Sunday 29 May 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு பகுதி 15

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

         🕋பகுதி - 15


🚫கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை

✳யமன் நாட்டு அரசாட்சி இக்காலக்கட்டத்தில் ‘ஸபா’ என அழைக்கப்பட்டது. இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் ‘மக்ப்’ என்ற தங்களது புனைப் பெயரைத் தவிர்த்து விட்டார்கள்.

✳அதன் ஆட்சியாளர்களை ஸபா மன்னர்கள் என அழைக்கப்பட்டது. ‘ஸிர்வா’ என்ற நகருக்கு பதிலாக ‘மஃரப்’ என்ற நகரை தங்களது தலைநகராக்கிக் கொண்டனர். மஃரப் நகரத்தின் சிதைந்த கட்டடங்கள் ‘ஸன்ஆ’ நகரின் கிழக்கே 192 கிலோ மீட்டர் தொலைவில் இன்றும் காணப்படுகின்றன.

 🚫கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை

🏮இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘முதலாம் ஹிம்யரிய்யா அரசு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஏனெனில், ஹிம்யர் குலத்தவர் ஸபாவை வெற்றி கொண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

🏮முன்பு அந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ‘ஸபா’ அரசர்கள் மற்றும் ‘தூரைதான்’ அரசர்களென அழைக்கப்பட்டனர்.

✳இம்மன்னர்கள் ‘மஃரப்’க்கு பதிலாக ரைதான் என்பதை தங்களது தலைநகராக அமைத்துக் கொண்டனர் ரைதான் நகருக்கு ‘ளிஃபார்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

🏮அந்நகரின் சிதைவுகள் ‘யர்யம்’க்கு சமீபமாக மதூர் எனும் மலையின் அருகாமையில் காணப்படுகின்றன இக்காலத்தில்தான் ஸபா அரசுக்கு அழிவும் வீழ்ச்சியும் ஆரம்பமாயின. அவர்களின் வணிகங்களும் நசிந்தன.

‼அதற்குரிய காரணங்களாவன:

1) ‘நிப்த்’ இனத்தவர் ஹிஜாஸின் வடபகுதியில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர்.

2) ரோமர்கள் மிஸ்ர் (எகிப்து), ஷாம் (சிரியா) மற்றும் ஹிஜாஸின் வடபகுதியை ஒட்டியுள்ள நகரங்களில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி யமன் நாட்டு அரசர்களின் வியாபாரத்திற்கான கடல்மார்க்கத்தையும் அடைத்து விட்டனர்.

3) அவர்களது கோத்திரங்களுக்குள் சண்டை சச்சரவுகள் தோன்றின.

🏮ஆக, இம்மூன்று காரணங்களால் அவர்களது ஆட்சி வீழ்ச்சி கண்டது மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன் நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.


 ✳💥தொட.....ரும்....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 27 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment