை பின்பற்றுவதில் தயக்கம் காட்டுவது ஏன்......❓

💈ஒரு கூத்தாடி வைக்கின்ற தாடி அப்படி உன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும் போது❓

💈எம் தூதர் முகத்தில் இருந்த தாடி உன் முகத்தில் ஏன் பிரதிபலிக்க வில்லை❓

🔸கேவலம் கேவலம் கேவலம்

💈ஒரு கூத்தாடியின் திரைப்பட விழாவிற்க்கு ஆண் பெண் வித்தியாசமின்றி பேனர்  வைக்கிறது நமது சமூகம்.

💈நமது நபி ஸல் அவர்கள் கூறிய செயலை செய்வதில் எங்கே சென்றது.....❓

💈பிரபல கூத்தாடியின் திரைப்பட வெளியீடுக்கு முதல்நாளே முந்திக்கொண்டு ஓடும் நமது சமூகம்.

💥என்றாவது ஒரு நாள்  ஜும்மா முதல் நபராக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தது உண்டா❓

💈ஒரு கூத்தாடியை நேரில் பார்ப்பதை சொர்கத்தையே நேரில் பார்ப்பதை போல் சிலர் உணர்கிறார்கள்.

💈உங்களை பார்க்காத நிலையுலும் நமது நபி (ஸல்) இரவு பகலாக அழுகையை கொண்டு அல்லாஹ் விடம் துவா செய்தார்களே.....

💈என்றாவது அவர்களை  நாம் நினைத்தது உண்டா.❓

👆🏻இது போல் இன்னும் ஏராளம் நமது சமூகத்தில் இதற்க்கு என்ன காரணம்❓

💈அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய விசயத்தை நாம் கேட்டும் கேட்க்காமல் இருப்பதே காரணம்.

💈அன்பு சொந்தங்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

💈மறுமைக்கு அஞ்சி கொள்ளுங்கள்.

💈நமக்கு மறுமையில் சிபாரிசு செய்பர்கள் இந்த கூத்தாடிகளா❓


💈இல்லை தானே அந்த கூத்தாடிகளை நாம் பின்பற்றுவதால் உலகிலும் வெற்றிஇல்லை மறுமையிலும் வெற்றி இல்லை....


👍சிந்திப்போம் செயல்படுவோம்👍


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday 18 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-10

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-10


✖வட்டி சாபக்கேடு✖

💥வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி )
நூல்: முஸ்லிம் (3258)


💥பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
புஹாரி 5347

☝🏾அல்லாஹ் கூறுகிறான்👇🏻


💥விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)


💥இறை நம்பிக்கையாளர்களே ..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள்.

(அல் குர் ஆன் 3:130)


💥(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).

💥வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா

(ரலி) நூல்: அஹமத்)

💥வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து - ஓட்டாண்டி - பரதேசி - ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் - அபிவிருத்தி - அழிக்கப்பட்டுவிடும்.

♓அதிக பொருள் இருந்தாலும் சரியே!

💥நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் - அது அதிகமாக இருந்தாலும் சரியே - நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும்.

(அறிவிப்பவர்:
இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: அஹமத்)

💥வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது.

💥அனைத்தும் ஹராமானவையே!

💥 வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.


👆🏻இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:
மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

✖வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!

✖வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் - தண்டனையால் - சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)

👆🏻இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது .. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.

💈ஹலாலும் தெளிவானது

💈ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு.
மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார் 'என்பது நபி மொழி. (புகாரி)

👆🏻இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.

👍இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.
நபி (ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன.

💥ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள்.

💥எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி (ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்?


💥 அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி (ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.


💥எனவே அல்லாஹ் நம்மைப்பாதுகாப்பானாக.!

💈ஹலாலாக உழைத்து ஹலாலை சாப்பிடக்கூடிய மக்களாக நம்மை மாற்றுவானாக.


💥உயர்ந்த சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதற்ரு அருள் புரிவானாக.
ஆமீன் ஆமீன் ஆமீன்


ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 18 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday 17 April 2016

✳DEEN GO GO 🚫DUNYA COME COME

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✳DEEN GO GO
             🚫DUNYA COME COME

💈இரண்டு நண்பர்களின் உரையாடல்👇🏼

🗯ஆஷிக்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ

💢அமீன்:
வஅலைக்கும் ஸலாம்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

🗯ஆஷிக்:
என்ன அமீன் ஸ்கூல் விடுமுறை விட்டாச்சி விடுமுறையை எப்படி கழிக்க போற?

💢அமீன்:
அதாவது ஆஷிக் இந்த விடுமுறையை நல்லா செமயா கொண்டாட முடிவு செய்துள்ளேன்

🔸உறவினர் வீட்டுக்கு போவேன்

🔸பல சுற்றுலா தளத்திற்க்கு செல்வேன்

🔸விளையாட்டு கிளாஸ் போவேன்

🔸இன்னும் பல ஐடியாக்கள் உள்ளது ஆஷிக் ஏன் கேக்குற

🗯ஆஷிக்:
சரி அமீன் இவ்வளவு இடத்திக்கு போறியே வேறு ஏதாவது ஐடியா வைத்துள்ளாயா

💢அமீன் :
பல ஐடியா உள்ளது இந்த விடுமுறையை செமயா என்ஜாய் பண்னணும்.

🛡சரி நீ என்ன செய்ய போற ஆஷிக்❓

🗯ஆஷிக்:
எனக்கு விடுமுறை மொத்தம் 45 நாட்கள் வருது அதில் சில நாட்கள் உறவினர்கள் வீட்டிற்க்கு சென்று விட்டு பின்பு நம்ம ஊரிலே சம்மர் கிளாஸ் ஆரம்பிக்கராங்களே அங்கே சென்று மார்க்கத்தை கற்க போகிறேன்.

💢அமீன்:
என்ன ஆஷிக் கிடைக்கிற கொஞ்ச நாளை என்ஜாய் பண்ணாமல் ஓத போறியா?

🗯ஆஷிக்:
ஆமாம் அமீன் அதைதான் நானும் சொல்றேன் கிடைக்கிற கொஞ்சம் நாட்களை மார்க்கத்திற்க்கு பயன்படுத்தலாமே?

🔸நீயே சொல் இந்த இயந்திர காலத்தில் நமக்கு மார்க்கத்தை கற்க நமக்கு நேரம் எங்கே இருக்கிறது.

🔸காலை எழுந்திருக்கிறோம் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஸ்கூல் போகிறோம்.

🔸பிறகு வந்து ஹோம்வொர்க் டியூசன் என தினமும் நமது வாழ்க்கை இயந்திரம் போல தானே போகுது அமீன்

🔸நமக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டால் நமக்கு கைசேதம் தான் மிஞ்சும் அமீன்.

🔸அல்லாஹ் கொடுத்த இந்த நேரம் & காலத்தை அவனது மார்கத்தை நமக்காக கற்பதில் நான் பெருமை அடைகிறேன் அமீன்.

🔸அமீன் நமது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

💈உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக் கொள்பவரும், கற்றுக் கொடுப்பவரும் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)

🔸நமது நபி (ஸல்) கூறியதை போல் நமக்கு மார்க்கத்தை கற்று விளங்க ஆசை இருக்கிறது ஆனால் நேரம் இல்லையே😔

🔸ஆகையால் எனக்கு கிடைத்த இந்த விடுமுறையை நான் மார்க்கத்தை விளங்க செலவு செய்ய போகிறேன்.



💢அமீன்:
அல்லாஹ் நான் எனது நேரத்தை வீணாக செலவு செய்ய முடிவுஎடுத்து இருந்தேன்

🔸அல்லாஹ் உனது மூலம் எனக்கு தெளிவு கொடுத்தான் ஆஷிக் ஜசாக்கல்லாஹ்

🔸நானும் உன்னுடன் சம்மர் கிளாசுக்கு வர்றேன் என்னையும் கூட்டிட்டு போறியா?

🗯ஆஷிக்:
அல்ஹம்துலில்லாஹ்
கன்டிப்பாக அமீன் வா நமது நண்பர்கள் பலர் இதே போல் உள்ளார் அவர்களுக்கும் நாம் இந்த விசயத்தை விளக்கி சொல்லலாம்.

💢அமீன்:
கன்டிப்பாக அமீன் அல்லாஹ் சொல்லி இருக்கான்ல

💥மேலும், நீர் உபதேசம் செய்வீராக! ஏனெனில் நிச்சயமாக உபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு (நற்) பயனளிக்கும்.

(அத்தாரியாத்:55)

🔸வா நாம் சேர்ந்து நமது நண்பர்களுக்கும் சொல்வோம்.


👍அமீன்&ஆஷிக்
சகோதரர்களே நீங்களும்
 உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லும் இந்த விசயம் சிலருக்காவது பயன் தரலாமே?


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday 16 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-9

🔥🔥வட்டிக்கு என்னதான் தீர்வு வட்டியை அழிக்க நாம் என்ன செய்யலாம்.


🔥பணம் உள்ளவர்கள் அந்த பணத்தை மார்க்கம் கூறியமுறையில் செலவு செய்தால் வட்டி என்ற முஸிபத் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


          🛡மேலும்.......

🔥வட்டி இல்லாத வங்கியே இதற்க்கு தீர்வாக அமைய முடியும்.

🔥நமது முஸ்லிம்கள் சமூகத்தில் உள்ள அனைவரும் அல்லது அதிகமானோர் வட்டி வாங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாலே வட்டி இல்லா வங்கிகள்  அதிகரிக்கும்.

🔥வட்டி இல்லாத பொருளாதார அமைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த பொருளாதார தேக்கம் சிறிய அளவிலேயே காணப் பட்டது.


🔥இதற்க்கு ஒரு சிறிய முயற்சியாக பைத்துல் மால் போன்ற செயல்முறையை நடை முறைப்படுத்தலாம்.


🔥பைத்துல் மால் என்பது வட்டி இல்லா சிறிய வங்கியை போல் இயங்கக் கூடியதாகும்.

🔥பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதும் பணத் தேவை உடைய மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதும் மக்கள் செலுத்தும் ஜகாத் வரிகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் பைத்துல் மாலின் முக்கிய பணிகளாகும்.


🔥இந்த செயல்முறையின் மூலமாக வட்டியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் கடன் தேவை உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்கலாம் அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உதவ முடியும்.


🔥வேறு எந்த (மத) சமூகத்திலும் இல்லாத இந்த இனிய முறையை செயல் படுத்துவதின் மூலம் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக் காட்டாக திகழ முடியும்.


🔥அன்பு சொந்தங்களே இதுவரை நாம் போட்ட பதிவுகளை பத்தோடு பதினொன்றாக நினைக்காமல் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்யுங்கள் வல்ல ரஹ்மான் நமக்கு முற்றிலும் உதவி செய்வான்.


🔥சமுதாயத்தின் சாபக்கேடான வட்டியை மனதாலும் உடலாலும் வெறுத்து வல்ல ரஹ்மானின் முழு உதவியை பெறக்கூடிய சமூகமாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!!!!!


ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

வட்டி பெரும் குற்றம் பகுதி-8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-8

🔥அல்ஹம்துலில்லாஹ் நாம் கடந்த சில தொடர்களிலே வட்டி பற்றி பார்த்தோம்.

🔥வட்டி எந்த அளவு தடுக்கப்பட்ட குற்றம் எவ்வளவு பெரிய பாவம் என தெரிந்திருப்போம்.

🔥நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.


🔥பலர் நமது தேவைக்கும் அதிகமாக கிடைக்கிறதே என எண்ணி வட்டிக்கு விடுகிறார்கள்.

🔥வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம் அதை யாரும் மறுக்க முடியாது.


🔥அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது அதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.


🔥இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


🔥வட்டியினால் உலகிலும் கேடு்  மறுமையிலும் கேடு என்பதை நீங்கள் என்று உணரப் போகிறீர்கள்❓


☝🏼அல்லாஹ் தான் நேர்வழி காட்ட வேண்டும்.


🔥மேலும் வட்டியினால் பலர் பல பாவமான செயல்களும் செய்ய நேரிடும்

🛡அதாவது வியாபாரத்தில்

🔸பொய் பேசுவது

🔸ஏமாத்துவது

🔸எடையில் மோசடி செய்வது என சொல்லிக் கொண்டேபோகலாம்

🔥இதர்க்கு மூலகாரணம் என்னவென்றால் வட்டிக்கு வாங்கியதே எப்படியாவது  நாம் சம்பாதித்து அந்த வட்டியை முடித்து விட வேண்டும் என்று
மார்க்கத்தில் தடை செய்த பலகாரியத்தை செய்ய முற்படுகிறார்கள்.

☝🏼அல்லாஹ்தான் ஹிதாயத் கொடுக்க வேண்டும்.

🔥மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க ☝🏼அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .

🔥வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

🔥எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


🔥வட்டிக்கு என்னதான் தீர்வு அடுத்த தொடரில் பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்

💥தொடரும்............

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 16 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday 14 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-7

💈நமது சமுகத்தில் வட்டி பல வழிகளில் நமக்கே தெரியாமல்  பல வழிகளில் நமது வாழ்க்கையில் இருந்து கொண்டு நம்மை நரகின் பக்கம் அழைத்து கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் வாங்கும் புழக்கத்தில் உள்ள சில வட்டிகளை பார்ப்போம்👇🏻

🏵நகையை அடமானம் வைப்பது.

💢சிலர் தங்களது அவசர தேவைக்காகவும் ,அனாவசிய அனாச்சரங்களுக்காகவும் தங்களது நகைகளை வங்கியிலோ வட்டிகடையிலோ அதன் மதிப்பைவிட குறைந்த தொகைக்காக அடமானம் வைக்கிறார்கள்.

💢பிறகு அதற்கு வட்டியும் கட்டி பின்பு அதை மூழ்கவும் செய்து விடுகிறார்கள்.தன்னுடைய நகைக்கு தானே முட்டாள்தனமாக பணம் செலுத்துகிறார்களே..

💢இவர்களை என்னவென்று சொல்வது ❓

💢தமக்கு தேவை என்றால் இருக்கும் நகையை விற்று  விட்டு பின்பு வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனை கூட இவர்களிடம் இல்லை.

☝🏼அல்லாஹ் உங்களை சோதித்து பார்பதற்காக ஒரு அவசர தேவையை உண்டாக்குகிறான் நாம் அதை சாமார்த்தியமாக கையாள வேண்டும் என்று தெரியாமல் அடமானம் என்ற பெயரில் நரகப்படுகுழியில் சிலர் சிக்கி விடுகிறார்கள்.

☝🏼அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

    🛡அடுத்து...

       🔸ஏலச்சீட்டில் வட்டி

      🔸குலுக்கல் சீட்டில் வட்டி

      🔸பொருட்களை அடமானம் வைப்பததில் வட்டி

     🔸வங்கியில் சேமிப்பு கணக்கில் வட்டி

     🔸இன்ஸூரன்ஸ் வட்டி

     🔸வாகணம் வாங்குவதில் வட்டி

     🔸வீட்டு கட்ட லோன் வட்டி

     🔸கல்வி  கடன் வட்டி

     🔸தொழில் கடன் வட்டி

     🔸மகளிர் குழு வட்டி

👆🏻இன்னும் இது போன்று பல வட்டிகள் உள்ளன .

💈இதர்க்கு தீர்வு என்ன

💥அடுத்த தொடரிலே பார்ப்போம்.

🗯 தொடரும்..................

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 15 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

வட்டி பெரும் குற்றம் பகுதி-6

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-6


💈நமக்கே தெரியாமல் நமது சமுகத்தில் நமது வாழ்க்கையில் இந்த வட்டி பல ரூபத்தில் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் வாங்கும் பழக்கத்தில் உள்ள சில வட்டிகளைப் பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக👇🏻

🏍வாகனம் வாங்குவதில் வட்டி❌


💈இன்று சர்வசாதாரணமாக வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்த முடியவில்லை என்றும் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.

💈இதில் வெளிடையாக நாம் வட்டி கொடுகிறோம் என்று தெரியாவிட்டாலும்

👆🏻இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

 💈பலரை புது வண்டியா எவ்வளவு என்று கேட்டால் நான் 'டிவ்'வில் வாங்கினேன் என சர்வசாதரமாக கூறுவார்கள்.

💢அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

💈பலர் இதை தவறு என்றே உணர்வது கிடையாது வட்டிக்கு உள்ள தன்டனை அனைத்தும் இதுக்கும் பொருந்தும் என்பதை வாங்குபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

💢அதற்கு நாம் என்ன செய்யலாம் ❓

💢ஏன் புதிய வாகனம் தான் வாங்க வேண்டுமா?பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்குமே

💈அதே நேரம் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தையும் வாங்கிக் கொள்ளலாமே!!

❌வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும்❌

💢என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.

💈ஏன் வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.

💈அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மறுமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.

       🛡அடுத்து

🏛வீடு வாங்குவதில் வட்டி❌


🏍வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதற்க்கும் பொருந்தும் இதற்கு தெளிவான விளக்கம் தேவை படாது இருந்தாலும் சிரிய ஆலோசணை கூறுகிறோம்👇🏻


💢வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💢வட்டியின் வாயிலாக நாம் பெறும் வீடு நிச்சயம் அழிய கூடியதே.

💢சிந்தித்துப்பார்த்து அல்லாஹ்வால்  தடுக்கப்பட்ட விஷயத்தின் வாயிலாக பெறப்படும் வீட்டை விட ஒன்றும் இல்லாதவனாக இருப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது

💢நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர்  சற்று கீழே உள்ள வசனத்தை நினைவில் சிந்தித்து பார்க்க வேண்டும்.


📓மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!

(அல் குர் ஆன் 66:11)

🌀எனவே அன்பார்ந்தவர்களே நாம் அல்லாஹ்விடம் நிரந்தரமான அந்த சொர்கத்தில் அழகிய வீடு கட்டித்தர பிரார்த்திப்போம்.

🌿இன்ஷா அல்லாஹ் வல்ல ரஹ்மான் நமக்கு அருள் செய்வானாக


🗯 தொடரும்.....

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday 12 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-5


💈நமது சமுகத்தில் வட்டி பல வழிகளில் நமக்கே தெரியாமல் நமது வாழ்க்கையில் பல ரூபத்தில் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் வாங்கும் புழக்கத்தில் உள்ள சில வட்டிகளை பார்ப்போம்👇🏻

💸வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி❌

💢ஒருவருடைய வங்கி கணக்கின் தொகையை பொறுத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொறுத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது

👆🏻இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை நாம் அனைவரும் தெரிந்த விஷயமே❗

💢சிலர் செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.

👆🏻இது மாதிரி வைப்பது பெரும் குற்றம் ஆகும். அவர்கர்களுக்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கை இருக்கிறது.

💢இன்னும் சிலர் வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.


👆🏻இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.

❗❕ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது❓

💢அதற்கு இரண்டுவிதமான கருத்துக்களை கூறுவார்கள்.

1.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது அதாவது ஏழைகளுக்கு கொடுத்து விடலாம் என்றும்

2 சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.

👆🏻இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது ஏனென்றால்  அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும்.

✅அல்லது நாம் வங்கியில் எழுதி கொடுத்துவிடலாம் எனக்கு அதன் மூலம் வரும் வட்டி பணம் வேண்டாம் என்று.

📓வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)


📓வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா.)


🗯 தொடரும்.....

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 13 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

வட்டி பெரும் குற்றம் பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-4


💈வட்டியும், மறுமையும்💈

💥மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இருக்க வேண்டும்.

🔥 வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

📓வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும், ) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல்குர்ஆன் 4:161)


💈அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டியை பற்றி வண்மையாக எச்சரித்த போதிலும்

💈நமது சமுகத்திலும் நமது தனிப்பட்ட வாழ்விலும் வட்டி பல ரூபத்தில் நமக்கே தெரியாமல் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் நம்மில் புழக்கத்தில் உள்ள சில வட்டிகளை இங்கு பார்ப்போம்👇🏻

1⃣பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி👇🏻


💢விலை அதிகமான பொருட்களை நம்மில் பலர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல  பொருட்கள் விற்கப் படுகிறது.

👆🏻இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.

💈ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் தவணை முறையில் வாங்கும் போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் வராது  அதை இஸ்லாம் தடுக்கவும் இல்லை.

💈ஆனால் நாம் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தால் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட சற்று அதிகமாகவே   இருக்கும்.


💈ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.

👆🏻இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :


1.முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .

2.சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

💢அடுத்த தொடரிலே இன்னும் தெளிவாக பார்களாம்

 
🗯 தொடரும்.....

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday 11 April 2016

ஒற்றுமையே வெற்றி

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


👍ஒற்றுமையே வெற்றி👍

✅சமூகத்தின் ஒற்றுமை ஒற்றுமையில் உள்ளது வேற்றுமையில் இல்லை


❎சமுகம் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விளையாடுகிறான்.


❎நாம் இந்த ஒற்றுமை என்ற விசயத்தில் சிறிய விரிசல் கண்டாலும் ஷைத்தான் நம்மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்த முற்படுகிறான்.

✅இறைவனின்  அடிமைகள் நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் நம்மை  எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான்.

💢மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத்
தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

💈நமது சிந்தனையின் இலக்கு எதுவாக  இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

💈அன்பு சமூகமே❗❕


💈சமூகம் பிளந்து கிடக்கும் காரணத்தை உற்று நோக்கினால் ஒற்றுமை குலைய காரணம்
உலக இலாப-நஷ்ட்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும்.


💈நாம் சிந்திக்க வேண்டும் நமது வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது வேற்றுமையில் கிடையாது.

💈பலம் நிறைந்த சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💈கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் அதுவே பகையாக மாறிவிடகூடாது.

💈நமது சமூகம் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான் .

💈அங்கே அவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு ஒற்றுமையும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💈இறைவன் கூறுகிறான்👇🏻

📓அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

💈நமது  சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💈சகோதரர்களே நாம் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் சீர் குலைத்திட வேண்டும் என்பதைத்தான்.

💈முஸ்லீம்களுக்குள் பிளவை உண்டாக்க வேண்டும் என்பது தான்.

💥அன்பு சொந்தங்ளே❗❕

💈நாம் எந்த நிலையிலும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாக கூடாது என்பதை மனதில் ஆழமாக பதியவேண்டும்.

📓"அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான்.

 (அல் குர்ஆன் 8 :46).

💈ஆக இஸ்லாமிய சொந்தங்களே

👍ஒற்றுமையே வெற்றி தரும்👍என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்து வல்லரஹ்மானுக்கு கட்டுப்பட்டு நண்மக்களாக ஒற்றுமையாக வாழகூடிய பாக்கியத்தை இறைவன் நமக்கு வழங்குவானாக!!!


✴✴✴✴✴✴✴✴✴✴
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday 10 April 2016

வட்டி பெரும் குற்றம்-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-3


🔥இஸ்லாத்தின் வட்டி 🔥

🔥வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது

🔥எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்..

📓'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

❎வட்டி பெரும் பாவம்❎

🔥பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால், வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.

🔥பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?


🔥பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

🔥பலர் அந்த தவறை செய்வதால் அது தான் மார்க்கம் என விளங்குவது முட்டாள் தனம்.

📓நபி (ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள் 'என்று கூறினார்கள். மக்கள்,' இறைத்தூதர் அவர்களே! அவை யாவை? 'என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,' அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்) 'என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
புஹாரி 6857
.

🔥வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்

☝🏾அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்;. (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை (அல்குர்ஆன் 2:276)

📓(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை;.. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும் அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள் (அல்குர்ஆன் 30:39)


        🔥தொடரும்


ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday 9 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-2

🔥வட்டி என்றால் என்ன❓


💥சென்ற தொடரிலே வட்டியை

🔥வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது.

🔥வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.

🔥நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.


🔥ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை.

🔥இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது வண்மையாக கண்டிக்கிறது.

🔥 ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம், வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.


🔥வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு

📓யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள் (அல்குர்ஆன் 2:275).


🗯 தொடரும்...

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 09 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday 8 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎


♦இன்றைய காலக்கட்டத்தில் நமது இஸ்லாமிய சமூகத்தில் வட்டியை ஒரு பெரும்பாவமாகவே கருதுவது கிடையாது..!!

♦நமது இஸ்லாமிய சகோதர ,  சகோதரிகளும் வட்டிக்கடைகளில் சர்வ சாதாரணமாக உலா வருவதை நாம் கண்கூடாக பாக்க கூடிய ஒன்று தான்..!!

😭அதை பார்க்கும் போது ஒவ்வொரு இஸ்லாமியனின் உள்ளம் படுபாடு இறைவனே அறிவான்.

♦ஏன்

♦வட்டியை இஸ்லாம் தடை செய்யவில்லையா❓

♦ஏன்

♦வட்டியை இஸ்லாம் ஆதரிப்பதாகவா சொல்லுகிறது❓

♦இஸ்லாம் எந்த அளவிற்க்கு வட்டியை வன்மையாக கண்டிக்கிறது என்பதை விளங்காததின் பின்விளைவே இந்த வட்டி நமது சமூகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.

♦எதற்காக வட்டி வாங்குகிறார்கள் என்று கவனித்தால்  பெரும்பாலும்.!!!

🔸காது குத்து விழா செய்வதர்க்கு.

🔸கத்னா செய்து பூ போட்டு பார்பதர்க்கு.

🔸பிறந்த நாள் விழா கொண்டாடுவது.

🔸பெண் பிள்ளைக்கு சடங்கு விழா செய்வதர்க்கு.

🔸 திருமணம் ஆடம்பரமாக செய்யவதர்க்கு.

👆🏻இன்னும் இது போல் மார்கத்தில் இல்லாத விசயங்களை கொண்டாடுவதர்காகவே.!!!

♦இந்த கேடு கேட்ட வட்டியை வாங்குகிறார் என்பதை நாம் கண் கூடாக பார்கிறோம்.

♦இப்படி செய்வது முட்டால் தனத்தின் உச்சக்கட்டம்/ இன்றி வேறு இல்லை❓

♦வாங்கிய  அந்த வட்டி கடனை அடைப்பதற்க்கு மேலும் வட்டி.!!!!

♦அதை அடைக்க வட்டி.!!!!

♦என்று அந்த முஸீபத் தொடர்ந்து கொண்டே போகும்.


👆🏻வட்டியை எந்த அளவிர்க்கு மார்க்கம் வண்மையாக கண்டிக்கிறது.

🛡இன்ஷா அல்லாஹ்🛡

♦நாம் இனி வரும் தொடர்களில் வட்டி என்றால் என்ன வட்டியை பற்றி இன்னும் சில விளக்கங்களை பார்ப்போம்.

       🗯 தொடரும்...

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 08 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday 7 April 2016

பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💢பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா❓

🗯பிள்ளை பெற்றடுப்பது பெரிதல்ல அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

👆🏻இந்த விசயம் இந்த காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தான் கூறமுடியும்.


🗯கேட்டால் நவீன காலம் பிள்ளையை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லையாம்.

💢 பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா❓

💢பராமரிக்க வேண்டாமா❓


✅பலர் நமது பிள்ளை நல்ல பிள்ளை தவறு ஏதும் செய்யாது, எனது பிள்ளையை நான் நம்பாவிட்டால் யார் நம்புவது என்றெல்லாம் கூறுவார்கள்.

👆🏻இதை நாம் குறை கூறவில்லை ஆமாம்,நமது பிள்ளைகளை நாம் நம்பாவிட்டால் வேறு யார் நம்புவது.


💢ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடும் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும்.


❎இன்றைய சூழல் நமது பிள்ளைகளை தவறான நிலைக்கு கொண்டு செல்கிறது.

         🗯ஒன்று👇🏻

💢நமது பிள்ளைகளை கெடுக்கும் விசயம் பல வீடுகளில் உள்ளது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

❎பிள்ளைகளுக்கு எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன.

👆🏻இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர் என்பது வேதனையான விசயம்.

           🗯அடுத்து👇🏻

💢பல பெற்றோர்கள் செய்யும் அடுத்த தவறு

📱📲செல்போன்

❎பல பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள்.


👆🏻இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர்.


📱செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

✅பெற்றோர்களே பிள்ளைகளை பெற்றடுப்பதினால் மட்டும் நமது பொறுப்பு நீங்கி விடாது.


✅அந்த பிள்ளைகளுக்கு மார்கத்தையும் அந்த பிள்ளைகளை கண்கானிப்பதும் பெற்றோர்கள் மீது கடமை ஆகும்.

♦சிந்தித்துப்பாருங்கள்

💥உங்கள் பிள்ளைகளின் எதிர்ககாலத்தைப்பற்றி சிந்தித்ததுண்டா?

🔃முஸ்லீம் பெண்களைக் குறி வைத்து  தேடிக்கொண்டிருக்கிறது கயவர்க்கூட்டம்..

❌தன் பெண்களின் எதிர்காலத்தை சீரழிக்க நீங்களே காரணமாகாதீர்கள்.

🚫பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரம் எல்லை மீறாமல் இருக்கும் வரை பாதுகாப்புதான்.

💔ஆனால் எல்லை மீறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகள் குடும்பங்களை சிதைத்து விடும்.

📲செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கப்பாருங்கள்.

🎙குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

💥அல்லாஹ் அனைத்து சகோதரிகளையும்  அனைத்து விதமான சீரழிவுகளில் இருந்து பாதுகாப்பானாக!!!!!!

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 07 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday 6 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

           
          🔵பகுதி-4⃣

❤அல்ஹம்துலில்லாஹ்

💠இதுவரை தடுக்கப்பட்டவைகளை பற்றி நாம் பார்த்தோம்
ஆகுமானவை பற்றி அல்லாஹ் குர்ஆன் ஷரீஃபில் கூறுகிறான்

📓மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (உண்ண உங்களுக்கு ) அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள்
                       (2:167)

🌀இவ்வசனத்தின் மூலம் நல்லவை அனைத்தும் ஆகுமனவையே என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்

🌀பொதுவாக ஹராம் என்பதற்கான ஆதாரம் இல்லாத எதையும் ஹலால் என்றே நாம் ஏற்க வேண்டும் .
இது அல்லாஹ் நமக்கு செய்த கருனையும் மகத்தான உபகாரமுமாகும். இதற்காக நாம் இறைவனுக்கு அதிகம் நன்றி செலுத்த வேண்டும் .

🌀மார்க்கத்தை விளங்கிக்கொள்ளாத சிலர் ஹராமுடைய வகைகளை பார்க்கும் போது மனச்சங்கடதிற்க்கு ஆளாகிறார்கள் . ஹலால் உடைய வகைகளை கூறினால் மட்டும் மார்க்கம் இலகுவானது என்று இவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ன ❓

💠ஆகுமாக்கப்பட்ட நல்ல உணவுகளின் பட்டியல் இவர்களுக்கு விவரிக்கப்பட்டால் மார்க்கம் தங்களுடைய வாழ்க்கையை கசப்பாக்கி விடவில்லை என்று நிம்மதி பெறுவார்களா என்ன ❓❔

☘மார்க்கம் இலகுவானது தான் ‼
ஆனால் மக்கள் அதை தவறாக விளங்கிக் கொண்டார்கள் .

☘இலகுவானது என்பது மக்களின் மனோ இச்சை இன்னும் விருப்பங்களுக்கு ஏற்பவாறு அமைந்திருப்பது என்பது பொருளல்ல ; மாறாக மார்க்கம் கூறி இருக்கும் முறையில் தான் இலகு இருக்கிறது ...

☘மார்க்கம் இலகுவானது என்று கூறி தடை செய்யப்பட்டவற்றை செய்வதற்கும்  அனுமதித்தவற்றை செய்வதற்குமிடையே வேறுபாடு உண்டு.

🌿மார்க்கம் இலகுவானது என்பதன் பொருள் நம் மனோ இச்சையின் விருப்பத்திற்கேற்ப அமைந்துள்ளது என்பதல்ல.

🌿இது மட்டுமல்ல அல்லாஹ் சில பொருட்களை ஹராமாக்கி இருப்பதில் பல நுட்பங்கள் இருப்பதை முஸ்லிம்கள் உறுதியாக நம்ப வேண்டும் .
🔹உதாரணமாக அல்லாஹ் சில விஷயங்களை செய்யக்கூடாது என தன் அடியார்களை தடுத்து ,
அவர்கள் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதை சோதிக்கிறான் .

🔹இன்னும் சுவர்க்க வாசிகள் யார் நரக வாசிகள் என்பதையும் இதன் மூலம் சோதிக்கிறான்

🔺நரக வாசிகள் மனோ இச்சைகளையே பின்பற்றுவார்கள்.
நரகம் இச்சைகளைக் கொண்டே சூழப்பட்டிருக்கிறது .

🔸சுவர்க்க வாசிகள் மனதிற்கு சிரமமானதை பொறுமையுடன் சகித்துக் கொள்கிறார்கள் . சொர்க்கம் சிரமானவற்றைக் கொண்டே சூழப்பட்டுள்ளது ...


🍃இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் உள்ள சிரமத்தை நன்மையின் பார்வையுடனும் அல்லாஹ்வின் திருப்தியை வேண்டி கீழ்படிதலின் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது அவர்களுக்கு சிரமமாக தெரிவதில்லை ...

🍁நயவஞ்சகர்கள் இறைக்கட்டளைகளில் உள்ள சிரமங்களை வேதனை மற்றும் இழப்பின் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது அவர்களுக்கு செயல்படுத்த முடியாத கடினமான காரியமாக தெரிகிறது ...


💠தடுக்கப்பட்டதை அல்லாஹ்விற்க்காக விடுவதின் மூலமே அடியான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதை விட சிறந்ததை பகரமாகப் பெறுகிறான், இறை நம்பிக்கையின் இன்பத்தையும் உள்ளத்தில் உணர்கிறான்...

💥அல்லாஹ்வே! எங்கள் அனைவரையும் நீ அமைத்த வரம்புகளை பேணி நடக்கும் நல்லருளை உன்னிடம் வேண்டுகிறோம்..


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday 5 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

           
          🔵பகுதி-3


💥உறுதியாக தடுக்கப்பட்டவை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது
உதாரணமாக👇🏻


🔵“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்;


📓எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள் அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:151)

👆🏻இதுபோல் ஹதீஸில் நாம் பார்க்கலாம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓நிச்சயமாக அல்லாஹ் மது செத்த பிராணிகள் பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றின் வியாபாரத்தை (ஹராம் என்று) தடை செய்திருக்கிறான்
        (அபூதாவூத் )


💥நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓நிச்சயமாக அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால் அதன் (மூலம் கிடைக்கும்) கிரயத்தையும் ஹராமாக்கி விடுகிறான் .;
            (தாரகுத்னீ)


☝🏾அல்லாஹ் சில வசனங்களில் குறிப்பிட்ட வகையை சேர்ந்த தடுக்கப்பட்ட சில வற்றை குறிப்பிடுகிறான்.

🔸உதாரணமாக


💥சாப்பிட அனுமதிக்கப்படாதவை பற்றி பின் வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்👇🏻


 📓(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:3)


💥திருமணம் செய்துகொள்ள விளக்கப்பட்ட பெண்களைப் பற்றி பின் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்👇🏻


📓உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:23)

❌தடை செய்யப்பட்ட வியாபாரங்களை பற்றியும் ☝🏾இறைவன் கூறுகிறான்👇🏻

📓அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கி விட்டான்
                                           (2:275)


💥நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்கள் மீது நிகரற்ற அன்புடையவன் .

🔸ஏராளமான நல்லவற்றை நமக்கு ஆகுமாக்கி வைத்துள்ளான் ஆகுமாக்கப்பட்டவையின் விவரங்கள் நமக்கு கூறப்படவில்லை ..

🔸தடை செய்யப்பட்ட குறிபிட்ட சில விஷயங்கள் தான் ...

🔸அவற்றை நாம் விளங்கிக் கொள்வதற்காக அவை அனைத்தும் கூறப்பட்டு விட்டன ...

💥குர்ஆன் கூறுகிறது

📓 நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்
(6:119)

❌தடுக்கப்பட்டவைகளை நாம் பெரியதாகவும் கஷ்டமானதாகவும் நினைப்பதால் தான்  நமக்கு அது சிரமமாக தெரிகின்றது

💥இந்த வசனங்களை நாம் நன்கு படித்தோம் என்றால் நமக்கு அது இலகுவாகிவிடும்...


💥ஆகுமானவற்றை பற்றி இறைவன் என்ன கூறுகின்றான்????

💥அடுத்த தொடரில் பார்ப்போம்.


            🔵தொடரும்....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 05 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday 4 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

             🔵பகுதி-2


☝🏾அல்லாஹ்வின் சட்டங்கள் அனைத்தும் அவனது ஞானம் மற்றும் நீதி நிறைந்தவை
அவை அர்த்தமற்றவையும் அல்ல வீனானவையும் அல்ல


📓وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

📓மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:115)


☑ஹலால் (அனுமதிக்கப்பட்டவை)
ஹராம்(தடுக்கப்பட்டவை) ஆகியவற்றின் அடிப்படை காரணத்தை அல்லாஹ் மிக தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகிறான்👇🏻


📓(இத்தூதர்) நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார்  தீயவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார் .....(7:157)


👆🏻இவ்வசனத்திலிருந்து நாம் தெளிவாக தெரிந்துகொள்வது என்னவெனில் நல்லவை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்
கெட்டவை நமக்கு விலக்கப்பட்டவையாகும் ...


⚪ஒன்றை ஆகுமாக்குவதும் தடை  செய்வதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும் உரிமையாகும்.

⚪எவரேனும் ஒருவர் அந்த உரிமையை தமக்கும் இருப்பதாக அல்லது அல்லாஹ் அல்லாத வேறு எவருக்கேனும் இருப்பதாக நம்பினால் அவர் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்ட இறை நிராகரிப்பாளர் (காபிர்) ஆவார் .


📓أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ ۚ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ


📓அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு
(42:21)

⚪ஹலால் ஹராமை பற்றி பேசுவது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கறிந்தவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகும்.


⚪ஒன்றைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளாமல் அதை ஹலால் ஹராம் என்று கூறுபவனை குர்ஆன் கடுமையாக கண்டிக்கிறது👇🏻

📓உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 16:116)



         🔵தொடரும்....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 04 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday 3 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫


🌿நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களுக்கு பல கடமைகளை விதித்திருக்கிறான் :

🌿 அவற்றை பாழ் படுத்தக் கூடாது.

 ☘பல சட்ட வரம்புகளை நிர்ணயித்துள்ளான் :

☘ அவற்றை தகர்த்திடக் கூடாது.

🍁பல செயல்களை விலக்கியுள்ளான்:  அவற்றை செய்யக்கூடாது.

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் தனது நூலில்

🔹எவற்றை ஆகுமானதாக ஆக்கியுள்ளானோ அவைகள் அனைத்தும் ஆகுமானவை.

🔹எவைகளை விளக்கியுள்ளானோ அவை அனைத்தும் விலக்கப்பட்டவை.

🔹அல்லாஹ் எதை தெளிவு படுத்தாமல் மவுனம் காத்துள்ளானோ, அவை சலுகைகள்.
எனவே அச்சலுகைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

🔸நிச்சயமாக அல்லாஹ் எதையும் மறந்துவிட மாட்டான்"
 என்று கூறி விட்டு பின்னர் கீழ்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

💥.. உம் இறைவன் மறப்பவனாக இல்லை ",
             
📖 ( ஸூரா மர்யம் 19:64)
📓(முஸ்தத்ரகுல் ஹாகிம்)

🍁அல்லாஹ்வால் (ஹராமாக்கப்பட்டு)விலக்கப்பட்டவை அனைத்தும் அவன் நமக்கு விதித்திருக்கிற வரம்புகளாகும்.

📖இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகள் . ஆதலால் அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள் (2:187)


📖எவன் அல்லாஹ்விற்க்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகிறானோ,
அவனை நரகத்தில் புகுத்தி விடுவான் ,
அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான்.
இழிவு படுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு..  (4:14)

🍄இன்று வாழக் கூடிய எம் சகோதர சகோதரிகள் சர்வசாதாரணமாக அல்லாஹ் எதையெல்லாம் ஆகுமாக்கப்பட்டதாக ஆக்கினானோ அவற்றை விட்டு தூரமாகி

🍄எதை எல்லாம் அல்லாஹ் விலக்கினானோ அதை நெருங்க கூடிய சமுதாயமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

♻அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்

🌿குறுகிய அறிவும் பலவீனமான உள்ளமும் கொண்டு மனோ இச்சையை பின்பற்றுவோர்,
தடை செய்யப்பட்ட விஷயங்களை பற்றி கேட்கும் போது சலிப்புடன் கூறுகிறார்கள் :

🌿மார்க்கம் இலகுவாக இருந்தும் இந்த அறிஞர்கள் அனைத்தையும் ஹராம் என்று கூறி எங்கள் வாழ்வை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதை கசப்பாக்கி விட்டார்கள்

☘அல்லாஹ் எம்மை முஸ்லிமாக படைத்ததே தமக்கு அல்லாஹ் செய்த மிக பெரிய கிருபை ஆனால் நாம் ஒரு கடுகளவு கூட அவன் செய்த கிருபையை நினைக்காமல் அவனுக்கும் அவனுடைய சட்டத்திற்கும் மாறு செய்கிறோம்.

☘அல்லாஹ்வின் சட்டத்தை மாறு செய்தவர்களை  அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றியதை பற்றி அவன் தன் திருமறையில்  கூறுவதை நீங்கள் பார்க்க வில்லையா❓

🏮ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்


🍁நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை சட்டமாக்குகிறான்;
அவன் மிக நுட்பமாக அறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான்
அவன் நாடியதை ஆகுமாக்கவும்
நாடியதை தடை செய்யவும் முழு உரிமை பெற்றவன்
நாம் அல்லாஹ்வின் அடிமைகள்
எனவே அவனது சட்டங்களை மனமுவந்து எவ்வித ஆட்சேபனையுமின்றி பொருந்தி கொள்வது கடமையாகும்...

 🍃இன்ஷா அல்லாஹ் தொடரும்.....



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday 2 April 2016

வெட்கம்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🌿வெட்கம்🌿

⚡அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்று நாம் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

💐அல்ஹம்துலில்லாஹ்💐

💫இன்று மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் நாகரீகம் என்ற பெயரில் வெட்கத்தை இழந்து கொண்டே போகிறோம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்


💫ஆனால் இன்று நம்மில் பெரும்பாலோர் இந்த வெட்கம் என்ற ஒரு வார்த்தை இருப்பதையே மறந்துவிட்டார்கள் என்றே கூறளாம்.

⚡நாட்கள் செல்ல செல்ல கேவலங்களும் அசிங்கங்ளும் எண்ண முடியாத அளவில் நம்மிடம் பெருகி உள்ளது வேதனையான விசயம்

👆🏽இதற்கு இந்த சினிமா பெரிதும் உதவுகிறது.

💫இதில் வேதனை ஆன ஒன்று என்னவென்றால் இந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் வளர்ச்சி நம் முஸ்லிம் மக்களிடமும் காணப்படுகிறது என்பது தான்.

☝🏻அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

💫வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

💫அன்பார்ந்தவர்களே இதோ எம்தூதரின் குணத்தை பாருங்கள்👇🏻

📓நபி(ஸல்) அவர்கள் அதிக நாண உணர்வுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தைக் கண்டால் அதன் பிரதிபலிப்பை அவர்களின் முகத்தில் காணலாம். (நூல் : புகாரி)

⚡கண்ணியத்திற்குரியவர்களே இன்று நாம் சர்வசாதாரணமாக எந்தவொரு வெட்கமும் இல்லாமல் தவறுகள் செய்து கொண்டு இருக்கிறோம்

💫அது தனிமையில் செய்யக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரி அல்லது பகிரங்கமாக செய்யக்கூடிய பாவங்களாக இருந்தாலும் சரி எந்தவொரு அச்சமும் இல்லாமல் செய்கிறோம்

💫ஏன் அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓

💫⚡ எம் இஸ்லாமிய இளைஞர் இளைஞிகள் காதல் ( விபச்சாரம் ) என்று  எந்த  தைரியத்தில் செய்கிறீர்கள்?

⚡ஏன் அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓

💫எம் சகோதரிகள் சிலர் ஹிஜாபுகளை பேணாமல் சிலர் ஹிஜாபுகளை அணிந்தாலும் அதை அளங்காரத்தாலும் நறுமணத்தாலும் அந்த ஹிஜாபின் நோக்கத்தை மாற்றுகின்றனர் ...

⚡ஏன் அல்லாஹ்வின் பயம் இல்லையா❓

💫அல்லது அல்லாஹ் உங்களை பார்க்கவில்லை என்று எண்ணுகிறீர்களா❓


💫இன்னும் இது போன்று  பாவங்களை அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் இந்த பதிவின் நோக்கம் பாவங்களை பட்டியல் இடுவது அல்ல

⚡அன்பார்ந்தவர்களே ஒரு முஸ்லிம் வெட்க உணர்வுடையவர்.

⚡மக்களை சிரமப்படுத்தும் அருவருப்பான எந்தச் செயலும் அவரிடம் இருக்கக்கூடாது.

⚡ஒரு முஸ்லிம் பிறரின்  உரிமையிலும் எந்த வகையிலும்  குறைவு செய்யமாட்டார்.

⚡ஏனெனில், வெட்கம் இவ்வாறான செயல்களுக்குத் திரையாகிறது.

⚡அவர் அல்லாஹ்வுக்காகவே வெட்கம் கொள்கிறார்.

⚡தனது ஈமானில் அநீதி கலந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்.

👆🏽இதுதான் ஒரு முஸ்லிமின் அடையாளம் நாம் யாராக இருக்கிறோம்❓❔


💫என்பதை நாமே சிந்தனை செய்வோம்.



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 02 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday 1 April 2016

ஏப்ரல் 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

           🚫ஏப்ரல் 1🚫

🎭அறியாமையின் வெளிப்பாடே முட்டாள் தினம்🎭

✳மனிதனை முட்டாள் ஆக்கும் தினம் மார்க்கத்தில் உள்ளதா❓

❤கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே

🏮இந்த உலகத்தில் வாழ்ந்த சில மூடர்கள் அவர்களின் அறியாமையின் காரணத்தாலும் தங்கள் புகழை இந்த உலகத்தில் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் சில தினங்களை தோற்றுவிக்கின்றனர்

⭕அதில் ஒரு தினம் தான் இந்த உலக முட்டாள் தினம்.

 ✅இதற்கு இஸ்லாத்திற்கு எந்த சம்மதமும் இல்லை என்பதை இதற்கு முன் பகுதிகள் வாயிலாக பார்த்தோம்.

🔰ஆனால் நம்மில் இருக்கும் சில சகோதரர்கள் விளையாட்டிற்காகவும், சந்தோஷத்திற்காகவும் இந்த நாள் வந்தவுடன் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிறரிடம் பொய்யை கூறிக்கொண்டு அவர்களை ஏமாற்றுகின்றனர்.



🚫இதை பார்க்கும் எமக்கும் இதில் என்ன இருக்கு?இது ஒரு சாதாரண விளையாட்டு தான் என்று தோன்றும்.


✳இந்த தினத்தை கொண்டாடுவதின் காரம் பல ஹதீஸ்களையும் பல வசனங்களையும் நமது சகோதரர்கள் அறிந்தும் அறியாமலும் நிராகரிப்பதே ஆகும்.


💔இந்த தினத்தை கொண்டாடுவதின் மூலம் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியுமா❓

❌இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவது கூடத் தடுக்கப்பட்டுள்ளது.❌


❌அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.❌

🔰முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் –
📚ஆதாரம்:  (திர்மிதி, அபூதாவூத்)

✅எம்தூதரே உனக்கு கேடு உண்டாகட்டும் என்று சபித்தற்கு பிறகு நீங்கள் யாருடைய சிபாரிசை பெறப்போகிறீர்கள்❓

♦ஒன்று இல்லாத இந்த அர்ப்ப துன்யாவில் உள்ள இந்த அற்ப தினத்திற்காக வேண்டி எம்தூதர் உடைய சிபாரிசை இழக்க தயாராகிறீர்கள்❓


இன்னும் பல வசனங்களும் ஹதீஸ்களும் இந்த தினத்திற்கு எதிராக உள்ளது.


❤சகோதரர்களே❗❕

💥நாம் பல தினங்களை  சம்மந்தம் இல்லாமலே கொண்டாடுகிறோம்.


✳இதை பற்றி நமது இறைவன் நம்மிடம் கேள்வி கேட்டால் நம்மிடம் என்ன பதில் இருக்கிறது❓

♦சிந்தித்துப்பாருங்கள்♦

🔰யார் பிற மத கலாச்சாரத்தை கொண்டாடுகிறார்களோ அவர்களும் அவரை சாந்தவர் என்ற நபி மொழி நினைவு இல்லையா?

💥இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான

♦பொய் பேசுதல்,
♦பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல்,
♦ஏமாற்றுதல்

🔃ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்தால் தானே,மற்ற சகோதரர் நம்மை பார்த்து திருந்துவார்கள்.

🔰 இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுவதை கேளுங்கள்👇🏻

🔰“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

💥அதை போல் அல்லாஹ் மிக தெளிவாக தன் திருமறையில் சொல்கிறான் யார் பொய்யை கூறுகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய வசனத்தை நம்பாதவர்கள் என்று..

✳ஒருவன் குர்ஆனுடைய வசனங்களை நம்பவில்லை என்றால் முஸ்லிம் இல்லை.

🔰அல்லாஹ் கூறுவதை பார்த்தும் நீங்கள் இந்த பொய்யை கூற தயார் என்றால் அதற்கு நிச்சயம் கூலியை மறுமையில் பெறுவீர்கள் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

❤ஆகவே கண்னியத்திற்குயவர்களே நாம் ஒரு முஸ்லிம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு சம்மதம் இல்லாதவற்றிற்கு பக்கம் செல்லாமல் இருப்பதுடன்,

💥இனிவரக்கூடிய காலங்களில் எம்தூதர் எச்சரித்த இந்த பொய்யை பேசாமல் வாழ முயற்சிப்போம்

💥இன்ஷா அல்லாஹ் அதற்கு அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.

💥வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக ஆமீன்.



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 01 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡