Tuesday 29 October 2019

உலக சிக்கன தினம்! இஸ்லாமிய பார்வையில்

ஒரு குறிப்பிட்ட தினத்தை தேர்வு செய்து  தந்தையர் தினம் அன்னையர் தினம் மகளிர் தினம் நண்பர்கள் தினம் என பல தினங்கள் கொண்டாடப்படுகிறது
அந்த வரிசையில் தான் இன்று உலக சிக்கன தினம்


இஸ்லாம் இது போன்ற விடயங்களை எவ்வாறு பார்க்கிறது என்பதை நாம் ஆராய்வோம் ஒரு குறிப்பிட்ட தினத்தை குறிப்பிட்டு அன்று மட்டும் அந்த விடயங்களை அனுசரிப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது


தினமும் நமக்கு அன்னையர் தினம் தான் தாயை மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிறது தினமும் நமக்கு தந்தையர் தினம் தான் தந்தையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது அது போல் ஒவ்வொரு நாளும் எந்தெந்த தினங்கள் அனுசரிக்கப்படுகின்றனவோ அவை அனைத்தையும் நாம் தினமும் கடைபிடிக்க வேண்டியது அவசியமானது ஆகும்


இன்று உலக சிக்கன தினமாம்

சரி இஸ்லாம் சிக்கனத்தை பற்றி எவ்வாறு கூறுகிறது என்பதை நாம் ஆராய்வோம் உதாரணத்திற்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டோமானால் கால் வயிறு சாப்பிட்டு அரை வயிறு எடுத்து வைப்பது சிக்கனம் அல்ல வயிறார சாப்பிட்டு வீண்விரயம் செய்யாமல் இருப்பதே சிக்கனமாகவும்

மேலும்......

சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும். “மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.


அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)


தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணாகிறது.


உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டுகிறது.


உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.


இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்துகள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.


அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.


தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக்கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங்களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.



தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம்,

அதேபோல் மின் சிக்கனம் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு, 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் சில மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் உள்ளது.

மின்சாரம் என்பது வற்றாத வளம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்; நாட்டுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில், மின் உற்பத்தியும் ஒன்று.

'அவசியத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறோம்' என்று கூறும் நம்மில் பலரின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாக்கப்பட்டு பற்றாக்குறை ஏற்படுகிறது.ஒவ்வொரு மின் நுகர்வோரும் குறைந்தது, 40 வாட்ஸ் மின்நுகர்வைக் குறைத்தாலே 1,000 மெகாவாட்ஸ் பற்றாக்குறையைச் சரிசெய்யலாம் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் ஆளே இல்லாத அறையில் மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும், மின் விளக்குகள் எரியும். ஆனால், இதை நாம் கண்டுகொள்வதில்லை. மின்வெட்டு சமயங்களில் அரசுகளை திட்டி தீர்க்கும் நாம்; பயன்பாட்டில் பொறுப்பின்றி இருக்கிறோம்.இயற்கை வளங்கள், செயற்கை வளங்கள் எதுவாயினும் அதை சேமிக்கும் வழக்கம் நமக்கு கட்டாயம் வேண்டும்.




நமது முன்னோர்கள் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள் பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும்போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்க தொடங்குங்கள். மகிழ்ச்சியாக வாழ்வோம்!. இறையருளைப்பெறுவோம்!

Thursday 17 October 2019

பட்டாசு வெடிக்கபோரீங்களா

பட்டாசு வெடிக்க போறீங்களா
ஒரு நிமிடம் யோசிங்க


அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே
நம்மவர்களில் சிலர் மாற்றார்களை போல்  தீபாவளி பண்டிகை ,நிக்காஹ் போன்ற சில விசேஷங்களின் போது   பட்டாசுகளை வெடித்து
தங்கள் ஹலாலான பணத்தை கூட சில நேரம் வீண் வழியில் செலவு செய்து விடுகின்றனர்.


கேட்டால் அந்த காரணத்தை பிள்ளைகள் மீது போடுகிறோம்.


பிள்ளைகளை திருத்துவது நம் கடமை இல்லையா


பிள்ளைகளிடம் அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவினால் இறைவன் நமக்கு உதவுவான் என்றும் வீண்
விரயம் செய்யகூடாது என்றும் நாம் தானே சொல்லி தர வேண்டும்.
வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது.


வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 6:141)


(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
நூல் : அபூதாவுத் (3512)


மேலும் இறைவன்  நமக்கு அளித்த செல்வத்தை எப்படி  எந்த வழியில் செலவு  செய்தாய்  என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வரை நம் கால்கள் அவ்விடம்  விட்டு நகராது.


நாம் பட்டாசுகளை வெடிப்பதால் என்ன பயன் துளியும் பயனில்லை.


மாறாக யாருக்கும் பயனில்லாமல் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு கரியாகும்.


அடுத்து நம் சூற்றுசூழலுக்கு நச்சு காற்று உண்டாகும்.நச்சு காற்றினால் அலர்ஜி மற்றும் சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும்.
பயங்கரமான வெடிகளை நோயாளிகளை அதிர்ச்சி அடைய வைக்கும்.


ராக்கெட் வெடிகள் போன்றவை குடிசைகளை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.


இவைகளை இஸ்லாம் அனுமதிபதில்லை.


அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல் முஸ்லிம் 73.


நல் வழியில் செலவு  செய்தால் மட்டுமே ஈருலகிலும் வெற்றி பெறாலாம். இல்லையேல் அதற்குரிய தண்டனை  கிடைக்கும்.

எனவே தானதர்மங்களை செய்து 
அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து தப்பிப்போம்.


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 2:268)


ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    
(அல்குர்ஆன் : 7:31)


உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(குர்ஆன் 17:26, 27)


இதன் மூலம் சைத்தானிற்க்கு மறுமையில் என்ன நிலையோ அதை நிலையே அவனின் கூட்டாளி க்கும் என்பது தெளிவாகிறது.


மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 13:21)


அன்பார்ந்த சகோதர
சகோதரிகளே சிந்தியுங்கள் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள் மாற்று மதத்தில் கூட இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் நம் கஷ்டத்தில் அல்லாஹ் உதவி செய்வான்.


இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக.ஆமீன்

Tuesday 15 October 2019

தாய் பாலின் அவசியம்! தாய்மார்களே அவசியம் படியுங்கள்...

பெற்றோர்களே!!! தாயாமாற்களே!!! உணரவேண்டாமா???


குர்ஆனில் சொல்லப்பட்ட அனைத்து அறிவிப்புகளும்  சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்கள் மூலமாக  உண்மை படுத்தப்பட்டு வருகிறது

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக ஏற்று அதன்படி வாழ்ந்து வரும் நமக்கு நம்பிக்கை இருந்தும் செயல்படுத்துவதில் பொறுப்பற்றவர்களாக இருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.


குழந்தை பெற்ற தாய் குழந்தைக்கு இரண்டாண்டுகள் கட்டாயம் முழுமையாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியும் அதை  பெரும்பாலான பெண்கள் பின்பற்றுவதில்லை.

 அவர்களாகவே சில காரணங்களை முடிவு செய்துகொண்டுகுழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறார்கள்

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தாய்பால் கொடுக்க சொன்னாலும் குழந்தைக்குப் போதுமான பால் இல்லை அதனால் புட்டிப்பால்  கொடுப்பதாக சொல்லி சமாளித்து விடுகிறார்கள்


இன்னும் சிலர் தாய்ப்பால் கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும் என்றும்
சிலர் இரத்தத்தை முரித்துத்தான் பால் சுரக்கிறது குழந்தைக்கு பால் கொடுத்தால் ரத்தம் குறைந்து விடும் என்ற தவறான முடிவிலும் தாய்ப்பால் நீண்ட நாள் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று பயந்தும் அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு சில மாதங்கள் மட்டும் கொடுத்து
நிறுத்தி விடுகிறார்கள்



பெற்றோர்களும் கட்டாயப்படுத்துவதில்லை அதன் விளைவு மருத்துவர்கள் சொல்கிறார்கள்


பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்


மேலும் இந்தியாவில் மூன்று நகரங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்
அதிகமாக இருக்கிறது என்று அதில் சென்னையை முதலில் குறிப்பிடுகிறார்கள்

மார்பகபுற்றுநோய் வருவதற்கு இன்னும்சிலகாரணங்களையும் சொல்கிறார்கள்

  • மதுப்பழக்கம்


  • உடல்பருமன்


  • அதிககொழுப்புள்ளஉணவுகள்


  • உடற்பயிற்சி இல்லாதது



போன்ற சில காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள்

அல்லாஹ் சொன்னதை அவர்கள் மெய்ப்பிக்கிறார்கள் அல்லாஹ் சொல்லியிருக்கும் அனைத்திற்கும் பல காரணங்கள் இருக்கலாம்

இது எதிர்காலங்களில் மனித அறிவுக்கு தெரிய வரலாம் அல்லது தெரியாமலும் போகலாம்


ஆனால் அல்லாஹ் கூறிய வார்த்தைகள் அனைத்தும்  நமது நன்மைக்குத்தான் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அது தான் உண்மையும் கூட தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் இருக்கும் என்பது மட்டுமல்லாமல்


குழந்தையின் உடல் நலம் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்கால ஆரோக்கிய வாழ்வு
இவை அனைத்திற்குமே தாய்பால் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

அல்லாஹ் தாய்ப்பால் கொடுப்பதை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி சொல்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்

ஒரு பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றாலும் அவர்களுடைய குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அதற்காக ஆகும் செலவுகளைஅந்தப் பெண்ணுக்கு குழந்தைகளுடைய தந்தையே கொடுக்க வேண்டும்
என்று மார்க்க சட்டம் சொல்கிறது

இதிலிருந்து தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை நம்மால் உணர முடிகிறது

அல்லாஹ் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்து
காத்தருள்வானாக!!!!

Saturday 12 October 2019

முஃமீன்கள் என்றால் யார்?

சொர்க்கத்தை அடைய போகும் அந்த முஃமின்கள் யார் ?

📖(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். *(உண்மையாகவே) நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் உயர்ந்தவர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)

💯முதலில் உண்மையான முஃமினாக மாறாத வரை உயர்வு இருக்காது.

📖 முஃமின்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)

📖 அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)

📖 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டும் விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)

📖 ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.*
(அல்குர்ஆன் : 23:4)

📖 மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் பாதுகாத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)

📖 ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:6)

📖 ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 23:7)

📖 இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:8)

📖 மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:9)

📖 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (மேலும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)

📖 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நல்ல முறையில் செலவு செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 8:3)

📖 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்
(அல்குர்ஆன் : 8:4)

👆🏾மேற்கூறப்பட்ட தன்மைகள் எதுவும் இல்லாது உயர்வு வேண்டும் வெற்றி வேண்டும் ஆட்சி வேண்டும்  என்றெல்லாம் கோஷம் போடுவதிலும் கூக்குரலிடுவதிலும்,போராடுவதிலும் எந்த பலனும் துளியளவும் இல்லை
.
😱 நாம் முஃமின்களாக வாழவிட்டால்  அல்லாஹ் நமக்கு உயர்வை தரவ போவதில்லை

💯 சஹாபாக்கள் முஃமின்களாக வாழ்ந்ததால் தான் இவ்வுலகிலே ஆட்சி,அதிகாரம்,வெற்றி போன்றவற்றை அல்லாஹ் கொடுத்தான்.

🌐 மேலும் சஹாபாக்கள் முஃமீன்களாக இருந்ததால் தான் உலகில் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவியது.

👉🏻எனவே முஃமீன்களாக வாழ்ந்தால் தான் ஈருலகிலும் வெற்றி என்பதை உணர வேண்டும்.நம்மை நாமே   கேட்டு சீர்திருத்தி கொள்ள வேண்டியவைகள்❓

🤔 நம் சமுதாயம் உள்ளச்தோடு பேணுதலாக  தொழகையை நிறைவேற்றுகிறதா❓

🤔 நம் சமுதாயம் முழுமையாக ஜகாத் கொடுக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் கேடுகெட்ட இசை,ஆபாசம், சினிமாவில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் போதை,மதுவில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் வீணான காரியங்களில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் வட்டியில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் பொய்,புறம் பேசுவதில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் முழுமையாக ஹிஜாபை பேணிப் பாதுகாக்கிறதா❓

🤔 நம் சமுதாயம்   அமானிதத்தை,வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுகிறதா❓

🤔 அல்லாஹ்வை நினைத்து  நமது  உள்ளம் பயப்படுகிறதா❓

📖 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; *எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;* இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 13:11)

👍🏼 முதலில் உண்மையான முஃமினாக வாழ்வோம் பிறகு உயர்வு நம்மை தேடி தானாக வரும்

🤲🏻 இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக! ஆமீன்.

Friday 11 October 2019

சத்தியத்தின் பக்கம் மக்களை அழைப்போம்.

சத்தியத்தின் பக்கம் மக்களை அழைப்போம்.நன்மையை ஏவுவோம்.தீமையை தடுப்போம்

அழைப்புப் பணி செய்யுமாறு அல்லாஹ்வின் கட்டளை:

📖(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).

📖என்னைப் பற்றி ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள்.  (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம்: புஹாரி).

தீமையை தடுப்பதற்கு அவசியமில்லை என்போருக்கு மறுப்பு:

📖இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப் பட்டுள்ளனர், ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறுசெய்து கொண்டும், வரம்பு மீறி நடந்துகொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையெருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை, அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.” (அல்மாயிதா 5: 78, 79).

📚எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப் பின் சமூகங்கள், அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார், அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால் போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லை” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்).

அழைப்புப் பணி ஏன்❓

1⃣ நம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்தவற்காக!:

📖(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் – அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.” (11: 117).

2⃣ நஷ்டத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக:

📖காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).

3⃣ ஆதாரங்கள் நிலை நாட்டப்பட வேண்டும்:

📖தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.” (4: 165).

முஃமினின் பண்பு:

📖முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர், அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாக)க்கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள், அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் -நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.” (அத்தவ்பா 9: 71).

அழைப்புப் பணி செய்யும் முறை❗

1⃣ அழகான வார்த்தை:

📖எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்)?” (புஃஸ்ஸிலத் 41: 33).

2⃣ சிறந்த சமுதாயம்:

📖மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3: 110).

3⃣ வெற்றிபெற்ற சமூகம்:

📖மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.” (ஆலு இம்ரான் 3: 104).

4⃣ சமமான கூலி:

📖எவர் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றாரோ அதை ஏற்று செய்தவர்களின் கூலி போல் இவருக்கும் உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. எவன் வழிகேட்டின் பால் மக்களை அழைக்கின்றானோ அவனுக்கு அதை செய்தவர்களின் கூலி போன்று உள்ளது, அவர்களது கூலியில் ஏதும் குறைக்கப்பட மாட்டாது.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), முஸ்லிம்).

நிலையான நன்மை:

📚ஒருவன் மரணித்து விட்டால் அவனது அனைத்து அமல்களும் துண்டிக்கப்படுகின்றன, மூன்றைத் தவிர: (அவன் செய்த) நிலையான தர்மம், அல்லது அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைவது, அல்லது அவனது பிள்ளை அவனுக்காக பிரார்த்திப்பது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி), முஸ்லிம்).

தெளிவான ஞானத்துடன் அழைப்பு பணி செய்ய வேண்டும்

📖(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” (யூசுப் 12: 108).