Monday 4 November 2019

ஒற்றுமையே வெற்றி

ஒற்றுமையே வெற்றி

சமூகத்தின் ஒற்றுமை ஒற்றுமையில் உள்ளது வேற்றுமையில் இல்லை

சமூகம் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விளையாடுகிறான்.

நாம் இந்த ஒற்றுமை என்ற விஷயத்தில் சிறிய விரிசல் கண்டாலும் ஷைத்தான் நம்மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்த முற்படுகிறான்.

இறைவனின்  அடிமைகள் நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் நம்மை  எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான்.

மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத்
தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

நமது சிந்தனையின் இலக்கு எதுவாக  இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும், வெகுமதியும் அமைகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பு சமூகமே

சமூகம் பிளந்து கிடக்கும் காரணத்தை உற்று நோக்கினால் ஒற்றுமை குலைய காரணம்
உலக இலாப-நஷ்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும்.

நாம் சிந்திக்க வேண்டும் நமது வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது வேற்றுமையில் கிடையாது.

பலம் நிறைந்த சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் அதுவே பகையாக மாறிவிடகூடாது

நமது சமூகம் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான் .

அங்கே அவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு ஒற்றுமையும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுகிறான்

அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

நமது  சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சகோதரர்களே நாம் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் சீர் குலைத்திட வேண்டும் என்பதைத்தான்.

முஸ்லீம்களுக்குள் பிளவை உண்டாக்க வேண்டும் என்பது தான்.

அன்பு சொந்தங்களே❗❕

நாம் எந்த நிலையிலும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாக கூடாது என்பதை மனதில் ஆழமாக பதியவேண்டும்.

ஆக இஸ்லாமிய சொந்தங்களே

ஒற்றுமையே வெற்றி தரும்👍என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்து வல்ல ரஹ்மானுக்கு கட்டுப்பட்டு நண் மக்களாக ஒற்றுமையாக வாழகூடிய பாக்கியத்தை இறைவன் நமக்கு வழங்குவானாக!!!

✴✴✴✴✴✴✴✴✴✴

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

No comments:

Post a Comment